Thangam Thenarasu
(Search results - 2)politicsDec 5, 2019, 5:07 PM IST
தமிழ் (ஹிந்தி) வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன்..?? விளக்கம் கேட்கும் திமுக அமைச்சர்..!!
கட்சியில் அண்ணாவின் பெயரை வைத்துக்கொண்டுள்ள அதிமுக, தங்கள் ஆட்சியை காப்பாற்றிக்கொள்ள தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தை இந்தி வளர்ச்சி நிறுவனமாக மாற்றியுள்ளது வெட்கக் கேடானது. இதற்கு அமைச்சர் பாண்டியராஜன் உரிய பதில் அளிக்க வேண்டும் என திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தியுள்ளார்.
politicsNov 6, 2019, 5:24 PM IST
விஜயகாந்துக்கு துரோகம் செய்ததை மறந்துட்டீங்களா..!! எங்க தலைவரைப் பார்த்தா இப்படி பேசிப்புட்ட..? அதிமுக அமைச்சரை நாராசமா பேசி, நோண்டி நொங்கு எடுக்கும் திமுக முன்னாள் அமைச்சர்..!!
தமிழக அமைச்சரவையில் பொறுப்புள்ள துறையில் அமைச்சராக இருக்கக் கூடியவர்... அதற்கும் மேலாக மனிதவள மேம்பாட்டுத்துறை சார்ந்த தொழிலில் வருடத்திற்கு சில ஆயிரம் கோடிகளுக்கு தொழில் வர்த்தகம் செய்கின்றவர்... தமிழக அமைச்சரவையில் தானும் ஒட்டிக் கொண்டு இருக்கின்றோம் என்ற இறுமாப்பு தலைக்கேறி ஒரு கண்ணியமிக்க எதிர்க்கட்சித் தலைவரைப் பற்றி கொஞ்சம் கூட கூச்சநாச்சமில்லாமல், தான் வகிக்கின்ற அரசுப் பொறுப்பு மற்றும் தனி நபர் பொறுப்புக்களை எல்லாம் துச்சமென தூக்கியெறிந்து விட்டு.... அந்த தலைவரைப் பற்றி உண்மைக்குப் புறம்பான, எந்த ஆதாரமும் இல்லாத அபாண்டத்தை போகிற போக்கில் அள்ளி வீசி விட்டு.... அந்த தலைவரின் தியாக வரலாற்றில் சேற்றினை வாரி இறைக்கும் விதமாக, கழகத் தலைவர் தளபதி அவர்கள் அனுபவித்த மிசா கொடுமையினை கொச்சைப்படுத்தி பேட்டி அளித்திருக்கின்றார் தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன்.