இதுவரை ஜியோ அறிவித்த அறிவிப்பிலேயே மிகவும் வித்தியாசமான ஒரு அறிவிப்பை வெளியிட்டு  உள்ளது. இதன் காரணமாக வாடிக்கையாளர்கள் மிகவும் உற்சாகம் அடைந்து உள்ளனர். 

அப்படி என்ன அறிவிப்பு..?
  
கேட்பரி டெய்ரி மில்க் வாங்கினால், 1 ஜிபி இலவச டேட்டா வழங்குகிறது. இது என்னடா புது சங்கதி என யோசிக்காமல், ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பதற்கு ஏற்ப சாக்லேட்டும் கிடைக்கனும், டேட்டாவும்  கிடைக்கனும்.. அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம். இலவச டேட்டா பெற பயனர்கள் டெய்ரி மில்க் சாக்லேட் கவரின் புகைப்படத்தை மைஜியோ செயலியில் பதிவேற்றினால் போதும்.

மைஜியோ ஆப் சென்று ‘Get the tastiest 1GB of data ever' என்ற பேனரை க்ளிக் செய்ய வேண்டும்.பின்னர் PARTICIPATE NOW ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும், பின்னர் கேமராவை ஆன் செய்து டெய்ரி மில்க் சாக்லேட் காலி கவரை புகைப்படம் எடுக்க வேண்டும்.

கடைசியாக ‘KEEP 1GB’ ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். அவ்வளவு தான் ஒரு வார காலத்தில், 1GB ப்ரீ டேட்டா ஆச்டிவேட் ஆகி விடும். ஒருவர் ஒரு முறை மட்டுமே இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 

அதுமட்டுமில்லாமல், இந்த இலவச டேட்டா பெற விரும்பாதவர்கள் டெய்ரி மில்க் மற்றும் பிரதாம் அறக்கட்டளைக்கு வழங்கி, குழந்தைகளின் டிஜிட்டல் கல்விக்கு உதவ முடியும் என்பது கூடுதல் தகவல். ஆக மொத்தத்தில் ஜியோ டேட்டா ஏதோ ஒரு வகையில் மிகவும் படையனுள்ளதாக மாற்றப்படுகிறது.