T.r.baalu
(Search results - 16)politicsNov 22, 2020, 10:05 PM IST
உதயநிதி ஸ்டாலினுக்கு கொடுமை நடக்கிறது... கொந்தளித்த டி.ஆர். பாலு..!
பாஜகவுக்கு ஒரு நியதி, திமுகவுக்கு ஒரு நியதியா என்று திமுக எம்.பி. டி.ஆர். பாலு கேள்வி எழுப்பியுள்ளார்.
politicsOct 27, 2020, 9:16 PM IST
7.5 சதவீத இட ஒதுக்கீடு பெற அதிரடி முயற்சி... அமித்ஷாவுக்கு அவரச கடிதம் போட்ட திமுக..!
மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடுக்கு ஒப்புதல் வழங்க தமிழக ஆளுநர் காலதாமதம் செய்துவரும் நிலையில், உள் துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு திமுக எம்.பி.க்கள் குழு தலைவர் டி.ஆர்.பாலு கடிதம் எழுதியுள்ளார்.
politicsOct 11, 2020, 8:09 PM IST
ஜெட் வேகத்தில் திமுகவின் தேர்தல் பணி... தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு அதிரடியாக அறிவிப்பு..!
வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கைக் குழுவை திமுக இன்று அதிரடியாக அறிவித்தது.
politicsSep 29, 2020, 8:14 PM IST
தேர்தலுக்கு பிறகு அதிமுக எனும் கட்சியே இருக்காது... டி.ஆர். பாலு தாறுமாறு கணிப்பு..!
வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பின்னர் அதிமுக எனும் கட்சியே இருக்காது என்று திமுக பொருளாளரும் எம்.பி.யுமான டி.ஆர். பாலு தெரிவித்துள்ளார்.
politicsJul 10, 2020, 8:44 PM IST
மீண்டும் சேதுசமுத்திர திட்டத்தை கையில் எடுத்த திமுக... சீனாவால் ஆபத்து என பிரதமர் மோடிக்கு டி.ஆர்.பாலு கடிதம்!
"2005-ல் தொடங்கப்பட்டு கிடப்பில் உள்ள சேது சமுத்திர திட்டத்தை மீண்டும் தொடங்க வேண்டும். இந்தியாவின் பாதுகாப்பை இந்திய பெருங்கடலில் அது உறுதி செய்யும். இத்திட்டத்தை முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பாராட்டி உள்ளார். எனவே, மற்ற காரணங்களையெல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு, நாட்டின் பாதுகாப்பை மட்டும் மனதில் கொண்டு சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்” என டி.ஆர். பாலு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
politicsJul 10, 2020, 8:03 AM IST
வெளிநாட்டு தப்லீக் ஜமாத் இஸ்லாமியர்கள் துன்புறுத்துல்.. பாஜகவை விஞ்சிய அதிமுக... டி.ஆர்.பாலு காட்டம்!
பிணைக்கான நிபந்தனைகளைச் சம்பந்தப்பட்டவர்கள் நிறைவேற்றிய பிறகும், மேற்கண்ட 31 வெளிநாட்டு இஸ்லாமியர்களையும் கொரோனா பரவும் புழல் சிறையில் அடைத்து வைத்திருப்பதும், பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் கூட இல்லாத அளவிற்கு இவர்களை அதிமுக அரசு துன்புறுத்தி வருவதும் சட்ட விரோதமானது. மத்திய அரசே இதுகுறித்து வகுத்துள்ள விதிமுறைகளுக்கு எதிரானது.
politicsJun 16, 2020, 8:48 PM IST
செயலாளரை மாற்றியவுடன் அமைச்சர் பதவியை விட்டு ஓடியிருக்கணும்.. விஜயபாஸ்கருக்கு எதிராக கொந்தளித்த டி.ஆர்.பாலு!
