A.r.murugadass  

(Search results - 15)
 • darbar

  cinema23, Nov 2019, 4:36 PM IST

  ’குண்டு ஒண்ணு வச்சிருக்கோம்’...’தர்பார்’தயாரிப்பு நிறுவனம் பரபரப்பு அறிவிப்பு...

  பொங்கலை ஒட்டி ஜனவரி 9ம் தேதியே ரிலீஸாகவிருக்கும் ரஜினி, ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியின் ’தர்பார்’பட இறுதிக்கட்ட போஸ்ட் புரடக்‌ஷன் பணிகள் மிகத் துரிதமாக நடைபெற்றுவருகின்றன. பட ரிலீஸுக்கு நான்கு வாரங்களுக்கு முன்னதாக ரஜினியின் 70 வது பிறந்தநாள் டிசம்பர் 12ம் தேதி சீரும் சிறப்புமாகக் கொண்டாடப்பட இருப்பதால் அதை தனது பட விளம்பரத்துக்கு திசை திருப்பிவிடத் திட்டமிட்டுள்ளது லைகா நிறுவனம்.

 • 2020 ಕ್ಕೆ ತೆರೆಗೆ ಬರುವ ಸಾಧ್ಯತೆ ಇದೆ.

  cinema19, Nov 2019, 4:03 PM IST

  ’தர்பார்’ரிலீஸ் தேதியில் அதிரடி மாற்றம்...அதிகாரபூர்வமாக அறிவித்த லைகா நிறுவனம்...

  இம்முறை தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை செவ்வாயன்று விழுவதால் அதற்கு முந்தைய வெள்ளிக்கிழமையிலிருந்து சுமார் ஏழு விடுமுறை தினங்கள் விழுகின்றன. அதை பயன்படுத்தும் விதமாக ஜனவரி 9ம் தேதி தர்பாரை ரிலீஸ் செய்ய முடிவெடுத்திருக்கும் பட நிறுவனம் அதை தங்கள் அதிகாரபூர்வ இணையதளத்தில் மட்டும் வெளியிட்டுள்ளது. 

 • ಸಕತ್ ಯಂಗ್ ಆಗಿ ಕಾಣಿಸ್ತಿದಾರೆ ರಜನಿಕಾಂತ್.

  cinema19, Nov 2019, 10:59 AM IST

  தர்பார்’படத்துக்கு ஓவர் விலை சொல்லும் லைகா...அப்செட்டில் ரஜினி...

  அதில் தயாரிப்பாளர் எஸ்.தாணு,  சன் பிக்சர்ஸ், வேல்ஸ் ஃபிலிம்ஸ் போன்ற பெரிய நிறுவனங்களும் அடக்கம். இவர்கள் மட்டுமின்றி துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பின்னணியில் இயக்குநர் ஷங்கரின் மைத்துனர் பாலாஜியும் இப்படத்தை வாங்கி வெளியிட முயல்கிறாராம். இப்படிப் பெரிய இடங்களைச் சேர்ந்த பலர் போட்டியிடுவதால், தர்பார் படத்தின் தமிழக உரிமைக்கான தொகையை உயர்த்திவிட்டதாம் லைகா நிறுவனம்.

 • sri reddy

  cinema16, Nov 2019, 5:22 PM IST

  உதயநிதி விவகாரம்...திடீரென மொட்டை மாடி கல்பனாவாக மாறிய ஸ்ரீரெட்டி...

  சுமார் ஒரு வருடத்துக்கும் மேலாக தனது ஏழெட்டு முகநூல் கணக்குகள் வாயிலாக தெலுங்கு சூப்பர் ஸ்டார்கள் சிரஞ்சீவி, நாகார்ஜூனா தொடங்கி தமிழில் ஏ.ஆர்,முருகதாஸ், ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த், உதயநிதி ஸ்டாலின் வரை சுமார் 20க்கும் மேற்பட்ட நடிகர்களின் அந்தரங்கங்களை இடம், நேரம், காலம் வரை புட்டுப்புட்டு வைத்து வந்ததோடு அவர்களிடம் மிரட்டல் தொனியில் நடிக்கவும் வாய்ப்புக் கேட்டு வந்தார் நடிகை ஸ்ரீரெட்டி.

 • Darbar

  cinema7, Nov 2019, 5:48 PM IST

  வெளியானது ரஜினியின் மிரட்டலான ‘தர்பார்’பட மோஷன் போஸ்டர்...வீடியோ...

  ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணியில் ரஜினி காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் ‘தர்பார்’பட மோஷன் இன்று மாலை வெளியிடப்படும் என்று அப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத் சுமார் பத்து தினங்களுக்கு முன்பே அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பை நேற்று முன் தினம் உறுதி செய்த தயாரிப்பு நிறுவனமான லைகா புரடக்‌ஷன்ஸ் ஒவ்வொரு மொழியிலும் பிரபல நடிகர்கள் வெளியிடுவார்கள் என அறிவித்திருந்தது.
   

 • rajini

  cinema5, Nov 2019, 5:37 PM IST

  கமல் பிறந்தநாளன்று ரஜினியின் ‘தர்பார்’பட மோஷன் போஸ்டர்...அடம் பிடிக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்...

  இப்படம் ஒரே நாளில் தமிழ்,தெலுங்கு, மலையாளம்,கன்னடம் மொழிகளில் வெளியாகவிருப்பதைத் தொடர்ந்து 4 மொழிகளுக்குமான டப்பிங் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்நிலையில் அந்த 4 மொழிகளுக்குமான மோஷன் போஸ்டர்களை அந்தந்த மொழிகளின் முன்னணி நட்சத்திரங்கள் வரும் 7 ம் தேதி கமலின் பிறந்தநாள் கொண்டாடப்படும் நிலையில் அவசர அவசரமாக வெளியிடுகின்றனர்.
   

 • Nayanthara

  cinema5, Nov 2019, 11:13 AM IST

  ’அந்தப் படத்தில் மட்டும் நான் நடித்திருக்கவே கூடாது’...நயன்தாராவின் கசப்பான ஃப்ளாஷ்பேக்...

  ‘தர்பார்’படப்பிடிப்பின் இறுதி நாளன்று தனது சம்பள பாக்கி செட்டில் செய்ய்ப்படாததால் ஷூட்டிங் ஸ்பாட்டுக்குப் போகாமல் அடம் பிடித்த நயன்தாரா,பின்னர் பணம் செட்டில் ஆனவுடன் நடித்துக்க்கொடுத்தார். அச்செய்தியை தயாரிப்பாளர் தரப்பும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தரப்பும் வேண்டுமென்றே பரப்பி விட்டனர். 
   

 • vijay

  cinema30, Oct 2019, 5:51 PM IST

  விஜய்யின் அடுத்த படத்தை இயக்கப்போவது இவர்தான்...லீக்கான சீக்ரெட்...

  தீபாவளிக்கு ரிலீஸான விஜய்யின் பிகில் விமர்சன ரீதியாக கைதியை விட சற்று பின் தங்கியிருந்தாலும் வசூலில் பெரும் சாதனைகள் புரிந்துகொண்டே வருகிறது. முதல் 5 நாள் வசூல் 200 கோடியைத் தாண்டிவிட்டது என்று ரீல் சுற்றப்பட்டாலும் வசூல் 100 கோடியைத் தாண்டியிருப்பது மறுக்க முடியாத உண்மை என்றே விநியோகஸ்தர் மற்றும் தியேட்டர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலவரத்தால் தயாரிப்பாளர் பெரிய ஆபத்து இன்றித் தப்புவார் என்றே சொல்லப்படுகிறது.

 • rajini

  cinema17, Oct 2019, 4:22 PM IST

  ‘ரஜினியின் அரசியலுக்கு ‘தர்பார்’படத்தில் இடமில்லை’...ஓப்பனாகப் போட்டுடைக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்

  தர்பாரில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பெயர் ஆதித்யா அருணாச்சலம் என்பதாகும். ஆதித்யா முருகதாஸின் மகனின் பெயர் மற்றும் அருணாச்சலம் அவரது தந்தையின் பெயர் என்றும் குறிப்பிட்டு இந்தக் கதாபாத்திரத்துக்கு ஏற்ற பெயராக இது இருக்கும் என்று நினைத்து பெயர் வைத்ததாகவும், கதை முழுக்க முழுக்க போலீஸ் ஸ்டோரி என்றும், இதில் அரசியல் துளியும் இல்லை என்றும் கூறுகிறார் முருகதாஸ்.
   

 • Darbar Rajini

  cinema5, Oct 2019, 3:11 PM IST

  ’தர்பார்’கடைசி நாள் படப்பிடிப்பில் ரஜினியை படபடப்பாக்கிய நயன்தாரா...

