ஐ.ஐ.டி. மாணவர்களிடையே கலந்துரையாடிய சுந்தர் பிச்சை!

இந்தியாவில் உள்ள சிறு மற்றும் நடுத்தர வணிகர்கள் தங்களது உற்பத்திப் பொருட்களை உலக அளவில் சந்தைப் படுத்துவதற்கான இணையதள தொழில்நுட்பம் குறித்து கூகுள் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை காரக்‍பூர் ஐ.ஐ.டி. மாணவர்களிடையே கலந்துரையாடினார்.


கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை மேற்குவங்கத்தில் அவர் படித்த காரக்‍பூர் ஐ.ஐ.டி. கல்வி நிறுவனத்தில் மாணவர்களுடன் கலந்துரையாடினார். சிறுவணிகர்கள் உற்பத்திப்பொருட்களை உலக அளவில் சந்தைப் படுத்துவதற்கான புதிய டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் பயிற்சித்திட்டங்கள் குறித்து விளக்‍கினார். இந்தியாவில் சிறுவர்த்தகத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பம் சுதந்திரமாக அனுமதிக்‍கப்படும்போது அதன் வளர்ச்சி அளப்பெரியதாக இருக்‍கும் என்றும் குறிப்பிட்டார். கூகுள் இணையதளம் வாயிலாக சிறு வணிகர்கள் தங்களது உற்பத்தி பொருட்களை உலக அளவில் சந்தைப்படுத்தும் இந்த புதிய முயற்சியை முன்னெடுத்துச் செல்ல, காரக்‍பூரில் உள்ள ஐ.ஐ.டி கல்வி நிறுவனத்தில் சுமார் 300 பேரை சந்திக்‍க வந்துள்ளதாகவும் திரு. சுந்தர் பிச்சை குறிப்பிட்டார்.