சென்னை வேளச்சேரியில், 10 மாதம் சுமந்து பெற்ற குழந்தையை கொன்று விட்டு நாடகமாடிய சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேளச்சேரியில் உள்ள திரௌபதி அம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் வெங்கண்ணா-உமா தம்பதியினர். இவர்களுக்கு கடந்த இரண்டு மாதத்திற்கு முன் அழகிய ஆண் குழந்தை பிறந்தது. இதற்கு இடையே நேற்று முன்தினம் உறங்கும் போது பவர் கட் ஆனதால், வீட்டின் கதவை திறந்து வந்து தூங்கும்போது, வீட்டின் உள்ளே வந்து குழந்தையை யாரோ கடத்தி சென்றதாக கூறப்பட்டது.

இதை தொடர்ந்து போலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். இதை தொடர்ந்து ஒரு நைட்டி அணிந்த பெண் ஒருவர் குழந்தையை தூக்கி கொண்டு சென்றது சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. 

பின் யார் குழந்தையை தூக்கி சென்றார் என போலீஸ் விசாரணை நடத்தி வந்தனர். ஒரு கட்டத்தில் குழந்தையின் தாயாகிய உமாவே குழந்தையை கொன்று வேளச்சேரி ஏரியில், தூக்கி எரிந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து உமா போலீசாரிடம் தெரிவித்தபோது "பாலூட்டும் போது வலி ஏற்பட்டதால், ஆத்திரத்தில் குழந்தையை கொன்றதாக வாக்கு மூலம் கொடுத்துள்ளார்". 

இன்று அதிகாலை, வேளச்சேரி ஏரியில் குழந்தையின் உடலை மீட்டு எடுத்த போலீசார். குழந்தையின் தாய் உமாவை கைது செய்தனர்.

ஒரு அபிராமி இல்ல இது போல் பல அபிராமி இருக்காங்க...

பெற்ற தாயே, பச்சிளம் குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற சம்பவத்தால், அருகில் வசிப்பவர்கள் தங்களுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

அதில் ஒருவர் "இது மாதிரி ஒரு அபிராமி இல்ல நூறு அபிராமி இருக்காங்க... காசு பணம் எது வேண்டும் என்றாலும் எப்போது வேண்டும் என்றாலும் சம்பாதித்து கொள்ளலாம் ஆனால், குழந்தையை பெற்றெடுக்க முடியுமா? எத்தனையோ பேர் குழந்தையே இல்லாமல், தவித்து வருகிறார்கள்...இப்படிப்பட்ட ஒரு தாய் இருக்கவே கூடாது...ஒன்னு நீங்க தண்டனை கொடுங்க.. இல்ல எங்களிடம் விட்டு விடுங்க எங்க மனசு கேக்கல... எங்க கையாள துடப்பக்கட்டையால நாலு அடியாவது அடிக்கணும்...அவள் எல்லாம் உயிரோடவே இருக்கக்கூடாது என தங்களுடைய ஆதங்கத்தை கொட்டி வருகிறார்கள்.