  இதன் கடைசி நாள் படப்பிடிப்பு நேற்று முன் தினம் அக்டோபர் 3ம் தேதி நடந்து முடிந்தது. இறுதி நாள் படப்பிடிப்பு என்பதால் ரஜினி, இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் உள்ளிட்ட படப்பிடிப்புக் குழுவினர் அதிகாலை 6 மணிக்கே ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்துவிட அதே நேரத்துக்கு வந்துசேர வேண்டிய நயன்தாரா காலை 9 மணி வரை தனது ஹோட்டல் அறையை விட்டு வெளியே வராமல் அடம்பிடித்தாராம். காரணம் அவருக்கு பேலன்ஸ் வைக்கப்பட்ட சில லகரங்கள் சம்பள பாக்கி. டப்பிங் பேசாத நடிகைகளுக்கு கடைசி நாள் ஷூட்டிங்கில் சம்பளபாக்கியை செட்டில் செய்துவிடவேண்டும் என்பது நடைமுறை.

 • Darbar Rajini

  cinema23, Sep 2019, 6:19 PM IST

  கடல் தாண்டி ரஜினி ஆடும் தடாலடி தாண்டவம்: லண்டனுக்கு பறக்கும் தர்பார்! ஒரு பக்கம் நயன்தாரா!, மறு பக்கம் பயங்கரவாதி!

  கடல் தாண்டி ரஜினி ஆடும் தடாலடி தாண்டவம்: லண்டனுக்கு பறக்கும் தர்பார்! ஒரு பக்கம் நயன்தாரா!, மறு பக்கம் பயங்கரவாதி!

 • undefined

  politics21, Dec 2018, 10:52 AM IST

  முஸ்லீம் மதத்துக்கு முட்டுக்கொடுக்கும் ரஜினி... பரிதாபத்தில் பாஜக!

  பேட்ட படம் இந்து -முஸ்லீம் இடையே நடக்கும் ஆணவக் கொலை பற்றிய கதை என்பதால் அதில் நிச்சயம் மதம் சார்ந்த அதிரடிக் கருத்துக்கள் இருக்கும். பாஜகவுக்கும் - ரஜினிக்கும் இடையே உரசல் ஏற்பட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

 • sarkar

  cinema28, Oct 2018, 4:41 PM IST

  தியேட்டருக்கே போகவேண்டாம்... ஆத்திரத்தில் பாக்கியராஜ் வெளியிட்ட ‘சர்கார்’ படத்தின் முழுக்கதை


  நேற்று முதல் அனைத்து மீடியா நபர்களையும் அழைத்து ஏ.ஆர்.முருகதாஸ் தன் தரப்பு நியாயத்தைச் சொல்கிறேன் என்கிற பெயரில் இயக்குநர் கே. பாக்கியராஜை கிழித்துத்தொங்கவிட்டுக்கொண்டிருக்கிறார். பதிலுக்கு பாக்கியராஜ் சும்மா இருப்பாரா? அவர் பார்க்காத திரைக்கதையா??  என்ன நடந்துச்சுன்னா... என்று துவங்கி சந்தடி சாக்கில் ’சர்கார்’ படத்தின் முழுக்கதையையும் வெளியிட்டுவிட்டார்.

 • sarkar murugadoss

  cinema28, Oct 2018, 10:04 AM IST

  ’நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா சொல்லுங்க?’... திருப்பி அடிக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்

  ‘சர்கார்’ திருட்டுக்கதை சமாச்சாரமாக நீண்டநெடிய மவுனம் காத்துவந்த இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் நேற்றுமுதல் அதிரடியாக பேட்டிகள் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்.

 • sarkar

  cinema27, Oct 2018, 11:49 AM IST

  சர்கார் கதைத்திருட்டு விஜயை வெறுப்பேற்ற முடிவு...உதவி இயக்குநர்கள் பகீர் பிளான்!

  எவ்வளவு அசிங்கப்பட்டாலும் துடைச்சிக்கிட்டு எங்க போக்குல போய்க்கிட்டே இருப்போம் என்று அத்தனை புகார்களையும் புறந்தள்ளிவிட்டு ‘சர்கார்’ ரிலீஸிலேயே குறியாக இருக்கும் நடிகர் விஜய்க்கும், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாசுக்கும் சரியான பாடம் புகட்ட உதவி இயக்குநர்கள் சிலர் முடிவெடுத்திருக்கின்றனர்.