Asianet News TamilAsianet News Tamil

சோதனை சாவடியில் பரபரப்பு... ரூ.50 லட்சம் எரிசாராயம் லாரியுடன் பறிமுதல்...!

கும்மிடிப்பூண்டி சோதனைச் சாவடியில் எரி சாராயம் கடத்தி வந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 20 பேரல் எரிசாராயம், லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

Rs.50 lakh Spirits seized with Larry
Author
Tamil Nadu, First Published Dec 27, 2018, 5:11 PM IST

கும்மிடிப்பூண்டி சோதனைச் சாவடியில் எரி சாராயம் கடத்தி வந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 20 பேரல் எரிசாராயம், லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் பகுதியில் ஒருங்கிணைந்த சோதனைச்சாவடி உள்ளது. இவ்வழியாக டெல்லியில் இருந்து கேரள மாநிலத்துக்கு லாரி மூலம் எரிசாராயம் கடத்தப்படுவதாக நாமக்கல் ஏடிஎஸ்பி செந்திலுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் 5 பேர் கொண்ட தனிப்படை போலீசார், எளாவூர் சோதனைச்சாவடி பகுதியில் மறைந்திருந்து, அப்பகுதி வழியாக செல்லும் கனரக வாகனங்களை தீவிரமாக கண்காணித்தனர். Rs.50 lakh Spirits seized with Larry

அப்போது, அரியானாவில் இருந்து கடந்த 18ம் தேதி புறப்பட்ட லாரி, ஆந்திர மாநிலம் தடாவுக்கு  சென்று  கொண்டிருந்தது. போலீசார், நோட்டமிடுவதை அறிந்ததும், மதுரவாயலை சேர்ந்த லாரி உரிமையாளருக்கு டிரைவர் ரமேஷ் போன் செய்து தகவல் கொடுத்தார். தொலைபேசியில் அவர்கள் பேசியது, நாமக்கல் மாவட்ட ஏடிஎஸ்பி செந்தில், கும்மிடிப்பூண்டி மவிலக்கு டிஎஸ்பி ராஜேந்திரன் ஆகியோருக்கு தெரிய வந்தது.

 Rs.50 lakh Spirits seized with Larry

இதையடுத்து, கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் சோதனைச்சாவடியில் போலீசார் காத்திருந்தனர். அப்போது சென்னையை நோக்கி வந்த லாரி சோதனைச்சாவடியில் நிற்காமல் வேகமாக சென்றது. உடனே போலீசார், அந்த லாரியை ஒரு ஜீப்பில் சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் விரட்டி சென்று சுற்றி வளைத்து பிடித்தனர். Rs.50 lakh Spirits seized with Larry

பின்னர் தார்ப்பாய் போட்டு மூடப்பட்ட லாரியை சோதனை செய்தனர். அதில், 338 கேன்களில் மொத்தம் 12 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் கடத்தி வந்தது தெரிந்தது. அதன் மதிப்பு ரூ.50 லட்சம் என கூறப்படுகிறது. இதையடுத்து லாரியை ஓட்டிவந்த திண்டிவனத்தை சேர்ந்த டிரைவர் ரமேஷ் (45), கிளினர் முருகன் (43), லாரியில் வந்த மதுராந்தகத்தை சேர்ந்த சங்கர் (40) ஆகியோரை கைதுசெய்தனர். இதையடுத்து, எரிசாராயம் மற்றும் லாரியை பறிமுதல் செய்தனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios