நெல்லை மாவட்டம், உவரி கடற்கரையில் விநாயகர் சிலைகள் கரைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.  இதற்காக கடற்கரையில் போலீசார், கடலோர காவல்படை போலீசார் உள்ளிட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

 

கடலில்  விநாயகர் சிலைகள் கரைக்கும் போது வடக்கன்குளத்தை சேர்ந்த சிறுவர்கள் உதயகுமார், உதய், கார்த்திக் ஆகியோரை கடல் அலை இழுத்து சென்றது. 3சிறுவர்களும் கடலில் உள்ள பாறை அருகில் சிக்கி தத்தளித்தனர்.

 

அப்போது விநாயகர் சிலை கரைப்பு நிகழ்ச்சிக்காக  கடற்கரை பகுதியில்பாதுகாப்பிற்கு நின்ற திருக்குறுங்குடி போலீஸ்காரர் சுடலைக்கண்ணு கடலில் குதித்து தத்தளித்துக் கொண்டிருந்த  3 சிறுவர்களையும் பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தார்.

 

துரிதமாக செயல்பட்டு 3 சிறுவர்களை மீட்ட போலீஸ்காரர் சுடலைக்கண்ணுக்கு மக்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.