48 Days  

(Search results - 7)
 • mookuthi amman

  cinema1, Mar 2020, 2:47 PM IST

  நயன்தாரா இருந்த விரதம்? உண்மையை போட்டுடைய தயாரிப்பளார்!

  நடிகை நயன்தாரா எந்த படத்தில் நடித்தாலும், ரசிகர்கள் மத்திய நல்ல அந்த படங்களுக்கு வரவேற்பு கிடைத்து வருவதால், பல படங்களில் கதையின் நாயகியாக அவர் நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியான, மாயா, கோலமாவு கோகிலா, அறம் போன்ற படங்கள் முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு நிகராக வசூலில் சாதனை படைத்தது.
   

 • elephant

  Coimbatore15, Dec 2019, 12:15 PM IST

  48 நாட்களும் யானைகளுக்கு கொண்டாட்டம் தான்..! சிறப்பாக தொடங்கிய புத்துணர்வு முகாம்..!

  இந்த ஆண்டுக்கான யானைகள் முகாம் இன்று தொடங்குகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் இருக்கும் கோவில்களில் இருந்து 28 யானைகள் லாரி மூலமாக தேக்கம்பட்டி வந்துள்ளன. 

 • rain in tamilnadu

  Chennai17, Sep 2019, 1:57 PM IST

  48 மணி நேரத்திற்கு கொட்டித்தீர்க்க இருக்கும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் மீண்டும் எச்சரிக்கை!!

  தமிழகத்தின் சில மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு கனமழை பெய்ய இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

 • athivaradar

  life-style29, Aug 2019, 4:30 PM IST

  48 நாட்கள் மட்டுமே ஜகஜோதியாக இருந்த வசந்த மண்டபம் இப்போது இப்படி ஆயிற்றே..!

  மொத்தமாக 48 நாட்களில் ஒரு கோடியே 8 லட்சம் பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்து இருந்ததாக ஆய்வறிக்கை மூலம் தெரியவந்தது. 

 • poor

  Kanchipuram20, Aug 2019, 11:19 AM IST

  48 நாட்களில் 1200 டன் குப்பைகள் !! காஞ்சியை அசுர வேகத்தில் சுத்தம் செய்த துப்புரவு தொழிலாளர்கள் .. பொதுமக்கள் பாராட்டு ..

  48 நாட்கள் நடந்த அத்திவரதர் வைபவத்தில் மொத்தம் 1200 டன் குப்பைகள் காஞ்சிபுரம் நகரில் சேர்ந்துள்ளது . அதை துப்புரவு தொழிலாளர்கள் விரைந்து சுத்தப்படுத்தி பொதுமக்களின் பாராட்டுதலை பெற்றுள்ளனர்.

  1979 ம் ஆண்டிற்கு பிறகு கடந்த ஜூன் இறுதியில் அத்திவரதர் அனந்தசரஸ் குளத்தில் இருந்து வெளியே எடுக்கப்பட்டார் . ஜூலை 1 ம் தேதியில் இருந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்க தொடங்கினார் . தினமும் வித விதமான மலர் அலங்காரங்களோடு வண்ண வண்ண பட்டுகளில் அருள்பாலித்தார் . ஜூலை 31 வரை சயனகோலத்தில் அத்திவரதர் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன  .

  பின்னர் ஆகஸ்ட் 1 முதல் நின்ற கோலத்தில் அத்திவரதர் வைக்கப்பட்டார். ஒவ்வொரு நாளும் பக்தர்களின் கூட்டம் கூடிக்கொண்டே  சென்றது  . 4  முதல்  5  லட்சம் பக்தர்கள் வரையிலும் ஒரு நாளைக்கு தரிசனம் செய்தனர் . 

  குடியரசு தலைவர் , பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள் , அரசு உயர் அதிகாரிகள் , முக்கிய பிரமுகர்கள் , திரையுலகை சார்ந்த பிரபலங்கள் என பலர் வந்து அத்திவரதரை தரிசித்தனர் . திருப்பதியை காட்டிலும் அத்திவரதரை காண வந்த கூட்டம் அதிகம் இருந்தது . இந்த 48 நாட்களிலும் கிட்டத்தட்ட 1 கோடி காஞ்சிபுரம் வந்து அத்திவரதரை தரிசித்து உள்ளனர் .

  இந்த நிலையில் மிக பிரமாண்டமாக நடைபெற்ற அத்திவரதர் வைபவம் நிறைவு பெற்றது  . ஆகம விதிப்படி செய்ய வேண்டிய பூஜைகள் செய்யப்பட்டு அத்திவரதர்  தன் இருப்பிடமான அனந்தசரஸ் திருக்குளத்தில் வைக்கப்பட்டு  விட்டார்  .

  இந்த 48 நாட்களிலும் காஞ்சிபுரம் நகரில் அதிகப்படியான குப்பைகள் சேர்ந்துள்ளது .லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்த காஞ்சியில் சேர்ந்த  குப்பைகளையும், கழிவுகளையும் சுத்தம் செய்ய காஞ்சி நகராட்சி ஊழியர்கள் மட்டுமின்றி திருவள்ளூர், கடலூர், திருவாரூர் என பல்வேறு மாவட்டங்களில் இருந்து  2,000  தொழிலாளர்கள் என பெரும் படையே களமிறங்கியது.

  சாக்கடையை சுத்தம் செய்வது, குப்பை அள்ளுவது என குறுகிய நேரத்தில் பெரிய செயல்களை விரைந்து செய்து முடித்தனர் . இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பொன்னையா சால்வை அணிவித்து இனிப்பு வழங்கி பாராட்டினார்.

  48 நாட்களில் 1200 டன் குப்பையை இந்த பணியாளர்கள் அள்ளியிருக்கிறார்கள். அள்ளப்பட்ட  குப்பை சின்ன காஞ்சிபுரம் அருகே உள்ள நத்தம்பேட்டை திடக்கழிவு மேலாண்மை கூடத்தில் கொட்டப்பட்டுள்ளது. அங்கு மக்கும் குப்பை மக்கா குப்பை என தரம் பிரித்து அதிலிருந்து உரம் தயாரித்து மக்களுக்கு இலவசமாக வழங்கப்படவுள்ளது. பயோ கேஸ் தயாரிக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

 • athi varadar dharshan in kanchipuram

  Kanchipuram19, Aug 2019, 4:23 PM IST

  இயல்பு நிலைக்கு திரும்பும் காஞ்சி !! நிறைவு பெற்ற பிரம்மாண்டமான அத்திவரதர் வைபவம் .. காஞ்சிபுரம் மக்கள் நிம்மதி பெருமூச்சு ..

  48 நாட்கள் மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற அத்திவரதர் வைபவம் கடந்த 17 ம் தேதியோடு நிறைவு பெற்றது . காஞ்சிபுரம் நகரம் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது .
   

 • undefined

  6, Feb 2018, 4:08 PM IST

  கையில் "கயிறை" இத்தனை நாட்களுக்கு மேல் கட்ட கூடாது...! கட்டினால் சக்தி இல்லை...!

  கையில் கருப்பு கயிறை இத்தனை நாட்களுக்கு மேல் கட்ட கூடாது...!