ஸ்மார்ட் போன் பிரியர்களுக்கு மேலும் உற்சாகத்தை தரும் வகையில் சாம்சங் ஆன் 8 நவீன மொபைலை சாம்சங் நிறுவனம் விற்பனைக்குக் கொண்டுவந்துள்ளது. இந்த போனில் டியுள் ரியர் கேமிரா வசதி இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஜே7 ப்ரைம் மற்றும் கேலக்ஸி ஜே5 ப்ரைம் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த உடனேயே விரைவில் ஒரு புதிய ஸ்மார்ட்போனை சாம்சங் அறிமுகம் செய்ய முடிவு செய்தது. அதன்படி சாம்சங் கேலக்ஸி ஆன்8 இன்று முதல் சந்தைக்கு வந்துள்ளது.
 
ரூ.16,990 என்ற விற்பனை விலைக்கு அறிமுகமாகியுள்ள இந்த ஸ்மார்ட்போன் பல்வேறு சலுகைகளை கொண்டுள்ளது.  கடந்த 2016ம் ஆண்டில் வெளியான சாம்சங் ஆன் 8 போனை விட கூடுதல் அம்சங்கள் இந்த புதிய ஸ்மார்ட் போனில் உள்ளது  மொபைல் பிரியர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் எனலாம். 
இந்த புத்தம் புது ஸ்மார்ட் போன்,  கருப்பு மற்றும் நீல வண்ணங்களில் கிடைக்கிறது.

புதிய சாம்சங் கேலக்ஸி ஆன்8 சிறப்பம்சங்கள் :
 
டிஸ்ப்ளே : 6 இன்ச் புல் எச்டி சூப்பர் அமோல்ட் டிஸ்ப்ளே
 
பாடி : மெட்டல் பாடி, டைமண்ட் கேட் பிரேம்கள்

இயங்குதளம் : ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ
 
ப்ராசஸர் : ஆக்டா-கோர் (1.6 ஜிகாஹெர்ட்ஸ்)
 
ரேம் : 4GB ஜி பி
 
உள்ளடக்க சேமிப்பு : 64 ஜிபி
 
மைக்ரோ எஸ்டி கார்ட் நீட்டிப்பு : 256 ஜிபி வரை
 
பின்பக்க கேமிரா : எல்இடி பிளாஷ், எப்/1.9 அப்பர்ஷெர் கொண்ட 16 எம்பி
 
முன்பக்க கேமிரா : எல்இடி பிளாஷ் கொண்ட 16 எம்பி கேமிரா
 
பேட்டரி திறன் :  3500 எம்ஏஎச்
 
சிம் : டவுல் மைக்ரோ சிம் ஆதரவு
 
அளவு மற்றும் எடை : 151.7x76x7.8எம்எம், 169 கிராம்
 
இணைப்பு வசதிகள் : 4ஜி, வோல்ட்.
 
ஹெட் போன் : 3.5 எம் எம் ஜாக்.