நோக்கியா மொபைல் சூப்பர் ஆபர்..! 13,000 ரூபாய் வரை அதிரடி குறைப்பு..!

https://static.asianetnews.com/images/authors/fb8d4d14-0372-5b95-af41-84d4a15f3aeb.jpg
First Published 23, Oct 2018, 2:47 PM IST
there is a best offer for nokia mobile
Highlights

நோக்கியா வாடிக்கையாளர்களுக்கு மிக சிறந்த ஆபர்களை அறிவித்து உள்ளது.  

நோக்கியா  வாடிக்கையாளர்களுக்கு மிக சிறந்த  ஆபர்களை அறிவித்து உள்ளது.  

புதிய ஸ்மார்ட்போன்களுக்கு 1,500 ரூபாய் முதல் 13,000 ரூபாய் வரையில் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது என்பது  குறிப்பிடத்தக்கது.

கடந்த நவம்பர் மாதம் நோக்கியா 5 மாடல் போனையும், நோக்கியா மாடல் போனையும்  அறிமுகம் செய்தது. இந்த நிலையில், ஹெச்.எம்.டி 
நிறுவனம் நோக்கியா மொபைல்களுக்கு 1,500 ரூபாய் வரையில் சிறப்பு தள்ளுபடி  ஆபரை  அறிவித்து உள்ளது.

தற்போது நோக்கியா 3.1 ஸ்மார்ட்போனின் விலை 11,999 ரூபாயிலிருந்து 10,999 ரூபாயாக குறைக்கப்படுள்ளத்தால் வாடிக்கையாளர்கள் பெரும் குஷியாக உள்ளனர்.

அதுமட்டுமில்லாமல், 3 ஜிபி ரேம் கொண்ட நோக்கியா 5.1 ஸ்மார்ட்போனின் விலை 1,500 ரூபாய் குறைக்கப்பட்டு, 12,999  ரூபாய்க்கு  விற்கப்படுகிறது.இதைவிட சூப்பர் ஆபராக, சிங்கிள் சிம் கொண்ட நோக்கியா 8 சிரோக்கோ ஸ்மார்ட்போனின் விலை 13,000 ரூபாய் ஒரே அடியாக  குறைத்து தற்போது 36,999  ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர்.

இந்த  சிறப்பு சலுகையை பயன்படுத்தி, நோக்கியா  பிரியர்கள் உடனடியாக இந்த மொபைலை வாங்கி  பயன்பெறலாம். 

loader