மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம்.. லிட்டருக்கு 23 கி.மீ. மைலேஜ்.. அசத்தும் மெர்சிடிஸ் C கிளாஸ் மாடல் அறிமுகம்.!
மெர்சிடிஸ் சி கிளாஸ் மாடல் ஆகும். சர்வதேச சந்தையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இந்தியாவில் தற்போது தான் அறிமுகமாகி இருக்கிறது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் முற்றிலும் புதிய C கிளாஸ் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இது ஆறாவது தலைமுறை மெர்சிடிஸ் சி கிளாஸ் மாடல் ஆகும். சர்வதேச சந்தையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இந்தியாவில் தற்போது தான் அறிமுகமாகி இருக்கிறது.
புதிய C கிளாஸ் மாடலுக்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகின்றன. இந்த மாடலின் விலை மே 10 ஆம் தேதி அறிவிக்கப்பட இருக்கிறது.
என்ஜின் விவரங்கள்:
புதிய C கிளாஸ் மாடல் மூன்று வித என்ஜின் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதன் பெட்ரோல் என்ஜின் 1.5 லிட்டர், 4 சிலிண்டர் யூனிட் - 204 ஹெச்.பி. பவர், 300 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இது தற்போதைய மாடலில் வழங்கப்பட்டுள்ள 2 லிட்டர் என்ஜினுக்கு மாற்றாக அமைந்துள்ளது. டீசல் என்ஜின் 2 லிட்டர், 4 சிலிண்டர் யூனிட் ஆகும். இது 200 ஹெச்.பி. திறன், 440 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதே என்ஜின் 265 ஹெச்.பி. பவர், 550 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் ஆப்ஷனிலும் கிடைக்கிறது.
மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம்:
மூன்று என்ஜின்களும் 9 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ், 48 வோல்ட் மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பம் மற்றும் இண்டகிரேடெட் ஸ்டார்டர் ஜெனரேட்டர் சிஸ்டத்துடன் வழங்கப்படுகிறது. இது 20 ஹெச்.பி. பவர், 200 நியூட்டன் மீட்டர் டார்க் அதிக திறன் வழங்குகிறது. மேலும் இதன் பெட்ரோல் கார் லிட்டருக்கு 16.9 கிலோமீட்டர்களும், டீசல் என்ஜின் கொண்ட மாடல் லிட்டருக்கு 23 கிலோமீட்டர் வரை செல்லும்.
வேரியண்ட் விவரங்கள்:
புதிய பென்ஸ் C கிளாஸ் C200 மற்றும் C220d வேரியண்ட்கள் அவாண்ட்கார்ட் லைனிலும், C300d மாடல் AMG லைனிலும் கிடைக்கும். இதன் AMG லைன் ஸ்போர்ட் கிரில், வித்தியாசமான அலாய் வீல் டிசைன் கொண்டிருக்கிறது. புதிய C200 மற்றும் C220d வேரியண்ட்கள்- சலண்டைன் கிரே, மோஜேவ் சில்வர், ஹை-டெக் சில்வர், மனுஃபக்துர் ஆப்டேல் வைட், கேவன்சைட் புளூ மற்றும் அப்சிடியன் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது.
புதிய C300d வேரியண்ட் மனுஃபக்துர் ஆப்டேல் வைட், கேவன்சைட் புளூ மற்றும் அப்சிடியன் பிளாக் என மூன்று நிறங்களில் மட்டும் கிடைக்கும். புதிய மாடல்களில் சிறிய ஓவர்ஹேங், ஆங்குலர் முன்புறம், புதிய ஹெட்லேம்ப் மற்றும் டெயில் லேம்ப் டிசைன்களை கொண்டிருக்கிறது.