சூதாட்ட மோகத்தால் திவாலான பிரபல செல்போன் கம்பெனி!! இந்தியாவில் மட்டுமே இவ்வளவா?
பிரபல ஸ்மார்ட் போன் நிறுவனமான ஜியோனி, உரிமையாளரின் சூதாட்ட மோகத்தால் திவாலாகி உள்ளதாக சீனா ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
குறைந்த விலையில் ஏராளமான ஸ்மார்ட்போன்களை சந்தையில் அறிமுகம் செய்து, ஆசிய சந்தைகளில் குறிப்பிடத்தக்க நிறுவனமாக திகழ்ந்து வரும் சீனாவின் மிகப்பெரிய செல்போன் நிறுவனம் ஜியோனி. கடந்த சில ஆண்டுகளாக இந்நிறுவனம் பெரும் நிதி நெருக்கடியில் இருந்ததால் திவாலாகி உள்ளது. ஆகஸ்ட் 2018 வரை அந்நிறுவனத்திற்கு 20.2 பில்லியன் யுவான் கடன் இருப்பதாக சீன பத்திரிகைகள் தகவல் வெளியானது.
ஜியோனி நிறுவனம், 2013-15ம் ஆண்டு காலக்கட்டத்தில் ஒவ்வொரு மாதமும் 14.4 மில்லியன் டாலர் நஷ்டத்தை சந்தித்தாக ஜியோனி நிறுவனம் அறிக்கை வெளியிட்டது.
சமீபத்தில் ஸ்பெயின் சென்றிருந்த ஜியோனி நிறுவனம் லியூ, சப்ளையர்களுக்கு தர வேண்டிய தொகை 10 பில்லியன் யுவானை சூதாட்டத்தில் இழந்ததால், சாம்பலை முற்றிலுமாக நின்றது. கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தங்களுக்கு தர வேண்டிய பணத்தை கேட்டு ஜியோனி நிறுவனத்தை முறையிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஜியோனி நிறுவனம் திவாலானதாக அறிவிக்க கோரி அங்குள்ள ஷென்ஷென் கோர்ட்டில் முறையிடப்பட்டது. கோர்ட்டும் அதை ஏற்றுக்கொண்டுள்ளது.
ஸ்மார்ட்போன் தயாரிப்பில் ஜியோனி நிறுவனம், இந்தியாவில் ரூ.650 கோடி முதலீடு செய்ய இருப்பதாக இந்தாண்டில் செய்திகள் வெளியாகின. அப்படியான சூழலில், அந்நிறுவனம் திவாலானது, இந்தியாவில் பங்குகளை வாங்கியவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.