Asianet News TamilAsianet News Tamil

இண்டர்நெட்டில் உங்கள் குடும்பம் பாதுகாப்பாக இருக்கிறதா..? உங்களுக்கான தீர்வை வழங்குகிறது ஏர்டெல்

இண்டர்நெட் பயனாளர்களுக்கு பாதுகாப்பான இண்டர்நெட் சேவையை வழங்க, ஏர்டெல் பாதுகாப்பான இண்டர்நெட் என்ற முன்னெடுப்பை ஏர்டெல் நிறுவனம் முன்னெடுத்துள்ளது.
 

airtel introduces secure internet service to customers to safe family from internet viruses or malware lurking
Author
Chennai, First Published May 28, 2021, 3:05 PM IST

இண்டர்நெட் நமது வாழ்வியலையே எளிமையாக்குகிறது. நம் வாழ்வின் ஒரு அங்கமாக திகழ்கிறது இண்டர்நெட். ஒரு குடும்பத்தில் உள்ள அனைவருமே, தகவல், எண்டர்டெய்ன்மெண்ட் அல்லது பணி என ஏதோ ஒரு காரணத்திற்காக 24*7 இண்டர்நெட்டிலேயே உள்ளனர். நம்மிடம் இருக்கும் அனைத்து எலக்ட்ரானிக் கருவிகளும் வை-ஃபை இணைப்பை பெற்றுள்ளன. அதன்மூலம் அனைவருமே இண்டர்நெட்டில் தொடர்பில் உள்ளோம். 

இன்றைய வாழ்வில் ஸ்மார்ட் கருவிகளை நாம் அதிகமாக சார்ந்திருக்கும் அதேவேளையில், நாம் பயன்படுத்தும் இண்டர்நெட் மூலமாக வைரஸ்கள் உட்பட பல்வேறு விதமான பாதிப்புகளை சந்திக்கவும் நேரிடுகிறது. தொழில்நுட்பத்தில் ஆர்வம் நிறைந்த நீங்கள், அதுமாதிரியான அபாயங்களை தவிர்க்க விரும்புபவராக இருந்தாலும், உங்கள் வீட்டு குழந்தைகளுக்கோ, பெரியவர்களுக்கோ அதுகுறித்தெல்லாம் தெரியாது. எனவே இது 2 விதமான கவலைகளை பெற்றோர்களின் மனதில் உருவாக்கும்.

1. இண்டர்நெட் பயன்படுத்தும் கருவிகளை எப்படி பாதுகாப்பது?

2. இண்டர்நெட்டில் குழந்தைகளுக்கான வரையறையை நிர்ணயித்து அவர்களை ரிஸ்க்கிலிருந்து எப்படி காப்பது?

இந்தியாவின் மிகப்பெரிய இண்டர்நெட் வழங்குநரான ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஃபைபர், இந்த பிரச்னையை கண்டறிந்து, “ஏர்டெல் பாதுகாப்பான இண்டர்நெட்” என்ற தனித்துவமான தீர்வை கொண்டுவந்துள்ளது. குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் பாதுகாப்பான இண்டர்நெட் அனுபவத்தை வழங்க ஏர்டெல் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏர்டெல்லின் இந்த முன்னெடுப்பின் மூலம், வை-ஃபை மூலம் இணைக்கப்பட்டுள்ள கருவிகள் வைரஸ்களின் அச்சுறுத்தலிலிருந்து பாதுகாக்கப்படும்.

குழந்தைகளை திசைதிருப்பும் வகையிலான ஆன்லைன் கேம்கள் மற்றும் எழுத்துக்களிலிருந்து காக்கும் வகையில், அப்ளிகேஷன்களையும், வெப்சைட்டுகளையும் வடிகட்டி தேர்வு செய்துகொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சில வெப்சைட்டுகளை முடக்கும் வசதி ஏற்படுத்தித்தரப்பட்டுள்ளது. ஏர்டெல் பாதுகாப்பான இண்டர்நெட் சேவை, வைரஸ் பாதுகாப்பு, கண்டெண்ட் வடிகட்டுதல் ஆகிய வசதிகள் உள்ளன.

படிக்க வேண்டிய நேரத்தில் உங்கள் குழந்தைகள் ஆன்லைன் கேம்களில் அதிக நேரத்தை செலவிட்டால், குறிப்பிட்ட சில தேவையற்ற வெப்சைட்டுகள் மற்றும் அப்ளிகேஷன்களை ப்ளாக் செய்ய முடியும். Airtel Thanks என்ற அப்ளிகேஷனில் உங்களுக்கு தேவையானவற்றை மட்டும் பட்டியலிட்டுக்கொள்ளலாம். அவற்றைத்தவிர மற்றவை உங்களது சமூக வலைதள பக்கங்களில் காட்டப்படாது. 

ஏர்டெல் நன்றி(Airtel Thanks) என்ற இந்த ஆப்பை சப்ஸ்க்ரைப் செய்வது எளிது. முதலில் இந்த ”ஆப்”பில் log in செய்ய வேண்டும். Thanks பக்கத்திற்கு சென்று, "Secure Internet" என்ற கார்டை தேர்வு செய்து ஆக்டிவேட் செய்யலாம். முதல் மாத சந்தா இலவசம். அதன்பின்னர் மாதந்தோறும் ரூ.99 சார்ஜ் செய்யப்படும்.

இந்த சேவையில் முன்கூட்டியே ப்ரொஃபைல்களை தேர்வு செய்துகொள்ளலாம். வைரஸ் பாதுகாப்பு, குழந்தைகள் பாதுகாப்பு, படிப்பு முறை(Study Mode), பணி முறை(Work Mode) ஆகியவற்றை தேர்வு செய்யலாம். இதன்மூலம் அதைத்தவிர மற்ற கண்டெண்ட்கள் ப்ளாக் செய்யப்படும். Work Mode-ஐ தேர்வு செய்தால், அந்த வை-ஃபை இணைப்பில் அதைத்தவிர வேறு எதையும் ஸ்ட்ரீமிங் செய்ய முடியாது. இந்த சுயதேர்வுகளை எந்த நேரத்திலும், ஏர்டெல் தேங்க்ஸ் அப்ளிகேஷனிலிருந்து நீக்கிக்கொள்ளலாம்.

அனைத்தையுமே ஆன்லைனில் செய்யும் இன்றைய காலத்தில், இண்டர்நெட்டில் குடும்பத்தின் பாதுகாப்பை உறுதி செய்வது அவசியம். அதனால் ஏர்டெல் பாதுகாப்பான இண்டர்நெட்டை இன்றே சப்ஸ்க்ரைப் செய்யுங்கள். இண்டர்நெட் பாதுகாப்பில் முதல் அடியை எடுத்து வையுங்கள்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios