தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்த மும்மலை கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரி கிருஷ்ணன். இவரது மனைவி தங்க மாரியம்மாள். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. ஹரி கிருஷ்ணன் கட்டத் தொழிலுக்கு கூலி ஆட்களை கேரளாவுக்கு அழைத்துச் செல்லும் காண்ட்ராக்டராக பணி புரிந்து வருகிறார். இதனால் அவர் அடிக்கடி ஆட்களை அழைத்துக் கொண்டு கேளரா சென்றுவிடுவார். இரண்டு வாரங்கள் அங்கு தங்கியிருந்துவிட்டு பின்னர் சொந்த கிராமத்துக்கு வந்த செல்வதை ஹரி வழக்கமாக கொண்டிருந்தார்.

இந்நிலையில் தங்க மாரியம்மாவுக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த வேணுகோபால் என்பவருக்கும் இடையே கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. ஹரி கிருஷ்ணன் வேறு அடிக்கடி கேரள சென்றுவிடுவதால் கள்ளக் காதலர்களுக்கு இது வசதியாக போய்விட்டது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர்.

சில நாட்கள் இந்த காதல் தொடர்ந்து வந்த  நிலையில் ஹரி கிருஷ்ணனுக்கு அரசல் புரசலாக இந்த கள்ளக் காதல் குறித்து தெரிய வந்தது. இதையடுத்து ஹரி கிருஷ்ணன் மனைவியிடம் இது குறித்து கேட்டு கண்டித்துள்ளார். இனி மேல் இது போல் நடந்து கொள்ளக் கூடாது என அறிவுரை கூறியுள்ளார்.

மேலும் வேணு கோபாலையும் அழைத்து தன் மனைவியுடனான தகாத உறவை விட்டுவிடுமாறும கேட்டுக் கொண்டுள்ளார். இதனிடையே கேரளாவில் தொடர்ந்து  கன மழை பெய்து  வந்ததால் ஹரி கிருஷ்ணள் சில நாட்கள் அங்கு செல்லாமல் இருந்தார்.

நேற்று முன்தினம் மழை ஓய்ந்ததைக் கேள்விப்பட்டு ஹரி கிருஷ்ணன் கேரளா புறப்பட்டுச் சென்றார். ஆனால் அங்கு வெள்ளம் வடியாததால் மீண்டும் சொந்த ஊர் திரும்பினார். அப்போது ஊருக்கு வெளியே காட்டுப் பகுதியில் தனது மனைவியும், கள்ளக் காதலனும் செக்ஸ்சில் ஈடுபடுவதை நேரடியாக பார்த்துவிட்டார்.

ஆத்திரம் தலைக்கு ஏறிய ஹரி நேராக வீட்டுக்குச் சென்று அங்கிருந்த வீச்சரிவாளை எடுத்துக் கொண்டு காட்டுக்குச் சென்றார். அங்கு படுத்திருந்த மனைவி தங்க மாரியம்மாள் மற்றும் வேணு கோபாலை சரமாரியாக வெட்டி வீழ்த்தினார்.

இதில் அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். இதையடுத்து ஹரி கிருஷ்ணன் அரிவாளுடன் சென்று கோயில்பட்டி காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.