50 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே காணப்படும் வெள்ளை நிற அபூர்வ பாம்பை சென்னை கும்மிடிப்பூண்டி அருகே வயல் வெளியில் பிடித்து உள்ளனர்.
 
கடும் விஷத்தன்மை கொண்ட, வெள்ளை நிற நாகப்பாம்பு திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே புதுவாயல் என்ற கிராமத்தில் வயல்வெளியில் பதுங்கி இருந்ததாக வனத்துறையினருக்கு மக்கள்  தெரிவித்தனர் 

உடனே விரைந்து வந்த வனத்துறையினர் அபூர்வ பாம்பான வெள்ளை நிற நாகப்பாம்பை பிடித்து  கிண்டியில் உள்ள சிறுவர் பூங்காவில் உள்ள பாம்பு பண்ணையில் விடப்பட்டது.