ஆடி மாதம் என்றாலே, தள்ளுபடி என்ற வார்த்தை மிகவும் பிரபலம்.அந்த வகையில், விழா  காலங்களில் பெரும்பாலான நிறுவனங்கள் ஆபர்களை வழங்குவது வழக்கமான ஒன்று. ஆனால் விவோ வழங்கி இருக்கும் புதிய ஆபர் மற்ற ஆபர்களை எல்லாம் மிஞ்சி உள்ளது.

வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி 72 வது சுதந்திர தினம் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை முன்னிட்டு விவோ ஸ்மார்ட்போன் நிறுவனம் இன்று இரவு முதல் வரும் 9 ஆம் தேதி வரையிலான மூன்று நாட்களுக்கு  மட்டும் மிக சிறந்த சலுகையை அறிவித்து உள்ளது.

விவோ நெக்ஸ் ஸ்மார்ட்போனின் விலை 44,990. ஆனால், 1947 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்ததை நினைவுப்படுத்தும் விதமாக, இந்த போனை 1947 ரூபாய்க்கு வழங்குவதாக அறிவித்துள்ளது.

அதுமட்டுமில்லாமல், வெறும் ரூபாய் 72 க்கு, இயர்போன், யுஎஸ்பி சார்ஜிங்க கேபிள் உள்ளிட்ட பல பொருட்களை 1947 ரூபாய்க்கு கேஷ் பேக்குடன் வழங்க உள்ளது. மேலும் பல கூப்பன்களும் வழங்க உள்ளது. இந்த சிறப்பு சலுகையை பயன்படுத்தி தேவைப்படுவோர் சரியான சமயத்தில் பதிவு செய்து பயன்பெறலாம்.