Dr Ramadoss
(Search results - 41)politicsNov 15, 2020, 9:34 PM IST
தமிழகம் ரொம்ப எச்சரிக்கையா உஷாரா இருக்கணும்... திரும்ப திரும்ப எச்சரிக்கும் டாக்டர் ராமதாஸ்..!
இந்தியாவை கொரோனா இரண்டாவது அலை தாக்கும் ஆபத்து அதிகம் என்பதால், தமிழகம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் எச்சரித்துள்ளார்.
politicsNov 13, 2020, 9:05 PM IST
இத்தோடு நிறுத்திக்கோங்க... இந்த மிரட்டலெல்லாம் வேணாம்... பல்கலை.யை நெருக்கும் அமைப்புக்கு ராமதாஸ் எச்சரிக்கை.!
புதியக் கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவது மாநில அரசின் கொள்கை முடிவு சம்பந்தப்பட்டது; மாநில அரசு கொள்கை முடிவு எடுப்பதற்கு முன்பாக, அது குறித்து பல்கலை.களை மானியக்குழு கட்டாயப்படுத்தக் கூடாது; கட்டாயப்படுத்த முடியாது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் எச்சரித்துள்ளார்.
politicsOct 18, 2020, 9:30 PM IST
மருத்துவ படிப்பில் சேர அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உயிர்த்தண்ணீர் ஊற்றுங்கள்... டாக்டர் ராமதாஸ் உருக்கம்..!
7.5 சதவீத இட ஒதுக்கீடு என்ற உயிர்த்தண்ணீர் உடனடியாக ஊற்றப்படவில்லை என்றால், அரசு பள்ளி மாணவர்களில் ஒருவர் கூட மருத்துவப் படிப்பில் சேர முடியாது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
politicsOct 15, 2020, 9:44 PM IST
இது பெரும் துரோகம்... தமிழகத்திலாவது செயல்படுத்துங்க... வேதனைக் குரலில் ராமதாஸ்..!
மருத்துவக் கல்விக்கு நடப்பாண்டில் அகில இந்திய தொகுப்பில் இடஒதுக்கீடு வழங்க முடியாது என்று மத்திய அரசு பெரும் துரோகம் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
politicsSep 9, 2020, 8:43 PM IST
அந்த தேர்வால் தற்கொலை ஆபத்து... அதை நிரந்தரமாக ரத்து செய்தாகணும்... கோபத்தில் கொந்தளித்த டாக்டர் ராமதாஸ்!
நீட் தேர்வு நீடித்தால் ஒவ்வொரு ஆண்டும் இன்னும் பல மாணவர்கள் நீட் தேர்வு கொடுக்கும் மன உளைச்சலால் தற்கொலை செய்து கொள்ளும் ஆபத்து உள்ளது. இதைத் தடுக்க நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
politicsJul 6, 2020, 9:11 PM IST
தளர்வை கொண்டாடுற தருணமல்ல... அடக்கஒடுக்கமாக வீட்டில் இல்லாட்டி கொரோனா எகிறும்... அலட்ர்ட் செய்யும் ராமதாஸ்!
சென்னையில் கொரோனா பரவல் அளவு சற்று குறைந்திருப்பதற்கான காரணங்களில் மிக, மிக முக்கியமானது கடந்த 15 நாட்களாக சென்னையில் நடைமுறைப்படுத்தப்பட்டுவந்த முழு ஊரடங்கு ஆகும். இதை நினைத்து மகிழ்ச்சி அடையும் வேளையில், சென்னையில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்ததற்கு காரணம் மே 3ம் தேதி முதல் ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு பாதுகாப்பு விதிகளை நாம் முறையாக கடைபிடிக்காததுதான் என்பதை எவரும் மறந்து விடக்கூடாது.
politicsJun 21, 2020, 9:21 PM IST
சென்னை சாலைகளில் காக்கா, குருவிகள் கூட இல்லை... இரு வாரங்களில் கொரோனாவை விரட்டிடலாம்.. ராமதாஸ் நம்பிக்கை!
"சென்னையில் இதற்கு முன் நடைமுறையில் இருந்த 4 ஊரடங்குகளிலும் இதே ஒத்துழைப்பு கிடைத்திருந்தால் சென்னையில் இன்று கொரோனா இருந்திருக்காது. இப்போது கிடைக்கும் ஒத்துழைப்பு இன்னும் இரு வாரங்களுக்கு தொடரட்டும். அவ்வாறு தொடர்ந்தால் கொரோனா வைரசை ஒழித்து விடலாம்!” என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
politicsJun 13, 2020, 9:50 PM IST
சென்னையைப் பீதியாக்கும் கொரோனா எண்ணிக்கை ... இன்னும் என்ன ஆகுமோ..? மக்களுக்கும் அரசுக்கும் ராமதாஸின் யோசனை!
சென்னையில் கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதற்கு மக்களின் ஒத்துழைப்பின்மை முக்கியக் காரணம் என்பதையும் எவரும் மறுக்க முடியாது. தேவையில்லாமல் வீடுகளை விட்டு வெளியில் வரக் கூடாது; வெளியில் வந்தால் முகக்கவசம் அணிந்துதான் வர வேண்டும் என்று தமிழக அரசு மீண்டும், மீண்டும் தொலைக்காட்சி விளம்பரங்களின் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும் கூட, அதை பெரும்பான்மையான மக்கள் பொருட்படுத்தாதது மிகவும் வருத்தமளிக்கிறது. சென்னையில் முகக்கவசம் அணியாமல் மக்கள் சுதந்திரமாக நடமாடுவதை அதிக அளவில் பார்க்க முடிகிறது.
politicsMay 10, 2020, 9:39 PM IST
மனிதநேயமற்ற தனியார் பள்ளிகள்.. இந்த நேரத்திலும் ஃபீஸ் கட்ட சொல்லி வற்புறுத்துவதா.? கொந்தளிக்கும் ராமதாஸ்!
இத்தகைய சூழலில் கல்விக்கட்டணத்தை வரும் 15ம் தேதிக்குள் செலுத்தாத குழந்தைகள் ஆன்லைன் வகுப்புகளில் சேர்க்கப்பட மாட்டார்கள்; அவர்களுக்கான வகுப்புகள் மீண்டும் நடத்தப்பட மாட்டாது என்று பள்ளி நிர்வாகங்கள் எச்சரிப்பது அழகல்ல. வணிக நிறுவனங்கள் இதுபோன்று கூறலாம்; கல்விக் கூடங்கள் ஒருபோதும் கூறக்கூடாது.
politicsApr 16, 2020, 8:41 PM IST
உங்களை கொரோனாவிடமிருந்து யாராலும் காப்பாத்த முடியாது... ஊரடங்கை மீறுவோர் மீது டாக்டர் ராமதாஸ் கடுகடு!
சென்னை கோயம்பேடு சந்தையில் இன்று காலை காய்கறி வாங்குவதற்காக பெருமளவில் மக்கள் குவிந்திருக்கின்றனர். அவர்களிடையே சமூக இடைவெளி என்ற உணர்வு சிறிதும் இல்லை. நாட்டில் வேறு எங்குமே காய்கறி இல்லை என்பது போல, கோயம்பேடு சந்தையில் காய்கறி வாங்க மக்கள் முண்டியடித்தது அச்சத்தை ஏற்படுத்துகிறது. சென்னையில் மட்டுமல்ல, தமிழகத்தின் பெரும்பாலான நகரங்களிலும் இதே நிலைதான். இவர்கள் காய்கறிகளை வாங்குவதுடன், கொரோனாவையும் சேர்த்து வாங்குகின்றனர் என்பது தான் உண்மை.
politicsApr 10, 2020, 9:23 PM IST
டாஸ்மாக் இல்லா பூமியாக தமிழகம் மாறும்... அதை டாக்டர் ராமதாஸ் பார்த்துக்குவார்.. சொல்றது சீதாபாட்டி, ராதாபாட்டி
தமிழ்நாடு மதுவுக்கு அடிமையாகி விட்டது. இனி மதுக்கடைகளை மூடவே முடியாது. அவ்வாறு மூடினால் மதுவுக்கு அடிமையானவங்க எல்லாம், மதுவைக் கேட்டு வீடுகளில் வன்முறை செய்வார்கள். கள்ளச்சாராயம் பெருகிவிடும் என்றெல்லாம் நிறைய பேர் கதை விட்டாங்க. ஆனா அப்படி எதுவும் நடக்காதது ரொம்ப சந்தோஷம்டி. இனி நீ நிம்மதியா இருப்பே. நாலு காசு சேர்த்து உன் மகளை நல்ல இடத்துல கல்யாணம் பண்ணி குடுப்பேங்கிறத நினைக்கும் போதே மனசுக்கு இதமா இருக்குடி.
politicsApr 2, 2020, 4:42 PM IST
செஞ்ச உதவிக்கு வட்டிப் போட்டு வசூலிப்பிங்களா..? இ.எம்.ஐ. சலுகையில் வங்கிகளை தோலுரித்த டாக்டர் ராமதாஸ்!
கடன் தவணை ஒத்திவைப்பு என்பது பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் சலுகை என்பதால், ஒத்திவைக்கப்பட்ட கடன் தவணைகளுக்கான வட்டியும் தள்ளுபடி செய்யப்பட வேண்டும். ஆனால், அவ்வாறு செய்ய முன்வராத வங்கிகள், கடன் செலுத்தத் தவறியவர்களுக்கு அபராதம் விதிப்பதைப் போன்று கூடுதல் வட்டி செலுத்த வாடிக்கையாளர்களை கட்டுப்படுத்துவது வணிக அறத்திற்கு எதிரானது.
politicsMar 24, 2020, 10:26 PM IST
நாங்க சொன்னதை பிரதமர் செஞ்சிட்டாரு... 3 வார லாக்டவுனால் நிம்மதி... மோடிக்கு டாக்டர் ராமதாஸ் அப்லாஸ்!
"கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது. நாடு முழுவதும் 21 நாட்களுக்கான ஊரடங்கு ஆணையை தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் தீவிரமாகவும், கடுமையாகவும் செயல்படுத்த வேண்டும். தமிழக அரசு அறிவித்துள்ள வாழ்வாதார உதவிகள் ஊரடங்கை பாதிக்காமல் மக்களின் வீடுகளுக்கு சென்று வழங்கப்பட வேண்டும்!” என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
politicsMar 23, 2020, 10:16 PM IST
மக்கள் யாரும் வெளியே வரக் கூடாது.. இந்திய தொற்று நோய் சட்டத்தை ஞாபகப்படுத்தி உஷார்படுத்தும் டாக்டர் ராமதாஸ்!
மலேரியா, காலரா, டெங்கு, பன்றிக்காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் ஏற்பட்டபோது அவற்றைக் கட்டுப்படுத்துவதற்காக இந்தச் சட்டம் பயன்படுத்தப்பட்டது! ஏதேனும் ஒரு மாநிலத்தில் ஆபத்தான தொற்றுநோய் பரவும் பட்சத்தில் அதைக் கட்டுப்படுத்த நடைமுறையில் உள்ள சட்டம் போதுமானதல்ல என்று அம்மாநில அரசு கருதினால், நிலைமை சமாளிக்க மாநில அரசுக்கு எல்லையில்லாத அதிகாரத்தை இந்தச் சட்டம் வழங்குகிறது!
politicsMar 22, 2020, 7:15 PM IST
தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு தேவை... விடாமல் வலியுறுத்தும் டாக்டர் ராமதாஸ்!
நாட்டில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட 75 மாவட்டங்களை மார்ச் 31 வரை முடக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய மாவட்டங்களும் அடக்கம். இந்நிலையில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்கள் மட்டுமல்லாது, தமிழகம் முழுவதும் மார்ச் 31 வரை ஊரடங்கு உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.