Edappadi K.palanisamy
(Search results - 27)politics24, Nov 2019, 10:10 PM IST
எடப்பாடி பழனிச்சாமியே நாளையும் முதல்வராவார்... ரஜினி சொன்ன அதிசயம் இதுதான்... ரஜினிக்கு பதிலடி தந்த பாஜகவின் இல. கணேசன்!
மீண்டும் முதல்வராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்பார் என்ற பொருளிலேயே நாளையும் அதிசயம் நடக்கும் என ரஜினிகாந்த் கூறியிருப்பார். இது என்னுடைய கூற்று அல்ல. ரஜினியின் கூற்றுதான். ரஜினி சொன்னதன் பொருளையே நான் இப்போது கூறியிருக்கிறேன். ரஜினி திருவள்ளுவர் என்றால் நான் பரிமேலழகர்.
politics23, Nov 2019, 7:10 AM IST
அற்புதம், அதிசயம்... ரஜினியின் அடுத்த சினிமா டைட்டிலா இருக்கும்... ரஜினியை மரண கலாய் செய்த காங்கிரஸ்!
2006ல் மறைமுக தேர்தலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்தார். அதையேத்தான் நானும் செய்கிறேன் என முதல்வர் சொல்வது அழகல்ல. மு.க.ஸ்டாலின் செய்ததைத்தான் நானும் செய்கிறேன் எனச் சொன்னால் அதிமுகவை கலைத்துவிட்டு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திமுக தொண்டராகிவிடலாம்.” எனத் தெரிவித்தார்.
politics21, Nov 2019, 6:54 AM IST
கூட்டணியிலிருந்து பாஜக, பாமக, தேமுதிகவை கழற்றிவிட திட்டம்..? தனித்து போட்டியிட்டு பலத்தை நிரூபியுங்கள்...அதிமுகவில் உருவாகும் புது யோசனை?
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்ற பிறகு, அந்த வெற்றிக்கு பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளும் சொந்தம் கொண்டாடின. இந்தக் கட்சிகள் உள்ளாட்சித் தேர்தலிலும் கணிசமான இடங்களைக் கேட்கத் திட்டமிட்டுள்ளன. இதேபோல பாஜகவும் அதிக இடங்களில் போட்டியிட திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் தனித்து போட்டியிட்டு பலத்தை நிரூபிப்பது என்ற கருத்தை தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முன்வைத்துள்ளார்.
politics20, Nov 2019, 10:03 PM IST
இப்பவே தேர்தல் தோல்வியை ஒத்துக்கிட்டீங்க... முதல்வர் எடப்பாடியை காய்ச்சி எடுத்த மு.க. ஸ்டாலின்!
கமிஷன், கலெக்ஷன், கரெப்ஷன் என்று திணறிக் கொண்டிருக்கும் அதிமுக அரசின் அமைச்சரவை, உள்ளாட்சித் தேர்தலை எப்படிச் சந்திப்பது என்பதில் ஒட்டுமொத்தமாகக் குழப்பமடைந்து, இறுதியில், ஒரு அவசரச் சட்டத்தைப் பிறப்பித்திருக்கிறது. திமுகவைப் பொறுத்தவரை, மக்களின் மீது முழு நம்பிக்கை வைத்திருக்கிறது. உள்ளாட்சிகளுக்கு “மறைமுகத் தேர்தலோ” அல்லது “நேரடித் தேர்தலோ” - எதையும் சந்திக்கத் தயாராக இருக்கிறது. இதுமாதிரி எந்த வகையான தேர்தல்களையும் சந்தித்து வெற்றி பெற்ற அனுபவம் திமுகவுக்கும், தொண்டர்களுக்கும் நிரம்ப இருக்கிறது. அந்த வகையில் இந்த உள்ளாட்சித் தேர்தலையும் ஜனநாயக ரீதியில் தீரத்துடன் சந்திப்போம்!
politics19, Nov 2019, 7:04 AM IST
அரசியலில் அதிசயம் நிகழுமா..? காலத்தின் கையில் அது இருக்கு... இது ரஜினிக்கு பாஜகவின் பதில்!
தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தொடங்கும் சினிமா கலைஞர்கள் மீது மக்களுக்கு ஆர்வம் இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி முதல்வரானது குறித்து ரஜினி அவருடைய கருத்தைக் கூறியுள்ளார். முதல்வராவது யார் கையில் இருக்கிறது என்ற அர்த்தத்தில் எடப்பாடி பழனிசாமி குறித்து ரஜினி தெரிவித்திருப்பதாகத் தோன்றுகிறது. அரசியலில் எந்த நேரத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். யாருக்கு எந்தப் பொறுப்பு வரும் என்பது தெரியாது.
politics18, Nov 2019, 10:24 AM IST
நேற்றை போல நாளையும் அதிசயம் நடக்கும்... எடப்பாடியைப் போல ரஜினியால் முதல்வராக முடியுமா?
‘இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முதல்-அமைச்சர் ஆவோம்’ என்று எடப்பாடி பழனிசாமி கனவில்கூட நினைத்திருக்க மாட்டார். ஆனால், அவர் முதல்வரானார். அப்படியே முதல்வரானாலும் 60 நாட்களில் ஆட்சி கவிழ்ந்துவிடும். 4 மாதங்கள்கூட தாங்காது என்று சொல்லாதவர்களே கிடையாது. 95 சதவீதம் பேர் இதைத்தான் சொன்னார்கள். ஆனால், அதிசயம் நடந்தது. அற்புதம் நடந்தது. ஆட்சி கவிழவில்லை. இன்றும் தொடர்ந்துகொண்டிருக்கிறது.
politics18, Nov 2019, 6:40 AM IST
சென்னை மாநகராட்சியைத் தனி தொகுதியா அறிவிக்கணும்... முதல்வர் எடப்பாடியை நாடிய திருமாவளவன்!
திமுக கூட்டணியில் உள்ள விசிக தலைவர் திருமாவளவன் இரு தினங்களுக்கு முன்பு திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்து பேசினார். பிறகு, ‘சட்டப்பேரவைத் தேர்தல் வரை திமுக கூட்டணியில் தொடருவோம்’ என்று தெரிவித்தார். இந்நிலையில், திடீரென முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவருடைய முகாம் இல்லத்தில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் சந்தித்து பேசினார்.
politics14, Nov 2019, 9:29 PM IST
ஆம், தமிழகத்தில் வெற்றிடம் உள்ளது... ரஜினி சொன்னதை வழிமொழிகிறேன்... நண்பர் வழியில் கமல்!
பட வாய்ப்புகள் குறைந்ததால் அரசியலுக்கு வருவதாக முதல்வர் அவருடைய விருப்பங்களைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அதைச் சொல்லி கொண்டேயிருப்பதால் அது உண்மையாக இருக்க வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. ஊராட்சிக்கும் மாநகராட்சிக்கும் என்ன வித்தியாசம் என்பது எங்களுக்கும் தெரியும்.
politics4, Nov 2019, 8:14 AM IST
மு.க. ஸ்டாலின் செயல்பாடு மெச்சுக்குற மாதிரி இல்ல... எடப்பாடி ஆளுமை வேற லெவல்... ‘நாட்டாமை’ ஒப்பீடு!
திமுகவில் குடும்ப அரசியல் நடைபெற்றுவருகிறது. மு.க. ஸ்டாலினுக்கு பிறகு அவருடைய மகன் உதயநிதி வந்துள்ளார். கட்சியில் அவர்கள் குடும்பம் மட்டுமே இருக்கும். திமுக தொண்டர்களுக்கு எந்த வாய்ப்புமே கிடைக்காது. கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய 2 தலைவர்களின் மறைவுக்குப் பிறகு கருணாநிதியுடன் ஒப்பிடும் அளவுக்கு ஸ்டாலின் செயல்பாடு சிறப்பானதாக இல்லை.
politics20, Oct 2019, 10:25 PM IST
கட்சி தொடங்கிய பிறகு எம்.ஜி.ஆர். சினிமாவில் நடிச்சார்... அரசியலுக்கு வருவதற்கு முன்பு ரஜினி நடிக்கக் கூடாதா..? கேட்கிறார் தமிழருவி மணியன்!
தற்போது ரஜினி இரண்டு படங்களில் நடித்து வருகிறார். அந்தப் படங்கள் தீபாவளிக்கு ஒன்றும் பொங்கலுக்கும் ஒன்றும் வெளியாக உள்ளது. நடிகர் ரஜினி படங்களை எல்லாம் முடித்துவிட்டு அடுத்த தீபாவளிக்கு பிறகு, தீவிர அரசியலில் ஈடுபடுவார். தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபடுவார்.
politics20, Oct 2019, 9:38 PM IST
வெளிநாட்டில் 100 டாலருக்கு டாக்டர் பட்டம் கிடைக்குது... எடப்பாடிக்கு கிடைத்த டாக்டர் பட்டம் பற்றி திருநாவுக்கரசர் கிண்டல்!
ஜெயலலிதா இந்திய அளவில் மிகவும் பிரபலமானவர். அவர் மறைந்த பிறகு இந்தியா முழுவதும் உள்ள தலைவர்களை அழைத்து அவருக்கு இரங்கல் கூட்டம் நடத்தியிருக்க வேண்டும். ஆனால், இரங்கல் கூட்டம் நடக்கவில்லை. ஜெயலலிதாவுக்காக எடப்பாடி, பன்னீர்செல்வம் என்ன செய்துள்ளனர்? மருத்துவமனையில் இருந்தபோதும் அவரை சரியாக கவனிக்கவில்லை.
politics19, Oct 2019, 8:52 AM IST
7 பேர் விடுதலை விவகாரம்... முதல்வரை ரவுண்டு கட்டும் எதிர்க்கட்சிகள்... வாய்த் திறப்பாரா எடப்பாடி பழனிச்சாமி?
அரசியல் கட்சிகள் இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் உண்மை நிலையை விளக்க வேண்டும் என்று கோரிவரும் நிலையில், இது பற்றி முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி எதுவும் தெரிவிக்கவில்லை. அந்தச் செய்திக்கு மறுப்பும் தெரிவிக்கவில்லை. இடைத்தேர்தல் பிரசாரம் இன்று ஓய்வடைய நிலையில், இதைப் பற்றி முதல்வர் விளக்குவாரா அல்லது தேர்தல் முடிந்த பிறகுதான் விளக்கம் அளிப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
politics18, Oct 2019, 10:05 PM IST
மு.க. ஸ்டாலினை எதிர்த்து தேர்தலில் எடப்பாடி நிற்க வேண்டுமா? நானே போதும்... ஸ்டாலினுக்கு ராஜேந்திர பாலாஜி தாறுமாறு பதிலடி!
நாங்குநேரி இடைத்தேர்தலுக்கு கனிமொழியைபிரச்சாரக்குழு செயலாளராகவும், ஐ.பெரியசாமியை தலைவராகவும் திமுக நியமித்தது. ஆனால், திடீரென கனிமொழி வெளிநாட்டுக்கு சென்றுவிட்டார். கனிமொழியை அரசியலில் இருந்து ஒதுக்குகிறார்களா அல்லது திமுகவில் கனிமொழியின் வளர்ச்சியைக் கண்டு ஸ்டாலின் பயப்படுகிறாரா எனத் தெரியவில்லை.
politics17, Oct 2019, 6:53 AM IST
எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வோம்... நேருக்கு நேர் மோதி பார்ப்போமா..? எடப்பாடிக்கு ஸ்டாலின் புதிய சவால்!
அண்ணா, கருணாநிதி, பக்தவச்சலம், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர்தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர்கள். இவர் விபத்தால்வந்த முதல்வர். இதை சொன்னால் அவர் என்னை பற்றி ஆவேசமாக விமர்சிக்கிறார். தனிப்பட்ட முறையில் தரக்குறைவாக விமர்சனம் செய்கிறார்.
politics16, Oct 2019, 6:46 AM IST
சுவிஸ் வங்கியில் பணம் பதுக்கியிருக்கிறேனா...? நாங்குநேரியில் எகிறிய மு.க. ஸ்டாலின்!
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனிப்பட்ட முறையில் வெளிநாடு சென்றால் அதைப்பற்றி எந்தக் கேள்வியும் இல்லை. ஆனால், முதல்வர் என்ற முறையில் சென்றதாலேயே அதைப்பற்றி கேட்கிறேன். ஆனால் நான் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்காமல், என்னை விமர்சனம் செய்கிறார்.