பான் எண்ணை சமர்பிக்க பிப்ரவரி 28  கடைசி ..!! வங்கிக்கணக்கு வைத்திருப்பவர்களுக்கு   கட்டாயமாகிறது...!!  

பான் எண்  பயன்பாடு, இனி  அனைத்து   துறைகளிலும்  இருக்கும். குறிப்பாக  தற்போது, வங்கிகளில்  கணக்கு  வைத்திருபவர்கள்,  பான்  எண்ணை கட்டாயம் சமர்பிக்க  வேண்டும் என வருமானவரித்துறை  தெரிவித்துள்ளது.

அதன்படி,  வங்கிகள் அனைத்தும்,   தங்களது  வாடிக்கையாளர்களிடம் , பான்  எண்ணின்  அவசியம் குறித்தும்,  இதுவரை பான் எண் பெறாதவர்கள் உடனடியாக   பான்  எண்ணை  பெறுவதற்கு வழிநடத்தவும் , வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.

பான்  எண்  இல்லாதவரக்ள்   செய்ய  வேண்டியது :

படிவம் 60 ஐ பூர்த்தி செய்து, தங்களின் வங்கிக் கிளைகளில் சமர்ப்பிக்க வேண்டும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருப்பு  பணத்தை  தடுக்கப்படும் :

வங்கிச் சேமிப்புக் கணக்குகளைப் பயன்படுத்தி, கருப்புப் பணப் பரிமாற்றம் செய்யப்படுவதைத் தவிர்க்க , பான்  எண் கட்டாயம் தேவை என வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.