ரிவர்ஸ் மோடில் அதிவேகம்... முதியவர் படுகாயம்.... சிக்கலில் ஓலா எலெக்ட்ரிக்

விபத்து பற்றிய தகவல்களை பாதிக்கப்பட்ட முதியவரின் மகள் பல்லவ் மகேஸ்வரி தனது லின்க்டுஇன் வலைப்பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். 

Rider Injured Using Ola Scooter Reverse Mode Gets Activated In Full Speed

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் ஃபிளாக்‌ஷிப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் S1 ப்ரோ மாடல் ரிவர்ஸ் மோடில் அதிவேகமாக இயங்கியதில், அதை ஓட்டி வந்த முதியவர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். ரிவர்ஸ் மோடு பிரச்சினை காரணமாக விபத்தை ஏற்படுத்திய மூன்றாவது ஓலா ஸ்கூட்டர் மாடல் இது ஆகும். 

ஜபால்பூர் பகுதியை சேர்ந்த 65 வயது முதியவர் ஓலா S1 ப்ரோ மாடலை கடந்த சில மாதங்களாக பயன்படுத்தி வருகிறார். இந்த நிலையில், தான் ஸ்கூட்டரின் ரிவர்ஸ் மோடில் ஏற்பட்ட மென்பொருள் குறைபாடு காரணமாக ஸ்கூட்டர் விபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதில் ஸ்கூட்டரை இயக்கிய முதியவர் படுகாயம் அடைந்துள்ளார். விபத்து பற்றிய தகவல்களை பாதிக்கப்பட்ட முதியவரின் மகள் பல்லவ் மகேஸ்வரி தனது லின்க்டுஇன் வலைப்பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். 

Rider Injured Using Ola Scooter Reverse Mode Gets Activated In Full Speed

ஓலா S1 ப்ரோ ஸ்கூட்டரை ரிவர்ஸ் மோடில் இயக்க முயற்சித்த போது திடீரென ஸ்கூட்டர் அதிவேகமாக ரிவர்ஸ் மோடில் இயங்கி இருக்கிறது. இதில் நிலை தடுமாறிய எனது தந்தை ஸ்கூட்டரில் இருந்து கீழே விழுந்தார். கீழே விழுந்ததால் அவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு பத்து தையல்கள் போடப்பட்டு உள்ளன. மேலும் அவரது இடபுற தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் இரண்டு பிளேட்கள் வைக்கப்பட்டு உள்ளது என பாதிக்கப்பட்ட முதியவரின் மகன் தெரிவித்து இருக்கிறார். 

பழைய குற்றச்சாட்டு:

ஓலா நிறுவனத்தின் S1 சீரிஸ் ஸ்கூட்டர்கள் ரிவர்ஸ் மோடில் இருக்கும் போது திடீரென அதிவேகமாக செல்வதாக ஏற்கனவே குற்றம் சாட்டப்பட்டு வந்தது. முன்னதாக இரண்டு முறை இதே பிரச்சினை காரணமாக விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. எனினும், ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் சார்பில் ஓலா S1 சீரிஸ் மாடல்களின் ரிவர்ஸ் மோட் பிரச்சினையை சரி செய்யவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

ரிவர்ஸ் மோட் மட்டுமின்றி ஓலா S1 சீரிஸ் ஸ்கூட்டர்கள் தீப்பிடித்து எரியும் சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெற்று பீதியை ஏற்படுத்தி வருகின்றன. ஸ்கூட்டர்கள் தீப்பிடிக்கும் சம்பவம் பற்றி விசாரணையை மேற்கொண்டு விரைவில் தீர்வு வழங்குவதாக ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தெரிவித்து இருந்தது. எனினும், இதுபற்றி இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios