மாருதி சுஸூகி நிறுவனம் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட 1,279 SWIFT மற்றும் DZIRE கார்களை திரும்பப் பெற உள்ளது. கடந்த மே மாதம் 7-ம் தேதி முதல் ஜூலை 5-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் தயாரிக்கப்பட்ட NEW SWIFT, மற்றும் NEW DZIRE கார்களில், விபத்தின் போது தலை அடிபவடுவதில் இருந்து காப்பாற்றும் 'Air Pack Controller Unit'-ல் பழுது இருக்க வாய்ப்புள்ளதாக மாருதி சுஸூகி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து Air Pack Controller Unit'-ல் பழுது இருப்பதை கண்டறிந்து இலவசமாக சரி செய்யும் பணி ஜூலை 25-ம் தேதி முதல் 
நடைபெறும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் பழுதை சரி செய்ய கார் டீலர்கள் மூலம் சம்பந்தப்பட்ட கார் உரிமையாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.