சென்னை கிழக்கு தாம்பரம், வேளச்சேரி - தாம்பரம் பிரதான சாலையில் பிரபல தனியார் பெண்கள் மேல்நிலை பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை என 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். 

இந்த பள்ளியில் தொடக்கத்தில் இருந்து போர் மூலம் பள்ளியில் உள்ள டேங்கில் தண்ணீர் ஏற்றியும், வெளியில் இருந்து தண்ணீர் லாரிகள் மூலம் தண்ணீர் பெற்றும் உபயோகித்து வந்தனர். தற்போது ஏற்பட்டுள்ள கடுமையான வெயில் காரணமாக பெரும்பாலான இடங்களில் நிலத்தடி நீர் வற்றிப்போய் மிகவும் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் தினமும் அவர்களது அத்தியாவசிய தேவைக்கு கூட தண்ணீர்  கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தண்ணீர் பிரச்னை இந்த பள்ளியையும் விட்டுவைக்கவில்லை. பள்ளி வளாகத்தில் உள்ள போரிலும் சரியாக தண்ணீர் வருவதில்லை. வெளியில் இருந்து தண்ணீர் லாரிகள் மூலம் அவர்கள்  வாங்கும் தண்ணீரும் சரியாக கிடைப்பதில்லை. 

இதனால் பள்ளியில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. சில சமயங்களில் கிடைக்கும் தண்ணீர் லாரிகளின் தண்ணீரையும் அவர்கள் சேமித்து வைப்பதற்கு பள்ளியில் அதற்கு ஏற்ற தண்ணீர் தொட்டி இல்லை.

இதனால் பள்ளிக்கு வரும் மாணவிகள் அவர்களது அத்தியாவசிய தேவைக்கு தண்ணீர்  இல்லாமல் மிகவும் அவதிப்பட்டு வந்தனர்.இதனால் பள்ளியில் 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்புவரை படித்துவரும் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு நேற்று மற்றும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

இந்த கொடூர சம்பவத்தில் தலைமறைவாக இருந்து வரும் கருப்பண்ணனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் தேடுதல் வேட்டை நடத்தி கருப்பண்ணனை கைது செய்தனர்.