ரெஸ்டாரண்ட்டில் ஆபாச நடனம் ஆடிக் கொண்டிருந்த 22 வயது இளம் பெண் மற்றும் அந்தப் பெண்ணுடன் கும்மாளம் போட்ட கும்பல் கொத்தாக சிக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில மாதங்களாக கீழ்ப்பாக்கம்  மேடவாக்கம் டேங்க் ரோட்டில் உள்ள தனியார் ரெஸ்டாரண்ட்டில் இரவு நேரங்களில் ஆபாச நடனம் நடைபெறுவதை போலீசார் கண்காணித்து, நேற்று அதிரடியாக அங்கு ரெய்டுக்குச் சென்றனர்.

அப்போது ரெஸ்டாரண்ட்டில் ஆபாச நடனம் ஆடிக் கொண்டிருந்த 22 வயது இளம் பெண் ஒருவரையும், அந்தப் பெண்ணுடன் குடித்துவிட்டு கும்மாளம் அடித்துக் கொண்டிருந்த 14 பேரையும் கொத்தாக பிடித்து கைது செய்துள்ளது.

அதோடு மட்டுமல்லாமல் அங்கு சூதாடிக் கொண்டிருந்த 7 பேரையும் அமுக்கிப் பிடித்தனர். கைதானவர்களில் பலரும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் அதிகாரிகளாக பணிபுரிவதாக தெரிய வந்துள்ளது. மேலும், ரெஸ்டாரெண்ட் மீது வழக்கு பதிவு செய்த போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர்.