கொரோனா நோய்த் தொற்றின் தாக்கத்தை எடுத்துரைக்கும் வகையில் ஆக்கபூர்வமான கருத்துக்களைத் தெரிவித்த கழகத்தினரைப் பொய் வழக்குப் போட்டு கைது செய்து அரசியல் பண்ணியது அ.தி.மு.க ஆட்சிதான். ஏன், மருத்துவப் படுக்கை இல்லாமல் தவிக்கிறார்கள் என்று பதிவிட்டதற்காகச் செய்தி வாசிப்பாளர் வரதராஜன் மீது வழக்குப் போட்டு அவரை எச்சரித்தது இதே அமைச்சர் விஜயபாஸ்கர்தான்!
politicsMay 24, 2020, 8:45 AM IST
முன்ஜாமீன் வாங்குறது பனங்காட்டு நரியா, குள்ளநரியா.? டிஎன்ஏ-வில் தலித் விரோதம்.. ஹெச். ராஜா தாறுமாறு விமர்சனம்!
“இவர்கள் DNA தலித் விரோதமே. 1919 முதல் 1936 வரை நீதிக்கட்சி மந்திரி சபையில் ஒரு பட்டியல் சமுதாயத்தவர்கூட அமைச்சராகப்படவில்லை. அதேபோல் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தலித்துகளை அனுமதிக்க கூடாது என்றார் ஈ.வெ.ரா.” என்று ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
politicsMay 18, 2020, 9:47 PM IST
20 லட்சம் கோடி திட்டம் ஏழைகளுக்கானது அல்ல..இந்த ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது..டி.ஆர்.பாலு கணிப்பு!
நாட்டில் உள்ள சில பணக்காரர்களுக்கு உதவி செய்யயும் ஆட்சியாக மத்திய அரசு உள்ளது. 20 லட்சம் கோடி ரூபாய் என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தத்திட்டங்கள் ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பது போலவே உள்ளது. நாடாளுமன்றத்தைக் கூட்டாமல் ரூ. 20 லட்சம் கோடி திட்டங்களை மத்திய அரசு அறிவிக்க முடியும்?
politicsMay 16, 2020, 8:17 AM IST
ரொம்ப சீன் போடாதீங்க.. டி.ஆர்.பாலுவும் தயாநிதி மாறனும் மன்னிப்பு கேட்கணும்.. திமுகவை பங்கம் செய்த ஹெச்.ராஜா!
டி.ஆர்.பாலு மற்றும் தயாநிதிமாறன் எங்களை முதன்மைச் செயலாளர் மரியாதை குறைவாக நடத்தினார். அதற்கு நாங்கள் என்ன தாழ்த்தப்பட்டவர்களா என்றும் கூறியுள்ளனர். இது டி.ஆர்.பாலு மற்றும் மாறனின் ஆதிக்க ஆணவப் போக்கை எடுத்துக் காட்டுகிறது. ஈ.வெ.ரா காலம் முதல் தி.க, தி.மு.க பட்டியல் சமுதாய மக்களுக்கு எதிரான அமைப்புகளாகவே செயல்பட்டுள்ளது.
politicsMay 15, 2020, 9:28 PM IST
எடப்பாடியோடு சேர்ந்து கொழுப்பு கூடிவிட்டது.. சண்முகம் கணக்கு எடுக்கப்படுகிறது.. முரசொலியில் தாறுமாறு விமர்சனம்
“எதுகூடச் சேர்ந்து எதுவோ எதுவாகவோ ஆகிவிடும் என்பார்கள். அப்படித்தான் எடப்பாடி கூட்டத்தில் சேர்ந்து கொழுப்பு கூடிவிட்டது, தமிழ் நாட்டின் தலைக்கனச் செயலாளர் சண்முகத்துக்கு! திமுக ஆட்சியில் நிதித் துறைச் செயலாளராக இருந்தபோது, கையது கொண்டு மெய்யது பொத்தி வாழ்ந்த சண்முகம், மண்புழு அமைச்சரவைக்கு தலைமைச் செயலாளர் ஆனதும், தனது அழுக்கு நகத்தை வைத்து எதிர்க்கட்சியினரைப் பிறாண்டிப் பார்க்க ஆரம்பித்திருக்கிறார்.
politicsMay 15, 2020, 7:11 AM IST
இதெல்லாம் சண்முகம் பேசல... அவருக்கு உத்தரவு போடும் எடப்பாடியார் வாய்ஸ்... டி.ஆர்.பாலு திரும்பவும் அறிக்கை!
பத்திரிகைகளில் திரித்துப் பேசுவது வருத்தமளிக்கிறது. யார் உண்மையைப் பேசுகிறார்கள்? - யார் திரித்துப் பேசுகிறார்கள்? என்று மக்கள் புரிந்து கொள்வார்கள்” என தற்போது கோட்டை கொத்தளத்தில் விபத்தாக வந்து அமர்ந்திருக்கும் அரசியல்வாதிகள் போல் தமிழக தலைமைச் செயலாளர் கே.சண்முகம் ஐ.ஏ.எஸ், விளக்கம் என்ற நிலையை விடுத்து, “மறுப்பு” என்ற அளவைப் பின்பற்றி அறிக்கை விடுத்திருப்பது கண்டனத்திற்குரியது.
politicsMay 14, 2020, 8:38 PM IST
தலைமை செயலாளர் மன்னிப்பு கேட்கணும்.. இல்லையேல் நாடாளுமன்றம் மூலம் நடவடிக்கை.. கொந்தளிக்கும் டி.ஆர்.பாலு!
நாங்கள் மூத்த எம்.பிக்கள் மற்றும் மத்திய அரசின் முன்னாள் அமைச்சர்கள் என்பதை கருத்தில் கொள்ளாமல் மரியாதைக் குறைவாக தலைமை செயலாளர் சண்முகம் நடந்து கொண்டார். அதாவது, குறைந்தபட்ச வரவேற்பு முறைகளைக்கூட பின்பற்றவில்லை. இருப்பினும் நாங்கள் பொறுமையோடு ‘ஒன்றிணைவோம் வா’ செயல் திட்டம் பற்றி விளக்கினோம்.
politicsJan 27, 2020, 9:33 AM IST
டி.ஆர். பாலு கட்சி பதவி பறிப்பு ஏன்..? அன்பில் மகேஷுக்காக கே.என். நேருவுக்கு பதவி உயர்வு..? திமுகவில் திகுதிகு காட்சிகள்!
இன்னொரு திருப்பமாக அன்பில் மகேஷ் வகித்துவரும் இளைஞரணி இணைச் செயலாளர் பதவி டி.ஆர். பாலுவின் மகனும் மன்னார்குடி எம்.எல்.ஏ.வுமான டி.ஆர்.பி. ராஜாவுக்கு வழங்கப்படும் என்றும் கட்சியில் பேசப்படுகின்றன. இதன்காரணமாகவே முதன்மை செயலாளர் பதவியை கே.என். நேருவுக்கு டி.ஆர். பாலு விட்டுக்கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. கே.என். நேருவைத் தொடர்ந்து மாவட்ட செயலாளர்களாக உள்ள மூத்த நிர்வாகிகளுக்கு மாநில அளவிலான பதவிகளை வழங்கிவிட்டு, அங்கே புதிய மாவட்ட செயலாளார்களாக உதயநிதிக்கு தோதான இளைஞர்கள், மாவட்ட செயலாளார்களின் வாரிசுகளை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக திமுக கட்சி வட்டாரங்களில் பேசப்படுகின்றன.
politicsJan 26, 2020, 7:54 AM IST
திமுக முதன்மைச் செயலாளர் பதவி... டி.ஆர். பாலுவிடம் பதவி பறிப்பு... கே.என். நேருவுக்கு புதிய பதவி!
ஆற்காடு வீராசாமி, துரைமுருகன் ஆகியோர் இந்தப் பதவியில் ஏற்கனவே இருந்துள்ளனர். தற்போது டி.ஆர். பாலு வகித்து வந்த இந்தப் பதவியை அவரிடமிருந்து பறித்து கே.என். நேருவுக்கு திமுக மேலிடம் வழங்கியுள்ளது. இந்த அறிவிப்பால் கே.என்.நேரு ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.