நீங்க ஓவர் ஸ்பீடா போறீங்க பாஸ்... எச்சரிக்கை வந்துவிட்டது மேப்பில் அப்டேட் விடப்போகும் கூகுள்!!
கூகுள் மேப் செயலியில் விரைவில் புதிய ஆப்ஷன் ஒன்று அப்டேட் அதாவது சாலைகளின் வேக வரம்புகளைக் காட்டும் வசதி பண்ண உள்ளனர்.
உலகின் எந்த மூலையில் இருந்தாலும் கூகுள் மேப் பயன்படுத்தி எந்த மூலையில் செல்ல முடியும். கூகுள் மேப் செயலியில் நாளுக்கு நாள் ஏதாவது வசதிகள் அப்டேட் செய்து கொண்டே வருகிறது. இப்போது இந்த கூகுள் மேப்பில் புதிதாக மேலும் ஒரு வசதி சேர்க்கப்பட்டுள்ளது. அதாவது, தூரமாக பயணம் செய்யும் போது, நெடுஞ்சாலைகளில் அந்த சாலைகளின் வேக வரம்பு என்னவென்பதை இனி கூகுள் மேப் செயலி காட்டவுள்ளது. அதாவது நீங்க ஓவர் ஸ்பீடில் போய்க்கொண்டிருக்கிறீர்கள் பாஸ் என எச்சரிக்கும் ஆப்ஷன் அப்டேட் பண்ண உள்ளது.
இதுகுறித்து, கூகுள் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘ IOS மற்றும் Android களில் கூகுள் மேப் செயலி பயன்படுத்தும் பயனாளிகளுக்கு வேக வரம்புகள் காட்டும் வசதி புதிதாக இணைக்கப்படவுள்ளது. இந்த வாரம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் பயணிகள் மற்றும் நெடுந்தூரப் பயணங்களை மேற்கொள்ளும் வாகன ஓட்டிகளுக்கு எந்தெந்த இடங்களில் என்ன வேகத்தில் செல்ல வேண்டுமென்பதை அறிந்துகொள்ள இந்த வசதி பயன்படும். கூகுள் மேப்பில் நேவிகேசனை ஆன் செய்தால் கீழே இடது மூலை வேக வரம்புகள் காட்டப்படும்.
ஆனால் இந்த வேக வரம்புகள் காட்டும் வசதி இந்தியாவுக்கு தற்போது அறிமுகப்படுத்தப்படவில்லை. இதற்கான பணியில் ஈடுபட்டுள்ள இங்கிலாந்தைச் சேர்ந்த மாஷபிள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகளில் கூகுள் மேப்பில் வேக வரம்பு காட்டும் வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அதேபோல, இந்தியா, மெக்சிகோ, ஆஸ்திரேலியா, ரஷ்யா, பிரேசில், கனடா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளில் வேக கேமரா வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது’ என்று கூறியுள்ளது.