Asianet News TamilAsianet News Tamil

இந்த 8 மாவட்ட மக்கள்… ரொம்ப உஷாரா இருக்கணுமாம்.. மழை வெளுக்க போகுதாம்…!

8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Weather department announcement
Author
Chennai, First Published Oct 24, 2021, 4:10 PM IST

சென்னை: 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Weather department announcement

தமிழகத்தில் கடந்த பல வாரங்களாக பெரும்பாலான மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்குகிறது. தொடர் மழையால் தாழ்வான பகுதிகள்ல வெள்ளநீர் புகுந்ததோடு மக்களின் இயல்பு வாழ்க்கையும் கடுமையாக பாதிக்கப்பட்டது.

இந் நிலையில் இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளதாவது:

Weather department announcement

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் வேலூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, புதுக்கோட்டை, மதுரை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும்.

தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய பகுதிகளில் மிக பலத்த மழை பெய்யக்கூடும். இதேபோன்று, தூத்துக்குடி, விருதுநகர், விழுப்புரம், திருசசி. கடலூர், செங்கல்பட்டு, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

Weather department announcement

லட்சத்தீவு, அரபிக்கடல் பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios