ரூ.35-க்கு ரீசார்ஜ் செய்யவில்லை என்றால் சேவை துண்டிப்பு - ஏர்டெல், வோடோபோன்... வாடிக்கையாளர்கள் தலையில் மொட்டையடிக்க மாஸ்டர் பிளான்!

First Published 23, Nov 2018, 5:04 PM IST
Airtel vodafone master plan
Highlights

இனி இன்காமிங் கால் வசதியும் இருக்காது.இதனால் 20 கோடி வாடிக்கையாளர்களின் தொலைத்தொடர்பு  சேவை துண்டிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

டெலிகாம் சந்தையில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல்வேறு நிறுவனங்கள் புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளது. மேலும் அன்மையில் டெலிகாம் நிறுவனங்கள் குறைந்த விலையில் பல்வேறு புதிய சலுகைகளையும் அறிமுகம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஏர்டெல், வோடபோன், ஐடியா போன்ற நிறுவனங்கள் ரீசார்ஜே செய்யாத 250 மில்லியன் வாடிக்கையாளர்களை அதிரடியாக நீக்க திட்டமிட்டுள்ளன. மேலும் இன்கமிங் கால்களுக்கு கட்டணம் வசூலிக்க புதிய பிளான் போட்டுள்ளது.

ஜியோ நிறுவனம் வழங்கும் அதிரடி சலுகைகளால், பெரும்பாலான வாடிக்கையாளர்கள் மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களை பயன்படுத்துவதில்லை. இதனால் ஏற்படும் பெரும் வருமான இழப்பை தடுக்க, இந்த திட்டத்தை ஏர்டெல், வோடோபோன் நிறுவனம் அமல்படுத்த உள்ளது. குறைந்தபட்ச தொகையான 35 ரூபாய்க்கு ரிசார்ஜ் செய்யவில்லை என்றால், இனி இன்காமிங் கால் வசதியும் இருக்காது.இதனால் 20 கோடி வாடிக்கையாளர்களின் தொலைத்தொடர்பு  சேவை துண்டிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஏர்டெல்லில் சுமார் 100 மல்லியன் மக்கள் ரூ.35-க்கு ரீசார்ஜ் செய்யாமல் குறைந்த கட்டணமாக 10-க்கு மட்டுமே ரீசார்ஜ் செய்து வருகின்றனர், இதனால் ஏர்டெல் நிறுவனத்திற்கு ரூபாய் 1,200கோடி மட்டுமே வருமானம்.  மேலும் அந்ந 100மில்லியன் மக்கள் ரூ.35-க்கு ரீசார்ஜ் செய்தால் கூட வருடத்திற்கு  ரூபாய் 2,100 கோடிலாபம் கிடைக்கும். அதேபோல வோடபோன் மற்றும் ஐடியா போன்ற நிறுவனங்களும் இதேபோன்று 35 ரூபாய்க்கு கூட ரீசார்ஜ் செய்யாமல் இருக்கும் வாடிக்கையாளர்களை நீக்க திட்டமிட்டுள்ளது. 

loader