Mdmk  

(Search results - 191)
 • vaiko warning

  politics17, Feb 2020, 2:56 PM IST

  சத்துணவு திட்டமா இல்ல மனுதர்ம உணவு திட்டமா..? தமிழக அரசை தாறுமாறாக விமர்சித்த வைகோ..!

  இனி சத்துஉணவுத் திட்டம், மக்கள் திலகத்தின் சத்துஉணவுத் திட்டம் ஆக இருக்காது; மனுதர்ம சத்துஉணவுத் திட்டம் ஆகி விடும். தமிழக அரசின் இந்த நடவடிக்கையை வன்மையாக எதிர்க்கின்றேன். மாணவர்களுக்கு சத்துணவு வழங்கும் பொறுப்பை தமிழக அரசே ஏற்க வேண்டும்

 • vaiko

  politics14, Feb 2020, 10:18 PM IST

  ரூ. 5 லட்சம் கோடி கடன்... அதிமுக அரசோட ஒரே சாதனை இதுதான்... வைகோ காட்டம்!

  மதுபான விற்பனை மூலம் கிடைக்கும் வருமானத்தை ஒவ்வொரு ஆண்டும் அ.தி.மு.க அரசு உயர்த்தி வருகிறது. இதற்காகவே டாஸ்மாக் மதுக்கடைகள் மேலும் மேலும் திறக்கப்படுகின்றன. கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 2,293 டாஸ்மாக் மதுக்கடைகள் புதிதாக திறக்கப்பட்டுள்ளன. 2016ல் ஜெயலலிதா முதல்வர் பதவி ஏற்றபோது, டாஸ்மாக் மதுக்கடைகள் படிப்படியாக மூடப்படும் என்ற அறிவிப்பை எடப்பாடி அரசு குப்பைக் கூடையில் வீசி எறிந்துவிட்டது.” என அறிக்கையில் வைகோ குறிப்பிட்டுள்ளார்.

 • vaiko

  politics10, Feb 2020, 10:05 PM IST

  என்னாது, சரஸ்வதி நாகரீகமா..? அதெல்லாம் மாயை... நாடாளுமன்றத்தில் கொந்தளித்த வைகோ!

  ரயில்வே துறைத் திட்டங்களில் தமிழகத்துக்கு மிகமிகக் குறைவான நிதியே ஒதுக்கப்பட்டுள்ளது; தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது. ரயில்வே துறையின் நிதிநிலை அறிக்கையை பொது நிதிநிலை அறிக்கையோடு சேர்த்தது படுமோசமான நடவடிக்கை. முன்பை போல ரயில்வே துறைக்கு தனியாக வரவு செலவுத் திட்ட அறிக்கையைத் தனியாகத் தாக்கல் செய்ய வேண்டும்.
   

 • vaiko

  politics1, Feb 2020, 9:52 PM IST

  அந்த இரண்டு விஷயங்கள்தான் பட்ஜெட்டில் நல்லாருக்கு... மற்ற எதுவும் உருப்படியில்ல... பட்ஜெட் குறித்து வைகோ அறிக்கை!

  இந்தியாவில் காப்பீட்டுத் துறையில் மிகப்பெரிய பங்களிப்பை வழங்கியுள்ள ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (LIC) பங்குகளை தனியாருக்குத் தாரைவார்ப்பது என்ற முடிவு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அதைப்போல லாபம் ஈட்டக்கூடிய பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் விற்கப்பட்டு 2.1 லட்சம் கோடி திரட்டப்படும் என்ற அறிவிப்பு பொதுத்துறை நிறுவனங்களைச் சீரழித்துவிடும். பாஜக அரசின் பொருளாதாரக் கொள்கைகளால் குறிப்பாக ஜி.எஸ்.டி., பணமதிப்பிழப்பு போன்ற காரணங்களால் நாட்டின் தொழில்துறை மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. லட்சக்கணக்கான சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு வருகின்றன. இதற்கு அரசின் பொருளாதாரக் கொள்கைகளே காரணம்.

 • undefined

  politics23, Jan 2020, 10:26 PM IST

  பெரியார் தனி மனிதர் இல்லை... கவிதை பாணியில் ரஜினிக்கு பதிலடி கொடுத்த வைகோ!

  தமிழர்களின் சமூக, அரசியல், பொருளாதார வாழ்வியலுடன் இரண்டறக் கலந்து இருக்கிற தலைவர் தந்தை பெரியார் குறித்து நண்பர் நடிகர் ரஜினிகாந்த், துக்ளக் விழாவில் கூறிய கருத்துகளை, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி ஆதாரபூர்வமாக மறுத்து இருக்கிறார். அதன்பிறகும் தாம் தெரிவித்த செய்திக்காக வருத்தம் தெரிவிக்க மாட்டேன் என்று கூறி இருக்கும் ரஜினிகாந்த், “இவை மறக்கக் கூடிய நிகழ்வுகள்” என்று மட்டும் கூறுகிறார். மறக்கவேண்டிய நிகழ்வுகளை ஏன் இவர் இப்போது நினைவூட்டுகிறார்? என்ற கேள்வி எழுகிறது!
   

 • vaiko

  politics20, Jan 2020, 11:32 AM IST

  சொந்த மண்ணில் 56 லட்சம் அகதிகள்...!! பாலைவனமாகிறதா தமிழகம், பகீர் கிளப்பும் புள்ளி விவரம்...!!

  காவிரிப் படுகை மாவட்டங்களில் மத்திய பா.ஜ.க. அரசு செயல்படுத்த முனைந்துள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராகக் கடந்த மூன்று ஆண்டுகளாகப் பொது மக்களும், விவசாயப் பெருங்குடி மக்களும் தொடர்ந்து போராடி வருகின்றனர்

 • vaiko

  politics10, Jan 2020, 6:50 PM IST

  ஸ்டாலின் உயிருக்கு அச்சுறுத்தல்...!! இசட் பிளஸ் பாதுகாப்பு விவகாரத்தில், பீதி கிளப்பிய வைகோ...!!!

  திமுக தலைவர் மு.க ஸ்டாலினுக்கு  இசட் பிரிவு பாதுகாப்பு  நீக்கப்பட்டதில்   அதிமுக பாஜக ஆகிய கட்சிகளின் சதி இருப்பதாக மதிமுக பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார் . 

 • vaiko

  politics10, Jan 2020, 10:14 AM IST

  மு.க. ஸ்டாலினுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பை விலக்குவதா..? கொந்தளித்த வைகோ!

  பெரியார் சிலையை உடைப்பது போன்ற கேடான செயல்கள் தொடர்ந்து வருகின்றன. இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு உயர்மட்டப் பாதுகாப்பு தொடர்வதுதான் நியாயமானது. அவருக்குக் கொடுக்கப்பட்டு வந்த காவல் பாதுகாப்பை விலக்கிக்கொண்ட தமிழக அரசுக்கும், அதற்கு ஏற்பாடு செய்த மத்திய அரசுக்கும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.” என்று வைகோ அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 • vaiko

  politics28, Dec 2019, 8:34 AM IST

  70 ஆண்டுகளில் ஒரு ராணுவ தளபதியாவது அரசியல் பேசியிருப்பாரா...? வெளுத்துகட்டிய வைகோ!

  பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், முப்படைகளுக்கும் சேர்த்து ஒரே தலைமைத் தளபதியை நியமனம் செய்வதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. முப்படைகளையும் கட்டுப்படுத்தும் வகையில் உருவாக்கப்படும் தலைமைக்கு கட்டுப்பாடற்ற அதிகாரத்தை வழங்குவது நாடாளுமன்ற ஜனநாயகத்தில் ஐயப்பாடுகளை எழுப்பி உள்ளது. இந்நிலையில், ஜனநாயக நாட்டில் ராணுவத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர் அரசியல் கருத்துகளை வெளிப்படையாக தெரிவிப்பது ஆபத்தான விளைவை ஏற்படுத்தும்.

 • DMK Rally Thumbnail
  Video Icon

  politics23, Dec 2019, 5:07 PM IST

  வெகுண்டெழுந்த திமுக தொண்டர்கள் மற்றும் மக்கள்..! சென்னையை ஸ்தம்பிக்க வைத்த பேரணி வீடியோ..

  வெகுண்டெழுந்த திமுக தொண்டர்கள் மற்றும் மக்கள்..! சென்னையை ஸ்தம்பிக்க வைத்த பேரணி வீடியோ..

 • madurai

  Madurai15, Dec 2019, 11:45 AM IST

  கொடிகட்டிப் பறந்த கந்துவட்டி கொடுமை..! மதுரை மதிமுக பிரமுகர் அதிரடி கைது..!

  மதுரை அருகே வட்டி பணம் கொடுக்க தவறிய தொழிலாளியின் வீட்டை இடித்த வழக்கில் மதிமுக பிரமுகர் உட்பட மூன்று பேர் கைதாகியுள்ளனர்.
   

 • vaiko

  politics21, Nov 2019, 1:37 PM IST

  புதிய கல்விக்கொள்கை அல்ல... புதிய புல்டோசர் கொள்கை..!! நாடாளுமன்றத்தில் அதகளம் தமிழக எம்.பி..!!

  புதிய கல்விக் கொள்கை அல்ல, அது புதிய புல்டோசர் கொள்கை என மாநிலங்கள் அவையில் மதிமுக பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோ கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.  
   

 • vaiko salary to party

  crime14, Nov 2019, 1:18 PM IST

  தமிழக காவல் துறையில் 350 கோடி ஊழல்..!! அதிமுகவுக்கு செக் வைக்கும் எதிர்கட்சி எம்.பி..!!

  காவல்துறையில் 350 கோடி ரூபாய் அளவிற்கு  ஊழல் நடத்தியுள்ள  குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்திட வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோ அறிக்கைவெளியிட்டுள்ளார் அதில்,  தமிழகக் காவல்துறைக்கு ‘வாக்கி-டாக்கி’ வாங்கியதில் 88 கோடி ரூபாய் ஊழல் நடந்தது குறித்தும், இதில் 11 விதிமுறைகள் மீறப்பட்டு இருப்பதாகவும், உள்துறைச் செயலாளர் தமிழக அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்றார்.

 • vaiko

  Chennai29, Oct 2019, 11:29 AM IST

  செம ஷார்ப்... குழந்தை மீட்பு எப்போ எப்போன்னு காத்திருந்த எம்பி...!! செய்ய வேண்டியதை செஞ்சு அலறவிட்டாரு பாருங்க..!!

  தமிழக அரசு மருத்துவர்கள் போராட்டம் ஐந்தாவது நாளாக தொடர்கிறது. சென்னை அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் தொடர்ந்து அறப்போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஆயிரக்கணக்கான மருத்துவர்கள், பேச்சுவார்த்தை மூலம் தங்கள் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றும் என்ற நம்பிக்கையுடன் உள்ளனர். பெருமாள் பிள்ளை, நீர் முகிப் அலி, பால மணிகண்டன், ரமா மற்றும் சுரேஷ் கோபால் ஆகிய ஐந்து மருத்துவர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபட்டு உள்ளனர்.

 • vaiko

  politics23, Oct 2019, 11:59 AM IST

  முதலமைச்சருக்கு அந்த விஷயத்தில் அதிகாரம் குறைப்பு...?? மத்திய அரசின் சூட்சமத்தை உடைத்த தமிழக எம்.பி..!!

  புதிய கல்விக் கொள்கையை வடிவமைத்திட அமைக்கப்பட்ட கஸ்தூரிரங்கன் குழு அளித்த பரிந்துரைகளுக்கு நாடு முழுவதும் கல்வியாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், மாணவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். தேசிய கல்விக் கொள்கை - 2019 வரைவு அறிக்கை பற்றிய ஆழமான கருத்து வேறுபாடுகள் தொடரும் நிலையில், அதனை நடைமுறைப்படுத்தும் செயலில் மத்திய பா.ஜ.க. அரசு இறங்கி உள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால், புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை இறுதி செய்யப்பட இருப்பதாகவும், அதில் பல்கலைக் கழகம், கல்லூரிகளில் கலை அறிவியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்காக நாடு முழுவதும் ஒரே நுழைவுத் தேர்வு கொண்டு வர செய்யப்பட்டுள்ள பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.