Asianet News TamilAsianet News Tamil

இன்ஸ்டாகிராம்.. 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு ஷாக் கொடுத்த META - இனி எல்லாமே பெற்றோர்கள் கையில் தான்!

Instagram Teen Accounts : 18 வயதிற்கு கீழ் உள்ள இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு புதிய விதிமுறைகளை கொண்டுவந்துள்ளார் பிரபல META நிறுவனம்.

teen accounts Instagram opens new parental guidance for under age ans
Author
First Published Sep 17, 2024, 11:37 PM IST | Last Updated Sep 17, 2024, 11:56 PM IST

சமூக வலைத்தளங்களில் சிறுவர்களுக்கு எதிராக, குறிப்பாக 18 வயதுக்கும் உட்பட்ட சிறுவர் மற்றும் சிறுமியர்களுக்கு எதிராக ஏற்படும் கவலை தரும் விஷயங்களை நிவர்த்தி செய்ய புதிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது. அதன்படி பிரபல மெட்டா நிறுவனம், 18 வயதுக்குட்பட்ட பயனர்களின் இன்ஸ்டாகிராம் கணக்குகளுக்கு, சில மேம்படுத்தப்பட்ட தனியுரிமை மற்றும் Parental Guidanceகளை இப்பொது அமைத்துள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

இனி மெட்டா நிறுவனம் குறிப்பிட்ட அனைத்து Instagram கணக்குகளையும் (அதாவது 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களின் இன்ஸ்டா கணக்குகள்) தானாகவே "டீன் அக்கவுண்ட்ஸ்" என்ற நிலைக்கு போர்ட் செய்யும். இது இயல்பாகவே பிரைவேட் கணக்குகளாக இருக்கும் என்று அந்த நிறுவனம் இன்று செவ்வாயன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இரவில் நீண்ட நேரம் மொபைல் பயன்படுத்துபவரா? உங்களுக்குத் தான் இந்த எச்சரிக்கை!

இனி அத்தகைய கணக்குகளின் (18 வயதுக்கு கீழ் உள்ளவர்களின் இன்ஸ்டா கணக்குகள்) பயனர்கள் அவர்கள் பின்தொடரும் அல்லது ஏற்கனவே இணைப்பில் இருக்கும் கணக்குகளிடம் இருந்து மட்டுமே மெசேஜ்களை பெறமுடியும். மேலும் அவர்களால் மட்டுமே ஒரு போஸ்டில் அவர்களை டேக் செய்யமுடியும். அதுமட்டுமல்லாமல் 16 வயதிற்குட்பட்ட பயனர்கள், பெற்றோரின் அனுமதியுடன் மட்டுமே இயல்புநிலை அமைப்புகளை தங்களது இன்ஸ்டா கணக்கை மாற்ற முடியும். 

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் யாருடன் பேசி பழகுகிறார்கள் என்பதைக் கண்காணிக்கவும், இன்ஸ்டாகிராம் கணக்கை பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தவும் உரிமை பெறுவார்கள். பல ஆய்வுகளின் முடிவுகளின்படி இளம் பயனர்கள் பலர், சமூக ஊடக பயன்பாட்டால், அதிக அளவு மனச்சோர்வு, பதட்டம் மற்றும் கற்றல் குறைபாடுகளை எதிர்கொள்வதாக கூறுகின்றன.

Meta, ByteDanceன் TikTok மற்றும் Googleன் GOOGL.O மற்றும் YouTube ஆகியவை ஏற்கனவே சமூக ஊடகங்களுக்கு அடிமையாகும் தன்மை குறித்து குழந்தைகள் மற்றும் பள்ளி மாவட்டங்கள் சார்பாக ஏற்கனவே நூற்றுக்கணக்கான வழக்குகளை எதிர்கொள்கின்றன. கடந்த ஆண்டு, கலிபோர்னியா மற்றும் நியூயார்க் உட்பட 33 அமெரிக்க மாநிலங்கள் அதன் தளங்களின் ஆபத்துகள் குறித்து பொதுமக்களை தவறாக வழிநடத்தியதற்காக ஒரு நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.

Facebook, Instagram மற்றும் TikTok உள்ளிட்ட சிறந்த தளங்கள், 13 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பயனர்களை தங்கள் இணையதளத்தில் பதிவு செய்ய அனுமதிக்கின்றன. இந்த நிலையில் இன்ஸ்டாக்ராமின் ஒரு புதிய அப்டேடின் ஒரு பகுதியாக, 18 வயதுக்குட்பட்ட Instagram பயனர்கள் ஒவ்வொரு நாளும் 60 நிமிடங்களுக்குப் பிறகு, இன்ஸ்டா பயன்பாட்டை மூடுமாறு அறிவிக்கப்படுவார்கள். அதுமட்டுமல்லால் இரவு நேரங்களில் தானாகவே ஸ்லீப் மோடிற்கு இன்ஸ்டாகிராம் சென்றுவிடும். 

வாட்ஸ்அப்பில் அறிமுகமான அசத்தலான புதிய அப்டேட்: உங்க போன்லயும் டிரை பண்ணி பாருங்க

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios