வோடபோன் வாடிக்கையாளர்களுக்கு அதிரடி சலுகை..! பிரீ கால்ஸ்.. பிரீ டேட்டா..! முந்துங்கள்!

பொங்கலை முன்னிட்டு வோடபோன் நிறுவனம் பல சூப்பர் சலுகையை அறிவித்து உள்ளது. அதன் படி, ரூ.396 திட்டத்தில் 69  நாட்கள் கால அவகாசத்துடன், அன் லிமிடேட் லோக்கல் மற்றும் STD கால்ஸ், தினமும் 100 எஸ்.எம்.எஸ், ஒரு நாளைக்கு 1.4 GB டேட்டா வழங்குகிறது.அதன் படி, 69 நாட்களுக்கு மொத்தம் 96.6 ஜிபி டேட்டா மற்றும் 6900 மெசேஜ் அனுப்ப முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இதனுடன், வோடபோன் பிளே அப்ளிகேஷன் மூலம், மூவிஸ், லைவ் டிவி பார்க்க முடியும். இந்த செயலியை கூகிள் பிளே ஸ்டோரில் இருந்து இறக்கிக்கொள்ளலாம்.

இது தவிர, ரூ.399 கு, தினமும் 1 ஜிபி டேட்டா, கால அவகாசம் - 84 நாட்கள், அன்லிமிடேட் லோக்கல் மற்றும் STD கால்ஸ்,100 பிரீஎஸ்.எம் எஸ் சலுகையையும் அறிவித்து உள்ளது. இதையே ரூ.399 திட்டத்தில் இதற்கு முன்னதாக, தினமும் 1.4GB டேட்டாவும், 70 நாள் கால அவகாசத்தையும் வழங்கி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Rs 169 prepaid plan 

புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டத்தின் மூலம், 28 நாட்கள் கால அவகாசத்துடன், அன் லிமிடேட் லோக்கல் மற்றும் STD கால்ஸ், தினமும் 100 SMS  பிரீ உள்ளிட்ட சலுகைகளை அறிவித்து உள்ளது வோடபோன் நிறுவனம்.