செய்திகள் வாசிப்பது "ரோபோ"....! என்ன அழகு... என்ன உச்சரிப்பு...!

சீனாவின் வூஜென் நகரில் நடைப்பெற்று வரும் 5 ஆவது உலக இணைய மாநாட்டில், பல புதுமைகளை காட்சிப்படுத்தி உள்ளது சீனா.

china made robo as news readers

சீனாவின் வூஜென் நகரில் நடைப்பெற்று வரும் 5 ஆவது உலக இணைய மாநாட்டில், பல புதுமைகளை  காட்சிப்படுத்தி உள்ளது சீனா.

அந்த வகையில், உலகிலேயே முதல் முறையாக இயந்திர செய்தி வாசிப்பாளர், அதாவது உண்மையான  செய்தி வாசிப்பாளர் போன்றே தோற்றத்திலும், உச்சரிப்பிலும் மிக அழகாக செய்தி வாசிக்கிறது இந்த ரோபோ.. அதுமட்டுமா செய்திகளுக்கு ஏற்ப ஏற்ற இறக்கத்துடன், தன் முக பாவணையையும் காண்பிக்கிறது. உதடுகள் அசைவு உள்ளிட்ட அனைத்தும் பக்கா செய்தி வாசிப்பாளரை போன்றே உள்ளது.

china made robo as news readers

சீன நிறுவனத்தின் இந்த அளப்பரிய சாதனை அனைவரையும் வியக்க வைத்து உள்ளது. சீன அரசின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான சின்குவா இந்த சாதனையை செய்து உள்ளது. இதற்கு உறுதுணையாக  sogou.com வடிவமைத்து கொடுத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கண்டுப்பிடிப்பின் மூலம், 24 மணிநேரமும் வேலை செய்ய முடியும் என்கிறது இந்த  நிறுவனம். இந்த முறை உலகம் முழுவதும் அமலுக்கு வரும் தருணத்தில் தொழில்நுட்பத்தில் மட்டுமே மனிதர்களுக்கு வேலை என்ற நிலை உருவாகி, உண்மையான செய்தி வாசிப்பாளர்களும் திரைக்கு பின் வேலை செய்யும் சூழல்  உருவாகும் என்ற எண்ணம் தோன்ற வைத்து உள்ளது.
 
ரோபோ செய்திவாசிப்பாளர் பற்றி வாசிக்கும் உண்மை செய்தி வாசிப்பாளர்களுக்கே பெரும் ஆச்சர்யத்தை  ஏற்படுத்தி உள்ளது சீன நிறுவனத்தின் இந்த சாதனை என்கின்றனர். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios