தொடர்ந்து அதிகரிக்கும் ரேன்சம்வேர் அச்சுறுத்தல்... ஈசியா தப்பிக்க இதை மட்டும் செய்யுங்க போதும்..!

ரேன்சம்வேர் தாக்குதலின் போது பயனர் தனது கணினியில் இருந்து குறிப்பிட்ட மென்பொருளை அன் இன்ஸ்டால் செய்தால் கணினியை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். 

Ransomware attacks and how to avoid them

2021 ஆண்டு சைபர் தாக்குதல்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்தன. பல்வேறு தொழில்துறை சார்ந்த நிறுவனங்கள் வீட்டில் இருந்து பணியாற்றும் வழிமுறையை பின்பற்ற துவங்கி, டிஜிட்டல் உலகில் கால்பதித்தன. டிஜிட்டல் யுகத்தில் சாதகங்களுக்கு இணையாக பாதகங்களும் இருக்கத் தான் செய்கிறது. இது போன்ற பாதகங்களை தவிர்க்கும் பட்சத்தில் தனி நபர் மட்டும் இன்றி நிறுவனங்களுக்கும் சைபர் குற்றத்திற்கு ஆளாகும் வாய்ப்புகள் அதிகம்.

இதுபோன்ற சைபர் தாக்குதல்களில் சிக்கும் போது நிறுவனங்களுக்கு அதிக அளவில் நிதி இழப்பு ஏற்படும். சைபர் தாக்குதல்களில் ஒருவரை மிரட்டி பணம் பறிக்கும் முயற்சியை ரேன்சம்வேர் என அழைக்கின்றனர். ரேன்சம்வேர் தாக்குதலின் போது பயனர் தனது கணினியில் இருந்து குறிப்பிட்ட மென்பொருளை அன் இன்ஸ்டால் செய்தால் தொடர்ந்து கணினியை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். 

மீண்டும் கணினியை பழைய படி இயக்க ஹேக்கர் கோரும் தொகையை செலுத்த வேண்டும். கடந்த ஆண்டு மட்டும் உலகின் பல்வேறு சர்வதேச நிறுவனங்கள் ரேன்சம்வேர் தாக்குதலுக்கு ஆளானதாக 37 சதவீத நிறுவனங்கள் தெரிவித்து உள்ளன. இந்த தகவல் ஐ.டி.சி. நடத்திய 2021 ரேன்சம்வேர் ஆய்வில் தெரியவந்துள்ளது. 

Ransomware attacks and how to avoid them

தொடர்ந்து அதிகரித்து வரும் சைபர் தாக்குதல்களை எதிர்கொண்டு தங்களின் நெட்வொர்க்-களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம். 

பேட்ச்கள்:

பழைய மென்பொருள் மற்றும் கம்ப்யூட்டர் மால்வேர் மூலம் பாதிக்கப்படாமல் இருக்க சீரான இடைவெளியில் பேட்ச்களை இன்ஸ்டால் செய்வது அவசியம் ஆகும். இதை தானாக செயல்படுத்த மேனேஜ்மண்ட் டூல் போன்ற சேவைகளை பயன்படுத்தலாம். இவ்வாறு செய்யும் போது நிறுவனத்தின் அனைத்து கம்ப்யூட்டர்களிலும் பேட்ச் இன்ஸ்டால் செய்வதற்கான நேரம் மர்றும் மனித உழைப்பு மிச்சமாகும். பேட்ச்கள் சரியாக இன்ஸ்டால் செய்யப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொண்டால் சைபர் தாக்குதல்களில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும். 

Ransomware attacks and how to avoid them

ஆதெண்டிகேஷன் மேனேஜர்:

சைபர் தாக்குதலை அடுத்து, பாதிப்பு ஒரு முறை ஏற்பட்டாலும், இழந்த நம்பிக்கையை மீண்டும் பெறுவது மிகவும் கடினம். இதற்காக முன்கூட்டியே பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது சிறந்தது. பல்வேறு அக்கவுண்ட்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பாஸ்வேர்டு மற்றும் ஆதெண்டிகேஷன் மேனேஜர் டூல்களை பயன்படுத்தலாம். தகவல்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கிரடென்ஷியல் மேனேஜ்மண்ட் சேவைகளில் ரியல்-டைம் அலர்ட் ஆப்ஷனை பயன்படுத்தலாம். 

ஆண்ட்வைரஸ் அப்டேட்:

சைபர் தாக்குதல் நடத்தும் மென்பொருள்களை உருவாக்குவோர் அவை ஏற்படுத்தும் அபாயங்களை நன்கு அறிந்து வைத்திருப்பர். இதனால் ஆண்டிவைரஸ் சேவை இன்ஸ்டால் செய்வது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இதோடு ஆண்டிவைரஸ் இன்ஸ்டால் செய்வதோடு, அவற்றை சீரான இடைவெளியில் அப்டேட் செய்வது மிகவும் அவசியமானது ஆகும். அப்டேட் செய்யப்படாத ஆண்டிவைரஸ், சைபர் தாக்குதல்களின் போது சிறப்பான செயல்பாட்டை வழங்காமல் போகும்.

ரேன்சம்வேர் பாதிப்பில் சிக்காமல் இருக்க செயலிகளை அடிக்கடி சரிபார்ப்பது, பைல் பேக்-அப்களை எடுத்துக் கொள்வது, ஆண்டி வைரஸ் மென்பொருள் பயன்பாடு உள்ளிட்டவை மிக முக்கியமான நடவடிக்கை ஆகும். இதுபோன்ற எத்தகைய நடவடிக்கை எடுத்தாலும் சைபர் தாக்குதலில் இருந்து முழுமையாக தப்பித்து விட முடியாது என்ற போதிலும், இவற்றை செய்யும் போது பாதிப்பை வெகுவாக குறைக்க முடியும். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios