Thangam Tennarasu  

(Search results - 5)
 • Thangam tennarasu and tamukkam ground

  politics15, Mar 2020, 6:52 PM IST

  மதுரை தமுக்கம் மைதானத்துக்கு ஆபத்து... பாரம்பரியமிக்க மைதானத்தில் கூட்ட அரங்கு... கொதிக்கும் தங்கம் தென்னரசு!

  எம்.ஜி.ஆருக்கு நாடோடி மன்னன் விழா, ஜெயலலிதாவுக்கு நாட்டிய நாடகம், கருணாநிதிக்கு டெசோ மாநாடு- தமுக்கத்தில் எழுதப்பட்ட வரலாறுகள் இன்றைக்கு ‘ஸ்மார்ட் சிட்டி’ காகத் தன்னை இழக்கிறது தமுக்கம். நான்கு வழிச்சாலைகளால் மரங்கள் மறைந்து போனது... நகரமயமாக்கலினால் இப்போது மைதானமே மறையப் போகிறதாம்... 

 • thangam thenarasu1

  politics21, Dec 2019, 10:20 PM IST

  அதிமுக அரசு மீது புத்தம் புதிய ஊழல் குற்றச்சாட்டு... மோப்பம் பிடித்து திமுக கிளப்பும் பகீர் புகார்!

  அந்த வரிசையில் இன்னும் ஒரு மெகா ஊழல் நடைபெற இருக்கிறது. ஐ.டி. துறையில் தமிழகத்தில் ஆப்டிகல் பைபர் கேபிள் புதைக்கும் திட்டம் 2,000 கோடி ரூபாய் மதிப்பில் தயாராகியிருக்கிறது. இந்தப் பணிக்கு டெண்டர் விடும் பணிகள் டிசம்பர் 11 அன்று ஐ.டி. துறை வெளியிட்டுள்ளது. இந்த டெண்டரில் 2 நிறுவனங்கள் பங்கேற்க அரசுக்கு அழுத்தம் கொடுத்துவருகின்றன. இதற்காக அரசின் உயர் பொறுப்பில் உள்ள ஒருவரை சந்தித்து, ஒப்பந்த விதிகளைத் தங்களுக்கு சாதகமாக மாற்றி தரும்படி அந்நிறுவனங்கள் கேட்டுள்ளன.
   

 • stalin tweetwrong message

  politics7, Dec 2019, 10:02 PM IST

  தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் இந்திக்கு தடை... கொல்லைப்புறமாக நுழைந்த இந்தியைத் தடுத்த மு.க. ஸ்டாலின் என திமுக பூரிப்பு!

  அரசின் இந்த முடிவை கழகத்தின் சார்பில் வரவேற்கும் அதே வேளையில், ஆளுங்கட்சி தவறு செய்யத் துணியும் போதெல்லாம் அதனைத் தட்டிக் கேட்கும் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சி அரசியிலைத்தான் திமுக இப்போதும் முன்னெடுத்திருக்கிறது என்பதையும் தமிழ்வளர்ச்சி துறை மாஃபா பாண்டியராஜனுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்'' என்று அறிக்கையில் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

 • Mafai Pandiyarajan

  politics5, Dec 2019, 7:05 AM IST

  சிபிஎஸ்இ பள்ளிகளை நடத்தும் திமுகவினர் இந்தியை ஏன் எதிர்க்கிறார்கள்..? மாஃபா பாண்டியராஜன் அதிரடி கேள்வி!

  எந்த மொழியையும் கற்றுக்கொள்வதில் தவறு ஏதேம் இல்லை. தமிழக இளைஞர்கள் அறியாமை என்ற இருளில் இருக்க வேண்டும் என்பதே திமுகவின் நோக்கம். இது நாள்வரை அரசின் வளர்ச்சி திட்டங்களுக்கு மட்டுமே திமுக முட்டுக்கட்டை போட்டு வந்தது. இப்போது தமிழாய்வு மாணவர்கள் வேற்று மொழி அறிவு பெற்று பொருளாதாரத்தில் வளர்ந்து விடக்கூடாது என்பதற்கும் முட்டுக்கட்டையைத் திமுக போடுகிறது. 

 • Thangam tennarasu and pandiyarajan

  politics3, Dec 2019, 8:50 PM IST

  உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் இந்தி பயிற்சியா..? மாஃபா பாண்டியராஜனை விளாசி தள்ளிய திமுக!

  ஏற்கனவே கொல்லைப்புறமாகவேனும் நுழையக் காத்திருக்கும் இந்தி மொழி ஆதிக்கத்திற்கு பட்டுக்கம்பளம் விரிப்பது மட்டுமல்ல கடைந்தெடுத்த துரோகச் செயல். அனுதினமும் - அணுப்பொழுதும் மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு ஆலவட்டம் சுற்றுவதையே தங்கள் ஒரே கடமையாகக் கொண்டு தமிழ்ப் பண்பாட்டைச் சீரழித்துக் கொண்டிருக்கும் எடப்பாடி பழனிச்சாமி அரசும் அதன் தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சரும், ஏற்கனவே தமிழ்ப்பண்பாட்டைச் சிதைத்துப் பாரதப் பண்பாடு எனப் பறைசாற்றித் திரியும் வேளையில் எரியும் நெருப்பில் எண்ணெய் விடுவது போல இந்த அறிவிப்பை வெளியிட்டிருப்பது தமிழ் உணர்வைக் கொச்சைப்படுத்தி புறந்தள்ளும் செயலன்றி வேறென்ன?