ஏர்டெல் நிறுவனம் தற்போது போஸ்ட் பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகையை அறிவித்து உள்ளது. அந்த அறிவிப்பின் படி, தாம் பயன்படுத்தி வரும் அதே போஸ்ட் பெய்ட் திட்டத்தை நமக்கு தெரிந்தவர்களையும் பயன்படுத்த வைத்து விட்டால் போதும்.... இன்னும் சொல்லப்போனால் ஆட்கள் சேர்ப்பு என்றே கூறலாம். 

இது போன்று குறிப்பிட்ட திட்டத்தை தேர்வு செய்து, அந்த திட்டத்தையே மற்றவர்களையும் தேர்வு செய்ய வைக்க வேண்டும். இவ்வாறு செய்தால், போஸ்ட்பெய்ட் கட்டணத்தில் இருந்து, ரூ.1,500 தள்ளுபடி கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

திட்டம் செயல்பாடு 

ரூ.150 மதிப்புள்ள ஏர்டெல் கூப்பன்கள் வழங்கப்படும். அதனைக்கொண்டு 10 புதிய வாடிக்கையாளர்களை ஏர்டெல்லுக்கு கொண்டுவர வேண்டும். இதன் மூலம்  ஒரு வாடிக்கையாளர் பத்து புதிய வாடிக்கையாளர்களை கொண்டுவருவர். இதன் மூலம், அந்த வாடிக்கையாளருக்கு போஸ்ட்பெய்ட் கட்டணத்தில் ரூ.1,500 தள்ளுபடி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லாமல், புதிதாக சேரும் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ரூ.50 இல் மூன்று கூப்பன்கள் வழங்குகிறது. 

இதனை ‘My Airtel App' பதிவிறக்கம் செய்து, இந்த சலுகையை பெறலாம். ஜியோ வருகைக்கு பின்னர், மற்ற தொலைத்தொடர்பு நிருவனங்கள் போட்டி பொட்டுக்கொண்டு சலுகையை வாரி வாரி வழங்குகின்றன என்பதை தெரிந்துக்கொள்ளலாம்.