அடடே....மீண்டும் ஜியோ இலவசமாக டேட்டா வழங்க போவதாக அறிவிப்பு...!
ஜியோ மக்கள் பயன்பாட்டிற்கு வந்து தற்போது இரண்டு வருடங்கள் ஆகின்றன. மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ள ஜியோ இதுவரை எந்த ஒரு பின்னடைவையும் அடைய வில்லை. மாறாக ஜியோ வந்த பிறகு மற்ற நெட்வொர்க் நிறுவனங்களுக்கு தான் பின்னடைவு.

இந்த நிலையில் ஜியோ இந்தியாவில் சேவையை துவங்கி இரண்டு ஆண்டுகள் நிறைவுற்றதை கொண்டாடும் வகையில், ஜியோ செலபிரேஷன்ஸ் ஆபர் என்ற பெயரில், 8 ஜி.பி. டேட்டாவை கூடுதலாக வாடிக்கையாளர்களுக்கு வழங்க உள்ளது.
இந்த 8 ஜி.பி டேட்டா நான்கு நாட்கள் வேலிடிட்டி கொண்டது. இதனை பெற மைஜியோ செயலியில் மை பிளான்ஸ் ஆப்ஷனில் பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. தினமும் 2 ஜி.பி வீதம் நான்கு நாட்களுக்கு, வாடிக்கையாளர்களின் கணக்கில் வந்து சேர்ந்து விடும். இந்த டேட்டா இன்னும் இரண்டு நாட்களில் அவரவர் டேட்டா கணக்கில் சேர்ந்த்து விடும் என்று தகவல் வெளியாகி உள்ளது.