Mika Mika Avasaram  

(Search results - 10)
 • mika mika avasaram movie director interview

  cinemaNov 13, 2019, 12:29 PM IST

  ’என் படத்தை கருணைக் கொலை செய்துவிட்டார்கள்’... கொந்தளிக்கும் தயாரிப்பாளர்...

  பத்திரிகையாளர்களும் படம் பார்த்தவர்களும் கொண்டாடித் தீர்க்கும் ஒரு படத்திற்கு மக்கள் திரையரங்கிற்கு வரும் நேரங்களில் காட்சிகள் கிடைக்காதது என் படத்திற்கு எவ்வளவு பெரிய கொடுமை இழைக்கப்பட்டிருக்கிறது பாருங்கள்.முதலில் திரையரங்குகள் கிடைக்கவில்லை. இப்போ கிடைத்தும் பயனில்லை.குடும்பங்கள் திரையரங்கிற்கு வந்து படம் பார்க்கும் மாலை வேளைகளில் காட்சிகள் தராமல் விட்டது மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்துகிறது.

 • mika mika avasaram movie review

  cinemaNov 8, 2019, 10:52 AM IST

  காவல்துறை உயர் அதிகாரிகளின் மிருகத் தோலை உரிக்கும் ‘மிக மிக அவசரம்’...விமர்சனம்...

  தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் இயக்கத்தில் பிரியங்கா என்கிற ஒரு பெண் கான்ஸ்டபிளின் ஒரு நாள் பகல் பொழுதை, அவர் தனது மூத்த அதிகாரி ஒருவரால் பாலியல் தொந்தரவுக்கு ஆளாவதை சொல்கிற படம் தான் ‘மி.மி.அ’.இன்னொரு பக்கம்  மிக மெல்லிய குரலில்  ஈழத்தமிழர்களைக் கொன்று குவிக்கும் சிங்களத் தலைவர்களுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கும் அரசுகள், இங்கே வாழும் ஈழத்தமிழர்களை குற்றவாளியாகப் பார்க்கும்  பார்வையை எளிய மனிதர்கள் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார்.

 • minister kadambur raju meets actress priyanka

  cinemaNov 7, 2019, 12:19 PM IST

  ’மிக மிக அவசரம்’பட நாயகி பிரியங்காவை நேரில் சந்தித்த தமிழக அமைச்சர்...

  சிம்புவை வைத்து ‘மாநாடு’படத்தைத் தயாரிக்கவுள்ள சுரேஷ் காமாட்சி தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் தயாராகியுள்ள ‘மிக மிக அவசரம்’படம் நாளை தமிழகம் முழுவதும் ரிலீஸாகவுள்ளது. இப்படத்தில் பிரியங்கா பெண் கான்ஸ்டபிளாக நடித்துள்ளார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று மாலை நடைபெற உள்ள நிலையில் அச்சந்திப்பில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூவும், விஜய் பாஸ்கரும் கலந்துகொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 • a theatre owner blames producers for more releases at a time

  cinemaOct 19, 2019, 12:26 PM IST

  ’திரையரங்க உரிமையாளர்கள் மீது வைக்கப்படுவது அபத்தமான குற்றச்சாட்டு’...விளாசும் பிரபலம்...

  அனைத்து படங்களுமே வெற்றியடைய வேண்டும் என்பது தான் திரையரங்க உரிமையாளர்களின் எண்ணம். எந்தப் படமும் தோல்வியடைய வேண்டும் என நாங்கள் நினைப்பதில்லை. படங்கள் வெற்றியடைந்தால் மட்டுமே எங்களுக்கு வருமானம். ஒரு படம் வெற்றியடைய வேண்டும் எனப் பிரார்த்திப்பது திரையரங்க உரிமையாளர்கள் தான்.ஆனால், திரையரங்க உரிமையாளர்கள் மீது ஒரு சாயம் பூசப்படுகிறது. எதார்த்தம் என்னவென்று புரியாமல் பேசுவது தான் வருத்தமாக உள்ளது. சிறிய படங்களுக்குத் திரையரங்குகள் கொடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டைத் திரும்பத் திரும்ப கூறிக் கொண்டே இருக்கிறீர்கள்.

 • mika mika avasaram movie release postponed

  cinemaOct 10, 2019, 12:05 PM IST

  ’மிக மிக அவசரம்’ ரிலீஸ் தேதியில் மாற்றம்...பின்னணியில் தனுஷ்...

  பெண் காவலர்களுக்கு மூத்த பதவியில் உள்ள அதிகாரிகளால் நடக்கும் அட்டூழியங்களை கதைகளமாகக் கொண்டு உருவாகியுள்ள படம் ‘மிக மிக அவசரம்’. இப்படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியே இயக்கியுள்ளார். படத்தின் மையப்பாத்திரத்தில் பிரியங்கா நடிக்க நாம் தமிழர் சீமான் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். நாளை வெள்ளியன்று ரிலீஸாவதாக தடபுடல் விளம்பரம் செய்யப்பட்ட இப்படம் தனுஷின் அசுரன் படம்  நான்ஸ்டாப் அசுர வசூல் புரிவதாலும் கூடவே நாளை மேலும் 3 படங்கள் ரிலீஸாவதாலும் ஒருவாரம் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

 • in the month of october too many films released in tamil

  cinemaSep 30, 2019, 12:47 PM IST

  அக்டோபர் அட்ராசிட்டீஸ்....ஒரே நாளில் யோகி பாபு நடித்த 4 படங்கள்...

  இந்த வரிசையில் சிரஞ்சீவியின் ‘ஷைரா நரசிம்மா ரெட்டி’2ம் தேதி ரிலீஸாக அடுத்த இரண்டு நாட்களில் வெற்றிமாறனின் ‘அசுரன்’,ஜீ.வி.பிரகாஷின் ‘100% காதல்’ ஆகிய படங்கள் ரிலீஸாகின்றன. அடுத்த 11ம் தேதி யோகி பாபு ஹீரோவாக நடித்துள்ள ‘பப்பி’,’பட்லர் பாபு’ஆகிய படங்களும் காமெடி வேடத்தில் நடித்துள்ள சுந்தர்.சி.யின் ‘இருட்டு’ தமன்னாவின் ‘பெட்ரோமாக்ஸ்’ஆகிய படங்கள் ரிலீஸாகின்றன. இதே தேதியில் சுரேஷ் காமாட்சி இயக்கியுள்ள ‘மிக மிக அவசரம்’படமும் திரைக்கு வருகிறது.

 • interview of mika mika avasaram producer

  cinemaSep 2, 2019, 1:42 PM IST

  ரொம்ப ரொம்ப லேட்டாகிக்கொண்டிருக்கும் ‘மிக மிக அவசரம்’...படம் தாமதமாகும் ரகசியத்தை வெளியிட்ட தயாரிப்பாளர்...

  சிம்பு, வெங்கட் பிரபு காம்பினேஷனில் ‘மாநாடு’படத்தைத் தயாரிப்பதாக இருந்த சுரேஷ் காமாட்சி முதல்முறையாக டைரக்டர் அவதாரம் எடுத்திருக்கும் படம் ‘மிக மிக அவசரம்’.அப்படியே படத்தின் டைட்டிலுக்கு நேர் எதிராக, இப்படம் தயாராகி கிட்டத்தட்ட ஓராண்டாகியும் இன்னும் திரைக்கு வந்தபாடில்லை. அந்த தாமதத்திற்கு என்ன காரணம் என்பதை தனது முகநூல் பக்கத்தில் சற்றுமுன்னர் பதிவிட்டிருக்கிறார் அவர்.

 • producer suresh kamatchi questions kamal

  cinemaMar 10, 2019, 9:51 AM IST

  மவுன சாமியார் கமல் இவ்வளவு அசிங்கப்பட்ட பிறகாவது தனது விஷால் ஆதரவை விலக்கிக் கொள்வாரா?

  தயாரிப்பாளஎ சங்க செயல்பாடுகளில் விஷால் குழுவினரின் முறைகேடுகளை அம்பலப்படுத்தி தமிழக அரசே ஷோ காஸ் நோட்டிஸ் அனுப்பியிருக்கிறது. இதன் பிறகாவது நடிகர் கமல் தனது விஷால் ஆதரவை விலக்கிக்கொள்வாரா அல்லது தேர்தல் பிரச்சாரத்திற்காக விஷாலின் தோலில் கைபோடுவாரா? என்று காரசாரமாகப் பேட்டி அளித்திருக்கிறார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.

 • rj.balaji comments on two producers

  cinemaJan 31, 2019, 3:36 PM IST

  தமிழ்ப்பட தயாரிப்பாளர்களை டெரரிஸ்டுகள் என்ற ஆர்.ஜே. பாலாஜி...

  ‘இந்த நிகழ்ச்சிக்கு காரில் வந்துகொண்டிருந்தபோது தற்செயலாக தம்பி ஆர்.ஜே. பாலாஜி போனில் வந்தார். என்கூட இன்னொரு தயாரிப்பாளரும் இருக்காரு பேசுங்க என்று அவர் பெயரைச் சொல்லிக் கொடுக்கமுயன்றபோது, ‘ஓ ஒரே கார்ல ரெண்டு டெரரிஸ்ட்ஸ் டிராவல் பண்ணிக்கிட்டிருக்கீங்களா’ என்று கமெண்ட் அடித்தார் என்கிறார் அதிரடிப் பேச்சு மன்னன் தயாரிப்பாளர் கே.ராஜன்.

 • trichy distributer about viswasam and petta

  cinemaJan 31, 2019, 12:48 PM IST

  பேட்ட படத்தை விட விஸ்வாசம் 10 கோடி அதிகம் வசூல்...உண்மையை போட்டுடைத்த விநியோகஸ்தர்...


  பொங்கல் ரிலீஸ் படங்களின் வசூல் பஞ்சாயத்து இன்னும் ஒரு முடிவுக்கு வராத நிலையில், ரஜினியின் ‘பேட்ட’ படத்தை விட அஜீத்தின் ‘விஸ்வாசம்’ படம் குறைந்த பட்சம் 10 கோடியாவது அதிகம் வசூலித்தது என்பதுதான் உண்மை என்று ‘மிக மிக அவர்சரம்’ பாடல் வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் போட்டு உடைத்தார் ஒரு விநியோகஸ்தர்.