மக்களே! இந்த நம்பரை சேவ் பண்ணி வச்சிக்கோங்க..! இந்தியன் ரயில்வே அதிரடி.!
ரயில் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் ரயில் வரும் நேரத்தை துல்லியமாக இனி வாட்ஸ் அப் மூலம் தெரிந்து கொள்ளலாம் என இந்தியன் ரயில்வே தெரிவித்து உள்ளது.
ரயில் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் ரயில் வரும் நேரத்தை துல்லியமாக இனி வாட்ஸ் அப் மூலம் தெரிந்து கொள்ளலாம் என இந்தியன் ரயில்வே தெரிவித்து உள்ளது.
அதன்படி, நம் மொபைல் எண்ணில் 7349389104 என்ற எண்ணை பதிவு செய்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் இந்த எண்ணிற்கு, நாம் பயணம் மேற்கொள்ள இருக்கும் ரயிலின் எண்ணை வாட்ஸ்அப் அனுப்பினாலே போதும். அடுத்த நொடியே அந்த ரயில் எங்கு உள்ளது? எங்கிருந்து புறப்பட்ட்டது? எந்த நேரத்தில் புறப்பட்டது? தற்போது எந்த ரயில் நிலையத்தை தாண்டி வந்து கொண்டிருக்கிறது? நாம் காத்திருக்கும் ரயில் நிலையம் வந்தடைய எவ்வளவு நேரமாகும்.. உள்ளிட்ட விவரத்துடன் நமக்கு ஒரு மெசேஜ் கிடைக்கும்.
இதன் மூலம் நாம் இருக்கும் இடத்தில் அமர்ந்த படியே வாட்ஸ்அப் மூலமாக ரயில் வரும் நேரத்தை உடனடியாக அறிந்து கொள்ளலாம். மேலும் இந்த சேவை உங்களுக்கு பயனுள்ளதாக இருந்ததா என்ற கேள்வியும் வரும். இதற்கு ஆம் அல்லது இல்லை என பதில் அளிக்கலாம்.
தொழில்நுட்பம் வளர வளர மக்களுக்கு மிகவும் பயனுள்ள பல முக்கிய திட்டங்கள் இந்தியாவில் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது வாட்ஸ் அப் மூலமாகவே ரயில் வரும் நேரத்தை மிக துல்லியமாக தெரிந்து கொள்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
மேக் மை ட்ரிப் உடன் இணைந்து, மக்களுக்கு இந்த சேவையை வழங்குகிறது இந்தியன் ரயில்வே. இந்த திட்டத்தை நாமும் பயன்படுத்தி, மற்றவர்களுக்கும் உதவ வேண்டும். இந்த வசதி மூலம் அனைத்து மக்களும் பயன்பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது.