Citizenship New Act
(Search results - 1)politicsDec 11, 2019, 12:41 PM IST
போராட்டத் தீயை பற்றவைக்கும் திருமாவளவன்..!! குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கொந்தளிப்பு..!!
குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கண்டித்து திசம்பர் 14 அன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் தொல் . திருமாவளவன் அறிவித்துள்ளார். இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் இந்திய மக்களை மத, இன அடிப்படையில் பாகுபடுத்துகிறது. இது அரசியலமைப்புச்சட்டத்துக்கு எதிரானதாகும். இந்த சட்டத்தைத் திரும்பப்பெற வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எதிர்வரும் 14 12 2019 சனிக்கிழமை அன்று சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் (எனது தலைமையில்) நடைபெறுகிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.