Review  

(Search results - 195)
 • aruvam

  cinema11, Oct 2019, 10:52 AM IST

  விமர்சனம் ‘அருவம்’...அன்னை தெரசா ஆக ஆசைப்படும் கேதரின் தெரசா செய்யும் 5 கொலைகள்...

  சாலையில் எறும்புகள் ஊர்ந்துபோனால் கூட அவற்றிற்கு வழிவிட்டு நிற்கும் அன்னை தெரசாவின் மறு உருவம் போல அன்பு, கருணை, சமூக சேவை என வாழ்ந்து வரும் பள்ளி ஆசிரியை ஜோதி என்ற பாத்திரத்தில் கேதரின். அவரின் வித்தியாசமான கேரக்டரை தொடர்ந்து கவனிக்கும் சித்தார்த் சட்டென காதலில் விழுகிறார். ஜோஸியக்காரரிடமிருந்து கிளியை சுதந்திரமாக பறக்கவிடும் மகா மாடர்ன் காட்சிகளையெல்லாம் வைத்திருக்கிறார் இயக்குநர் சாய் சேகர்.

 • 100% kadhal

  cinema4, Oct 2019, 4:49 PM IST

  ’100% காதல்’ விமர்சனம்...50% சோதனை 50% வேதனை 100% ஷாலினி பாண்டேவின் இடுப்பு...

  கதை? எதிலும் நம்பர் ஒன்னாக இருக்கவேண்டும் என்று நினைக்கிற நாயகன் ஜீ.வி.பிரகாஷ் படிப்பிலும் நம்பர் ஒன்னாகவே இருக்கிறார். அவருடைய அத்தைபெண் ஷாலினி பாண்டே, ஜீ.வி.பிரகாஷ் வீட்டிலேயே தங்கிப் படிக்கிறார். கற்றுக்கொடுப்பவர்களிடமே வித்தையைக் காட்டுவார்களே அதுபோல் படிப்பில் ஜீ.வியையே மிஞ்சுகிறார். அடுத்து கதையில் ஒரு வில்லன் தேவைப்படுவதால்  அவர்கள் இருவரையும் தாண்டி அதே கல்லூரியில் படிக்கும் யுவன்மயில்சாமி  முதல்நிலை எடுக்கிறார்.
   

 • Asuran Review
  Video Icon

  cinema4, Oct 2019, 4:06 PM IST

  Movie Review: அசுர வேகத்தில் அசுரன்..! படம் எப்படி இருக்கு..?

  Movie Review: அசுர வேகத்தில் அசுரன்..! படம் எப்படி இருக்கு..?

 • asuran

  cinema4, Oct 2019, 1:15 PM IST

  ’அசுரன்’விமர்சனம்...’கொரியன் டிவிடி, திருட்டுக்கதைப் பார்ட்டிங்கள்லாம் கொஞ்சம் இங்க வாங்கய்யா...

  3 ஏக்கர் நிலத்தை எழுதித்தராத ஒரு பகைக்காக அவரது மூத்த மகன் அநியாயமாகக் கொல்லப்பட, அண்ணன் கொலைக்காக பண்ணையாரை தம்பி[கென்] போட்டுத் தள்ளுகிறார். பதிலுக்கு சிவசாமியின் குடும்பத்தையே போட்டுத்தள்ள பண்ணையார் வகையறா கொலைவெறியோடு அலைய தனது குடும்பத்தைக் காப்பாற்றிக்கொள்ள காட்டுக்குள் பதுங்கும் அவர் நீதிமன்றத்தில் சரணடைய நினைக்கிறார். அது அவ்வளவு சுலபமல்ல... என்று போகிறது கதை.

 • రేటింగ్: 3/5

  cinema3, Oct 2019, 10:54 AM IST

  ஷைரா நரசிம்ம ரெட்டி....விமர்சனம்... வீரபாண்டிய கட்டபொம்மன் 2019’...விஜய் சேதுபதிக்கு நடந்த மோசடி...

  1847 ஆம் ஆண்டு ஆந்திராவின் குட்டலூருவில் ஆங்கிலேயப் படையை எதிர்த்து நின்று போரிட்டவர் உய்யலவாடா நரசிம்ம ரெட்டி.சுதந்திரப் போராட்டத்துக்கான தீயை வளர்த்த பெரு நெருப்பு என்று வரலாறு அவரைக் குறிப்பிடுகிறதாம். அப்படிப்பட்ட நரசிம்ம ரெட்டியை ஆங்கிலேயப் படை கைது செய்து பொதுமக்கள் மத்தியில் தூக்கிலிட்டது. அத்தோடு நில்லாமல் அவரது தலையை சுமார் 30 வருடங்கள் வரை அகற்றாமல் கோட்டையின் முகப்பில் வைத்திருந்தது. போராட்டத்தில் குதிக்கும் மக்களை அச்சுறுத்துவதற்காகவே ஆங்கிலேயர்கள் இப்படிச் செய்தனர்.
   

 • sivakarthikeyan

  cinema27, Sep 2019, 3:28 PM IST

  ’நம்ம வீட்டு பிள்ளை’விமர்சனம்...தப்பிப் பிழைத்தாரா சிவகார்த்திகேயன்?...

  அப்படியான நிலையில் தன்னுடைய தங்கையை நல்ல ஒரு மாப்பிள்ளைக்கு திருமணம் செய்து வைத்து தனது கெத்தைத் தக்கவைக்கவேண்டும் என்று நினைக்கிறார். கதை நகரவேண்டுமே அதற்காக அவர்  ஊர் முழுவதும் மாப்பிள்ளை தேடியும்  ஐஸ்வர்யாவுக்கு மூன்று முடிச்சுகள் போட யாரும் முன்வரவில்லை. இறுதியில் நட்டி என்கிற நட்ராஜ், சிவகார்த்திகேயனுடன் உள்ள ஒரு  முன்பகையை மனதில் வைத்து கொண்டு திருமணம் செய்து கொண்டு பழி வாங்க தொடங்குகிறார்.

 • kaappaan

  cinema20, Sep 2019, 5:17 PM IST

  விமர்சனம் ‘காப்பான்’...சூர்யாவை அர்ஜூன், விஜயகாந்தாக மாற்றிய கே.வி.ஆனந்த்...

  பிரதமர் பதவியில் இருந்தாலே அவருக்கு ஆபத்துகள் வரத்தானே செய்யும். அப்படி ஆபத்துகள் வரும்போது ஹீரோதானே காப்பாற்ற வேண்டும். எல்லாம் நம் விருப்பபடியே நடக்கிறது. ஆனால் ரெண்டரை மணி நேரத்துக்கு ஜல்லி அடிக்கவேண்டுமே. அதனால் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் பிரதமர் மோகன்லால் கொல்லப்பட, அவரது மகன் ஆர்யா நாட்டின் பிரதமராகிறார். அந்த ஆர்யாவுக்கும் தீவிரவாதிகளால் ஆபத்து இருக்க, அவரது மனைவி ஆயிஷாவைத் தீவிரமாகக் காதலிக்கும் சூர்யா தீவிரவாதிகளைக் கொன்று நாட்டின் நலன் காக்கிறார்.

 • kaappaan

  cinema20, Sep 2019, 1:24 PM IST

  கே.வி.ஆனந்தின் ‘காப்பான்’...சூர்யாவின் மார்க்கெட்டைக் காப்பானா இல்லை தோப்பானா? FDFS கமெண்டுகள்...

  தொடர்ந்து தோல்விப்படங்கள் கொடுத்த கே.வி.ஆனந்த், சூர்யா காம்பினேஷன் என்றாலும் கூட இப்படத்துக்கு ஒரு எதிர்பார்ப்பு இருக்கவே செய்தது. ஆனால் ஆர்வக்கோளாறின் உச்சமாக அரசியல்,நாட்டுப்பற்று, பிரதமர், பாதுகாப்பு, பாகிஸ்தான்,காஷ்மீர்,சதி ,சூழ்ச்சி, காதல்,மோதல்,விவசாயம் ,கார்ப்பரேட், ஸ்டெர்லைட்டு,காவேரி பிரச்சினை என்று ஒரு டஜன் பஞ்சாயத்துக்களை ஒரே படத்தில் சொல்லத்துடித்திருப்பதால் படம் படு திகட்டலாக இருக்கிறது என்பதே முதல் நாள் முதல் காட்சி பார்த்தவர்கள் பெரும்பாலானோரின் கமெண்டாக இருக்கிறது.

 • bigboss

  cinema19, Sep 2019, 11:32 AM IST

  லாஸ்லியாவுக்காக கட்டி உருளக் காத்திருக்கும் சாண்டியும் கவினும்...பிக்பாஸில் அடிதடி ஆரம்பம்...வீடியோ...

  இன்னும் சரியாக இரண்டே வாரங்களில் நிகழ்ச்சி நிறைவுபெற உள்ள நிலையில், பிக் பாஸ் வீட்டில் தற்போது  கொஞ்சம் கடுமையான டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வருகிறது. இதில் சிறப்பாக செயல்படுபவர்களில் ஒருவரை நேரடியாக இறுதிப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட இருப்பதால், போட்டியாளர்களுக்குள் முன்பை விட  கடுமையாக மோதி வருகிறார்கள்.இந்த நிலையில், 87 வது நாளான இன்று கொடுக்கப்பட்ட டாஸ்க் ஒன்றில், லொஸ்லியாவை சாண்டி தள்ளிவிட, அவர் தடுமாறி கீழே விழுகிறார். இதைப்பார்த்து சாண்டி மீது கவின் கோபப்படுகிறார்.

 • oththacheruppu

  cinema16, Sep 2019, 10:30 AM IST

  பார்த்திபனின் ‘ஒத்தச்செருப்பு’...ரிலீஸுக்கு முன்பே பிரபல இயக்குநர் எழுதிய விமர்சனம்...

  பரிட்சார்த்த முறையில் தான் மட்டுமே நடித்து இயக்கியுள்ள பார்த்திபனின் ‘ஒத்தச்செருப்பு’படம் வரும் 20ம் தேதி வெள்ளியன்று ரிலீஸாகவுள்ள நிலையில், அப்படத்தை முன்கூட்டியே பிரிவியூ தியேட்டரில் பார்த்த இயக்குநர் வசந்தபாலன் ’பல உயரிய விருதுகள் உங்கள் வாசல் தேடி வரட்டும் சார்’ என்று தனது முகநூல் பக்கத்தில் எழுதியுள்ளார்.

 • sivappu manjal pachai

  cinema6, Sep 2019, 5:21 PM IST

  ’சிவப்பு மஞ்சள் பச்சை’விமர்சனம்...’பிச்சைக்காரன்’வெற்றியைத் தக்கவைத்தாரா டைரக்டர் சசி?...

  ‘98ல் ‘சொல்லாமலே’படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான சசி இந்த 21 ஆண்டுகளில் வெறுமனே எட்டுப் படங்கள் மட்டுமே இயக்கியிருக்கிறார் என்று சொன்னால் ஆச்சரியமாக இருக்கும்.அப்படிப்பட்ட திறமையான சோம்பேறி ‘பிச்சைக்காரன்’வெற்றிப்படத்துக்குப் பின்னர் இயக்கியிருக்கும் படம் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’.தலைப்பை வைத்தே என்ன மாதிரியான கதை என்று சொல்லிவிடமுடியும்.
   

 • magamuni

  cinema5, Sep 2019, 3:15 PM IST

  ’மகாமுனி’விமர்சனம்...உலகத்தரத்தில் ஒரு தமிழ் சினிமாவா இது?

  'மவுனகுரு’என்கிற அபாரமான படம் கொடுத்த, அடுத்த படம் கொடுக்க எட்டு வருட இடைவெளி எடுத்துக்கொண்ட இயக்குநர் சாந்தகுமாரின் இரண்டாவது படம் என்பதால் ‘மகா முனி’படத்துக்கு இண்டஸ்ட்ரி வட்டாரத்தில் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருந்ததென்னவோ உண்மை. அந்த எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்தாரா அவர்? முதலில் படத்தின் கதையைப் பார்ப்போம்.
   

 • Sahoo

  Review31, Aug 2019, 2:37 PM IST

  சேனாதிபதியாக மாறி எதிரிகளை அழித்து போரை வென்று சாம்ராஜ்ஜியத்தை கைப்பற்றும் ராஜா கதை... சாஹோ விமர்சனம்

  ராஜாவே சேனாதிபதியாக மாறி போர்க்களம் புக வேண்டியிருக்கும். எதிரிகளை அழித்து போரை வென்று மீண்டும் ராஜாவாக பொறுப்பேற்றுக் கொள்ளும் பழைய ராஜா கதையில் அண்டர்வேர்ல்ட் கிரிமினல்ஸ், அண்டர்கவர் காப், பிரமாண்ட ஆக்ஷன் காட்சிகள், மாஸ் ஹீரோயிசம், ரொமான்ஸ்  என தெறிக்கவிட்டுள்ளனர்.

 • kennedy club

  cinema24, Aug 2019, 4:06 PM IST

  விமர்சனம் ‘கென்னடி கிளப்’...முதல் படத்தை விட்டு இன்னும் வெளியே வர மறுக்கும் சுசீந்திரன்...

  சில இயக்குநர்கள் முதல் பட செண்டிமெண்டிலிருந்து வெளியே வரமுடியாமல் காலாகாலத்துக்கும் தவித்துக்கொண்டிருப்பார்கள். இந்த ’கென்னடி கபடி கிளப்’ம் கூட சுசீந்திரன் முதல் படமான ‘வெண்ணிலா கபடிக் குழு’வை விட்டு இன்னும் வெளியே வரமுடியாத பிர்ச்சினைதான். முதல் காதலில் உள்ள நேர்மை அடுத்ததுகளில் இருப்பதில்லை என்பதற்கு இப்படமும் ஒரு உதாரணம்.

 • bagrith

  cinema23, Aug 2019, 5:57 PM IST

  விமர்சனம் ‘பக்ரீத்’...நடிகர் விக்ராந்துக்கு வாராது வந்த மாமணி...

  5 பாட்டு, 6 ஃபைட்டு, ஏழெட்டு காதல்,காமெடிக் காட்சிகள் என்று ரெகுலர் ஃபார்முலாவுக்குள் தமிழ்சினிமா மாட்டித் தவித்துக்கொண்டிருக்கும் நிலையில் எப்போதாவது ஆறுதலாக சில படங்கள் வருமே நிச்சயமாக அந்த வகையறாக்களில் ஒன்றுதான் இந்த ‘பக்ரீத்’.