இந்திய மொபைல் நிறுவனங்களின் மாநாடு டெல்லியில் நடைப்பெற்று வருகிறது. இதில் பல்வேறு தொலை தொடர்பு  நிறுவனங்களும் கலந்துக்கொண்டு உள்ளது.

குறிப்பாக, ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி  கலந்துக்கொண்டு உரையாற்றினார். ரிலையன்ஸ் நிறுவனத்தை பொருத்தவரை வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சிறப்பு சலுகையை கடந்த 2016 ஆம் ஆண்டு ஜியோ அறிமுகம் செய்து மக்கள்  மத்தியில் பெரும் வரவேற்பை  பெற்றது.


  
இதனை தொடர்ந்து தற்போது ஜியோ ஜிகா பைபர் எனும் பிராட்பேண்ட் சேவையை செயல்படுத்த தீவிரமாக உள்ளது. இதன் மூலம் வீட்டுக்கு வெளியில் 4ஜி, 5ஜி சேவையை பெற  முடியும்  என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் வீட்டிற்குள்ளும் வை பை சேவையை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. ஜியோ பைபர் பிராட்பேண்டு மூன்று நாடுகளில் அதிவேக சேவையை வழங்கி வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் மிக சிறந்த சேவையை  வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னதாக  ப்ரீ கால்ஸ்,  ப்ரீ  டேட்டா வழங்கி  வந்த ஜியோ தற்போது எந்த அறிவிப்பை வெளியிட்டாலும் மக்கள் அதிகம் பயன்பெறும்  வகையில் உள்ளது  என  வாடிக்கையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.