அட்ராசக்க..! 'காரை' அலேக்கா தட்டி சென்ற 'காளை'..!  

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் நேற்று நடந்த ஜல்லிக்கட்டு போட்டி கின்னஸ் சாதனை படைத்துள்ளது. நேற்று சுமார் ஒன்பது மணி நேரம் நடந்த இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 1353 காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. போட்டியின் முடிவில், 21 காளைகளை அடக்கிய திருச்சியை சேர்ந்த முருகானந்தம் சிறந்த வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதே போன்று சிறந்த காளையாக இராப்பூசலை சேர்ந்த முருகானந்தத்தின் காளையை தேர்ந்தெடுக்கப்பட்டு, இவருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் மற்ற சிறந்த வீரர்களுக்கு புல்லட் உள்ளிட்ட ஏராளமான பரிசுகள் கொடுக்கப்பட்டது. இது தவிர ஒரு சில சிறந்த வீரர்களுக்கு குத்துவிளக்கு, மிக்ஸி, சைக்கிள், உள்ளிட்ட பரிசு பொருட்களும் வழங்கப்பட்டது.

மிகவும் கோலாகலமாக நடைப்பெற்ற இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் காளைகளும் பங்கேற்றது. இவருடைய காளைகள் பத்து நிமிடங்களுக்கு மேலாக களத்தில் நின்று யாராலும் அடக்க முடியாத படி மிக சிறப்பாக செயல்பட்டது.

முதல்வர் மற்றும் துணை முதல்வரால் துவங்கி வைக்கப்பட்ட  விராலிமலை ஜல்லிக்கட்டு போட்டியை காண, ஏராளமான மக்கள் குவிந்தனர். பெருத்த ஆரவராதுடன் மிகவும் சிறப்பாக நடந்த இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த காளையாக இராப்பூசலை சேர்ந்த முருகானந்தத்தின் காளையை தேர்ந்தெடுக்கப்பட்டு, இவருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது. 

தற்போது இந்த காளையின் மதிப்பு 40 லட்சம் முதல் 50 லட்சம் வரை எகிறியுள்ளது. பரிசாக பெற்ற காருடன் காளையும், காளைக்கு உரிமையாளரான முருகானந்தமும் கொடுத்த சூப்பர் போஸ் தான் இது... இத்தகைய சிறந்த பரிசை பெற்ற காளை குறித்து பொதுமக்கள் தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் இதனை வீரத்திற்கு கிடைத்த பரிசு என அனைவரும் பாராட்டி வருகின்றனர்.