ஜீவா நடிப்பில் சமீபத்தில் வெளியான 'கீ ' திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெற வில்லை என்றாலும் சுமாராக ஓடியது. இந்நிலையில் தற்போது ஜீவா நம்பி இருப்பது ஜிப்சி , மற்றும் கொரில்லா ஆகிய படங்களை தான்.

இந்நிலையில் தற்போது டான் சாண்டி இயக்கத்தில் உருவாகியிருக்கும் காமெடி த்ரில்லர் படமான 'கொரில்லா' படம் வரும் ஜூன் 21ஆம் தேதி வெளியாகவுள்ள உள்ளது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

 'நாம வாழ்ற வாழ்க்கையில நாம கேட்கிறது கிடைக்கலைன்னா, நம்மள தேடி வர்ற வாழ்க்கையை நாம் ஏன் தேர்ந்தெடுக்க கூடாது' என்ற வசனத்துடன் தொடங்குகிறது.

நடிகர் ஜீவாவுடன், ஒரு கொரில்லா குரங்கும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளது . முதல் முறையாக அர்ஜுன் ரெட்டி பட ஹீரோயின் ஷாலினி பாண்டே நடித்துள்ளார்.

பணம் சம்பாதிக்க கொரில்லா வேடம் போட்டு ஜீவா, சதீஷ், யோகிபாபு உள்ளிட்டோர் கொள்ளையடிக்கும் காட்சிகளை மிகவும் காமெடியாகவும், அதனால் என்ன விளைவுகள் ஏற்படுகிறது என்பதை திரில்லிங்காகவும் கூறி இருக்கிறார் இயக்குனர்.

இந்த படத்தின் ட்ரைலர் இதோ: