எல்லோரையும் சுடாமல் என்னுடைய புருஷனை மட்டும் ஏன் சுட்டீங்க என ரவுடி ஆனந்தனின்  மனைவி  அதிரடியாக கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த வாரம் திருவல்லிக்கேணியில் பொது இடத்தில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்த ரவுடி ஆனந்தன் தலைமையிலான கும்பல் ஒன்று அங்கு ரோந்து வந் போலீஸ்காரர் ராஜவேலுவை கத்தியால் குத்தினர். இதில் அவர் படுகாயம் அடைந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதையடுத்து போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் ரவுடி ஆனந்தன் என்கவுண்டர் செய்யப்பட்டார். போலீஸ் என்கவுண்ட்டருக்கு பலியான ரவுடி ஆனந்தனுக்கு ரஷிதா என்ற மனைவியும், 4 வயதில் அவினாஷ் மகனும், நிலா என்ற 2 வயது பெண் குழந்தையும் உள்ளனர். ஆனந்தன் ரஷிதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ரவுடி என்றாலும் ஆனந்தனை எந்த இடத்திலும் விட்டுக்கொடுக்காமல் ரஷிதா வாழ்ந்து வந்தார். இந்தநிலையில் ஆனந்தன் போலீசாரின் துப்பாக்கி சூட்டில் பலியான தகவல் கேட்டு ரஷிதா அதிர்ச்சி அடைந்தார்.தனது கணவர் ஆனந்தன் ‘என்கவுண்ட்டர்’ செய்யப்பட்டது குறித்து செய்தியாளர்களிடம் பேசும்போது சம்பவத்தன்று எனது கணவர் ஆனந்தன் மற்றும் அவரது நண்பர்கள் சீனு, ஸ்ரீதர், அரவிந்தன் உள்பட 10 பேரும் அந்த போலீஸ்காரரை  அடித்து உதைத்தனர். 5 பேர் கையில் கத்தி இருந்தது. 5 பேரும் அந்த போலீஸ்காரரை தலையிலேயே குத்தி தாக்கினர். நான் என் கணவரை தடுக்க முயன்றேன். ஆனால் என்னால் முடியவில்லை.

என் வீட்டுக்காரர் மட்டும் தாக்கவில்லை. கத்தி வைத்திருந்த 5 பேரை தவிர மற்றவர்கள் அந்த போலீஸ்காரர் கை, கால்களை பிடித்துக்கொண்டனர். அவரை சரமாரியாக கத்தியால் தாக்கியதை நானே பார்த்தேன். எல்லாரும் இக்காட்சியை கண்டு பயந்து நடுங்கினர்.

ஆனால் இந்த சம்பவத்துக்கு என் கணவரை மட்டும் சுட்டு கொன்றுவிட்டனர். நியாயப்படி பார்த்தால் அந்த 5 பேரையும் சுட்டிருக்கவேண்டும். அதை ஏன் செய்யவில்லை? என கேள்வி எழுப்பி அனைவரும் அதிர்ச்சி அடையச்செய்தார்.