Suresh Kamatchi
(Search results - 32)cinema13, Nov 2019, 12:29 PM IST
’என் படத்தை கருணைக் கொலை செய்துவிட்டார்கள்’... கொந்தளிக்கும் தயாரிப்பாளர்...
பத்திரிகையாளர்களும் படம் பார்த்தவர்களும் கொண்டாடித் தீர்க்கும் ஒரு படத்திற்கு மக்கள் திரையரங்கிற்கு வரும் நேரங்களில் காட்சிகள் கிடைக்காதது என் படத்திற்கு எவ்வளவு பெரிய கொடுமை இழைக்கப்பட்டிருக்கிறது பாருங்கள்.முதலில் திரையரங்குகள் கிடைக்கவில்லை. இப்போ கிடைத்தும் பயனில்லை.குடும்பங்கள் திரையரங்கிற்கு வந்து படம் பார்க்கும் மாலை வேளைகளில் காட்சிகள் தராமல் விட்டது மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்துகிறது.
cinema8, Nov 2019, 10:52 AM IST
காவல்துறை உயர் அதிகாரிகளின் மிருகத் தோலை உரிக்கும் ‘மிக மிக அவசரம்’...விமர்சனம்...
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் இயக்கத்தில் பிரியங்கா என்கிற ஒரு பெண் கான்ஸ்டபிளின் ஒரு நாள் பகல் பொழுதை, அவர் தனது மூத்த அதிகாரி ஒருவரால் பாலியல் தொந்தரவுக்கு ஆளாவதை சொல்கிற படம் தான் ‘மி.மி.அ’.இன்னொரு பக்கம் மிக மெல்லிய குரலில் ஈழத்தமிழர்களைக் கொன்று குவிக்கும் சிங்களத் தலைவர்களுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கும் அரசுகள், இங்கே வாழும் ஈழத்தமிழர்களை குற்றவாளியாகப் பார்க்கும் பார்வையை எளிய மனிதர்கள் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார்.
cinema7, Nov 2019, 12:19 PM IST
’மிக மிக அவசரம்’பட நாயகி பிரியங்காவை நேரில் சந்தித்த தமிழக அமைச்சர்...
சிம்புவை வைத்து ‘மாநாடு’படத்தைத் தயாரிக்கவுள்ள சுரேஷ் காமாட்சி தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் தயாராகியுள்ள ‘மிக மிக அவசரம்’படம் நாளை தமிழகம் முழுவதும் ரிலீஸாகவுள்ளது. இப்படத்தில் பிரியங்கா பெண் கான்ஸ்டபிளாக நடித்துள்ளார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று மாலை நடைபெற உள்ள நிலையில் அச்சந்திப்பில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூவும், விஜய் பாஸ்கரும் கலந்துகொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
cinema6, Nov 2019, 10:33 AM IST
ஐயப்பன் தரிசனத்துக்கு திடீர் மாலை போட்ட பெரியார் பேரன் சிம்பு...
அவரால் பாதிக்கப்பட்ட மற்ற தயாரிப்பாளர்களும் ஒன்று சேர்ந்து அவரை புதுபடங்கள் எதிலும் கமிட் ஆக விடாமல் முடக்கும் வேலைகளில் ஈடுபட்டனர். தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்கள் குவிந்த வண்ணம் இருந்தன. அவைகளுக்கு பதில் சொல்ல டி.ஆர். விரும்பாத சூழலில் ஒரு சில கூட்டங்களில் சிம்புவின் தாயார் உஷா ராஜேந்தர் கலந்துகொண்டார்.
cinema21, Oct 2019, 9:56 AM IST
மகன் சிம்புவுக்காக பஞ்சாயத்தில் பங்கெடுத்த உஷா ராஜேந்தர்... மறுபிறவி எடுக்கும் ’மாநாடு’
இரு மாதங்களுக்கு முன்பு டிராப் செய்யப்பட்ட ‘மாநாடு’படத்துக்குத் தந்த அட்வான்ஸை சிம்பு திருப்பித் தரவேண்டும் அல்லது உடனடியாகப் படப்பிடிப்பில் கலந்துகொள்ளவேண்டும் என்றும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்திருந்ததாகத் தெரிகிறது. இது தொடர்பான பஞ்சாயத்துக்கு சிம்புவின் சார்பாக அவரது தந்தை டி.ஆர்.அழைக்கப்பட்டிருந்தார்.
cinema10, Oct 2019, 12:05 PM IST
’மிக மிக அவசரம்’ ரிலீஸ் தேதியில் மாற்றம்...பின்னணியில் தனுஷ்...
பெண் காவலர்களுக்கு மூத்த பதவியில் உள்ள அதிகாரிகளால் நடக்கும் அட்டூழியங்களை கதைகளமாகக் கொண்டு உருவாகியுள்ள படம் ‘மிக மிக அவசரம்’. இப்படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியே இயக்கியுள்ளார். படத்தின் மையப்பாத்திரத்தில் பிரியங்கா நடிக்க நாம் தமிழர் சீமான் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். நாளை வெள்ளியன்று ரிலீஸாவதாக தடபுடல் விளம்பரம் செய்யப்பட்ட இப்படம் தனுஷின் அசுரன் படம் நான்ஸ்டாப் அசுர வசூல் புரிவதாலும் கூடவே நாளை மேலும் 3 படங்கள் ரிலீஸாவதாலும் ஒருவாரம் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
cinema9, Oct 2019, 2:35 PM IST
கைவசமிருந்த ஒரே ஒரு படத்தையும் பறிகொடுத்த சிம்பு...அடுத்த வடிவேலு ஆன பரிதாபம்...
சர்ச்சைகளின் தலைமையிடமான சிம்புவுக்கு ‘மாநாடு’பட டிராப்புக்குப் பிறகு சோதனைகள் அதிகம் நிகழ ஆரம்பித்தன. அவரால் பாதிக்கப்பட்ட ‘ஏ ஏ ஏ’படத்தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் துவங்கி அனைத்து பாதிக்கப்பட்டவர்களும் ஒன்று சேர்ந்தனர். அதை ஒட்டி பிரச்சினைகளை ஆறப்போட தம்பி சிம்பு இரு மாதங்கள் தாய்லாந்து போய் ஜாய்லாந்து செய்துவிட்டுத் திரும்பினார்.
cinema2, Oct 2019, 5:16 PM IST
’மாநாடு’படம் குறித்து மாபெரும் அதிர்ச்சி அளிக்கக் காத்திருக்கும் சிம்பு...
ஏறத்தாழ தலைமறைவாகவே ஆகிப்போன சிம்பு, நான்கு தினங்களுக்கு முன்பு சனியன்று புதிய கெட்டப்பில் சென்னைக்குத் திரும்பினார். இவ்வருகைக்குப் பின் அவர் ஏற்கனவே வீம்புக்கு அறிவித்த ‘மகா மாநாடு’படத்தைத் தொடங்கவிருக்கிறார். ரசிகர்களை ஒன்று திரட்டி மன்றத்தை வலுப்படுத்தி அரசியலில் குதிக்கப்போகிறார் என்றெல்லாம் செய்திகள் வந்தன.
cinema28, Sep 2019, 5:46 PM IST
’இனி திரைப்படம் வேண்டாம்...உன் புகைப்படம் போதும்’...சிம்பு ரசிகாஸ் சிலிர்ப்பு...
லண்டனுக்குப் போய் உடலைக் குறைக்கிறார். இதோ படப்பிடிப்பு...அதோ படப்பிடிப்பு என்று சவ்வாக இழுத்த ‘மாநாடு’படமும் தயாரிப்பாளரும் இயக்குநரும் பொறுமை இழந்ததால் சிம்பு கையை விட்டுப்போனது. நடுவில் கவுரவ வேடத்தில் நடித்த ஒரு கன்னட ரீமேக் பட ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப்போன சிம்பு தாய்லாந்தில் தஞ்சமடைந்திருப்பதாக தகவல் கிடைக்க ஒரு வழியாக நேற்றுதான் சென்னை திரும்பியிருக்கிறார்.
cinema20, Sep 2019, 6:20 PM IST
சென்னைக்குத் திரும்புகிறார் பாங்காங்கில் பதுங்கியிருந்த சிம்பு...என்ன நடக்கப்போகுது தெரியுமா?...
அந்தப்பட்டியலில் கடைசியாக சிக்கிய சூர்யாவின் பினாமி ஞானவேல் ராஜாவும் ‘மாநாடு’படத்தை துணிந்து டிராப் செய்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியும் சிம்புவால் வாழ்விழந்தோர் சங்கம் ஒன்றைத் துவக்க முயலவே அதை மோப்பம் பிடித்த சிம்பு வெளிநாடுகளுக்கு உல்லாசப்பயணம் என்ற பெயரில் விஜய் மல்லையா போலவே தப்பி ஓடினார்.
cinema14, Sep 2019, 9:38 AM IST
வாடி மாப்ள வி ஆர் வெயிட்டிங்....இயக்குநர் அவதாரமெடுத்த ப்ளூ சட்டை மாறனுக்காக வெறிகொண்டு காத்திருக்கும் ரசிகர்கள்...
பாட்டு எழுதி பேர் வாங்கும் புலவர்களை விட அதில் குற்றம் கண்டு பிடித்துப் பேர் வாங்கும் புலவர்கள் அதிக பிரபல்யமாக இருப்பார்கள் என்கிற நிலவரப்படி, யூடுபில் திரைப்படங்களை தனது அதிரடி விமர்சனங்களால் கிழித்துத் தொங்கவிட்ட ப்ளூ சட்டை மாறன் இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கிறார். அச்செய்திகளுக்குக் கீழே அவரது மரியாதைக்குரிய எதிரிகள்...’வாடி மாப்ள, உன் படத்துக்காக வெயிட்டிங்’என்று கமெண்டுகள் அடித்து வருகிறார்கள்.
cinema11, Sep 2019, 4:34 PM IST
தொடரும் தாய்லாந்து தலைமறைவு...சென்னைக்குத் திரும்ப விரும்பாத நடிகர் சிம்பு...
இந்த செய்திக்காக சிவகாசி வரை போய் ஒரு டென் தவுசண்ட் வாலா வெடி வெடித்தால் கூட தகும். தனக்கு எதிராக பஞ்சாயத்து கிளப்பிய அத்தனை தயாரிப்பாளர்களும் ஒன்றுகூடி ‘காத்திருப்பதால்’ சென்னைக்குத் திரும்புவதற்கு அஞ்சியபடி தாய்லாந்திலேயே தலைமறைவாக இருக்கிறாராம் நடிகர் சிம்பு.
cinema2, Sep 2019, 1:42 PM IST
ரொம்ப ரொம்ப லேட்டாகிக்கொண்டிருக்கும் ‘மிக மிக அவசரம்’...படம் தாமதமாகும் ரகசியத்தை வெளியிட்ட தயாரிப்பாளர்...
சிம்பு, வெங்கட் பிரபு காம்பினேஷனில் ‘மாநாடு’படத்தைத் தயாரிப்பதாக இருந்த சுரேஷ் காமாட்சி முதல்முறையாக டைரக்டர் அவதாரம் எடுத்திருக்கும் படம் ‘மிக மிக அவசரம்’.அப்படியே படத்தின் டைட்டிலுக்கு நேர் எதிராக, இப்படம் தயாராகி கிட்டத்தட்ட ஓராண்டாகியும் இன்னும் திரைக்கு வந்தபாடில்லை. அந்த தாமதத்திற்கு என்ன காரணம் என்பதை தனது முகநூல் பக்கத்தில் சற்றுமுன்னர் பதிவிட்டிருக்கிறார் அவர்.
cinema15, Aug 2019, 5:44 PM IST
’இப்பிடியாங்க ட்விட் போடுவாங்க?’...சிம்பு ரசிகர்களை சூடாக்கிய இயக்குநர் வெங்கட் பிரபு...
சிம்பு, வெங்கட் பிரபு கூட்டணியின் ‘மாநாடு’படம் டிராப்பாகி, அடுத்து ஸோலோ சிம்புவின் ‘மகா மாநாடு’குறித்த கூவல்கள் அதிகரித்து வரும் நிலையில் தனது முன்னாள் ஹீரோவுக்கு ட்விட்டர் பக்கத்தில் ஒரு செமத்தியான அட்வைஸ் செய்துள்ளார் வெங்கட் பிரபு.
cinema9, Aug 2019, 11:04 AM IST
’முதல் படத்தையே ரிலீஸ் பண்ணமுடியலை...உங்களுக்கு எதுக்கு சிம்பு கால்ஷீட்?’...’மாநாடு’ தயாரிப்பாளரை மல்லுக்கு இழுக்கும் உஷா ராஜேந்தர்...
வம்புத்தம்பி சிம்புவுக்காக ஒருவருடத்துக்கும் மேல் காத்திருந்து நொந்துபோன நிலையில் அப்படத்திலிருந்து சிம்பு நீக்கப்பட்டுவிட்டார் என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி நிம்மதிப் பெருமூச்சு விட்ட நிலையில் அவரை ‘நீங்க என்ன பெரிய ஏ.வி.எம்மா, லைகாவா? முதல் படத்தையே ரிலீஸ் பண்ண முடியாமா முழிக்கிறவர்தான??என்று மகனுக்காக வக்காலத்துக்கு வாங்கியிருக்கிறார் அவரது மம்மி உஷா ராஜேந்தர்.