Maruthu Brothers  

(Search results - 1)
  • maruthu

    Sivagangai24, Oct 2019, 11:32 PM

    மருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்ட நாள்..! இந்தியா பார்த்திராத மிக கொடூரம் அது..!

    1801 ம் ஆண்டு அக்டோபர் 24ம் தேதி ஆங்கிலேயர்கள் அவர்களை தூக்கில் போட்டனர். அவர்களது உடல்கள் இரண்டு நாட்களாக
    தூக்கிலேயே தொங்கியது. இதனால் சிவகங்கை சீமையில் பரபரப்பு ஏற்பட்டது. அந்த இரண்டு நாளில் ஐநூறுக்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் மிகக் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டனர். இந்தியா பார்த்திடாத மிக கொடூரம் அது. முற்றிலும் எதிர்ப்புகளை அடக்கியப்பின்னர், 27ம் தேதி இரண்டு நாட்களாக தூக்கில் தொங்கிய அவர்களது உடல்களை கீழே இறக்கினார்கள். பெரிய அரிவாளால் பலம்கொண்டு வெட்டி மருது சகோதர்களின் தலையை தனியாக எடுத்தனர். மருதிருவரின் விருப்பப்படி காளையார்கோவில் கோவிலின் முன்பாக உள்ள சிறிய அறைக்குள் அந்த தலையை அடக்கம் ஆங்கிலேயர்கள் அடக்கம் செய்தனர்.