காஞ்சிபுரத்தில் பட்டப்பகலில் மர்ம கும்பல் ஒன்று இளைஞரை கத்தியால் குத்தியும், அரிவாளால் சரமாரியாக வெட்டியும் கொலைச் செய்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிந்த காவலாளர்கள் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். 

kanchipuram name board க்கான பட முடிவு

காஞ்சிபுரம் மாவட்டம், திருபெரும்புதூர் அடுத்துள்ளது கீவளூர். இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் தேவசுந்தர மூர்த்தி (31). இவர் கீவளூர் ஊராட்சியில் குப்பை அள்ளும் வாகன ஓட்டுநராக பணியாற்றி வந்தார்.

கீவளூர் குளக்கரையில் நேற்று காலை அவர் உட்கார்ந்துக் கொண்டிருக்கும்போது அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர், தேவசுந்தர மூர்த்தியை கத்தியால் குத்தியும், அரிவாளால் சரமாரியாக வெட்டியும் கொன்றுவிட்டு தப்பினர். 

vetti kolai க்கான பட முடிவு

இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து காவல்துறைக்கு தெரிவித்துவிட்டு அவரை மருத்துவமனைக்குக் கொண்டுச் சென்றனர். அங்கு தேவசுந்தர மூர்த்தியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த காவலாளர்கள் விசாரணையைத் தொடங்கினர்.

police investigation க்கான பட முடிவு

அப்பகுதியில் உள்ள தொழிற்சாலையில் இருக்கும் கண்காணிப்பு கேமிராவில் கொலை சம்மந்தமாக எதாவது காட்சிகள் பதிவாகி உள்ளதா? என்று காவலாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர். "கீவளூர் மற்றும் திருபெரும்புதூர் பகுதி மக்களிடையே கடந்த 16-ஆம் தேதி தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த தகராறின் முன்விரோதம் காரணமாக தேவசுந்தர மூர்த்தி கொலைச் செய்யப்பட்டு இருக்கலாம்" என்று காவலாளர்கள் சந்தேகிக்கின்றனர்.

இதுகுறித்து வழக்குப்பதிந்த காவலாளர்கள், சந்தேகத்திற்கு இனமான கச்சிப்பட்டு பகுதியைச் சேர்ந்த சிலரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.