Narkali
(Search results - 5)cinemaDec 6, 2019, 11:16 AM IST
ரெடி.. டேக்.. ஆக்ஷன்! 'நாற்காலி'-யை பிடிப்பதற்கு ஓட்டமெடுத்த அமீர்! தெரியுமா? ஆட்டத்தை தொடங்கி வைத்ததே தனுஷ் இயக்குனர்கள்தான்!
தமிழ் சினிமா கொண்டாடும் இயக்குநர்களில் ஒருவர் அமீர். மௌனம் பேசியதே படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி, ராம், பருத்திவீரன் ஆகிய தரமான படங்கள் மூலம் ஒட்டுமொத்த திரையுலகையும் திரும்பி பார்க்கவைத்தவர்.
cinemaDec 3, 2019, 11:43 AM IST
அமீரை விட்டு வைக்காத "நாற்காலி" ஆசை... அரசியல்வாதியாக களம் இறங்கி பட்டையை கிளப்ப திட்டம்... சோசியல் மீடியாவில் வைரலாகும் போஸ்டர்...!
'முகவரி', 'காதல் சடுகுடு', 'நேபாளி' உள்ளிட்ட படங்களை இயக்கிய வி.இசட் துரை புதிதாக இயக்கி வரும் படத்தில் அமீர் நடிக்க உள்ளார். "நாற்காலி" என பெயரிடப்பட்டுள்ள அந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
cinemaJan 16, 2019, 5:38 PM IST
’ப்ளீஸ் ரஜினி படம் பத்தின வதந்திகளை ஸ்டாப் பண்ணுங்க’ ...எரிச்சலில் ஏ.ஆர்.முருகதாஸ்...
ரஜினியை வைத்து அடுத்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் படத்துக்கு ‘நாற்காலி’ என்று பெயர் வைத்து, அதன் கத, திரைக்தையை எழுதி, ரஜினி அதில் போலீஸ் கமிஷனராக நடிக்கிறார் என்பது உட்பட ஏகப்பட்ட தகவல்கள் நிலவி வரும் நிலையில், வதந்தியாளர்களின் அடிமடியிலேயே கைவைப்பது போல் என் அடுத்த படத்தின் பெயர் நாற்காலி இல்லை என்று ட்விட் போட்டு அனைவரையும் காலி செய்திருக்கிறார்.
cinemaJan 16, 2019, 10:01 AM IST
ஏ.ஆர்.முருகதாஸ்-ரஜினி படத்துக்கு மறுபடியும் இவரேதான் ஹீரோயினா?...
’சர்கார்’ படத்தில் டம்மி கேரக்டர் தந்ததை சரிக்கட்டும் வகையில் தான் ரஜினியுடன் இணையும் படத்துக்கும் கீர்த்தி சுரேஷையே ஹீரோயினாக்கும் முயற்சியில் ஏ.ஆர்.முருகதாஸ் ஈட்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.cinemaJan 14, 2019, 5:41 PM IST
வெளியானது நாற்காலி ஃபர்ஸ்ட் லுக்..? அஜித்துடன் மோதிய ரஜினியின் தீபாவளி டார்கெட் விஜய்!
பொங்கலுக்கு திகட்ட திகட்ட அஜித்தின் விஸ்வாசம் படத்துடன் மோதிய ரஜினி, தீபாவளிக்கு விஜயுடன் மோதத் தயாராகி விட்டார்.
பேட்ட படத்தை அடுத்து ரஜினி ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நாற்காலி எனப்பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப்படத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூகவலைதளங்கை; வைரலாகி வருகிறது. அதில் 'உங்கள் ஓட்டே உங்கள் குரல்’ என்கிற வசனம் இடம்பெற்றுள்ளது. இந்தப்படத்துக்கு படத்துக்கு அனிருத் இசையமைக்க உள்ளார்.
இந்தப்படத்திற்காக ரஜினிகாந்த் 120 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார். ஜனவரி மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாகவும் தகவல்கள் கசிகின்றன. படக்குழுவினரிடமிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில் இந்த போஸ்டர் ரசிகர்களால் உருவாக்கப்பட்டதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்நிலையில் தனது பேட்ட படம் மூலம் பொங்கலுக்கு அஜித் படமான விஸ்வாசத்துடன் மோதினார்.
அடுத்து தீபாவளிக்கு நாற்காலி படத்தை ரிலீஸ் செய்யத்திட்டமிடப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தீபாவளிக்கு அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனால் தீபாவளிக்கு விஜய்- ரஜினி படங்கள் நேரடியாக மோத உள்ளது. ஒருவேளை நேரம் நெருங்கி வரும்போது எந்தப்படம் பின் வாங்கும் என்பதை பொருத்திருந்தே பார்க்க வேண்டும்.