ஆசிரியர் தேர்வு வாரியம் முக்கிய அறிவிப்பு..! முந்துங்கள்..! 

காலி பணியிடங்களுக்கு ஆசிரியர்களை நியமிக்க அரசு முடிவு செய்து  அதற்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது ஆசிரியர் தேர்வு வாரியம். இதில் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் மற்றும் ஏற்கனவே தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுத்துள்ளது.

அதன் படி, பட்டதாரி ஆசிரியர்கள் 116 பேர், இடைநிலை ஆசிரியர்கள் 12 பேர், முதுகலை ஆசிரியர்கள் 3 பேர், சிறப்பு ஆசிரியர்கள் 17 பேர் மற்றும் உதவி பேராசிரியர்கள் 4 பேர் என மொத்தம் 152 பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இதற்கு முன்னதாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர். பின்னர் அரசுடன் நடந்த பேச்சுவார்த்தைக்கு பின், போராட்டத்த்தை கைவிட்டனர் ஆசிரியர்கள். இந்நிலையில் தான், ஆசிரியர் தேர்வு வாரியம் காலி பணியிடங்களுனாக அறிவிப்பை வெளியிட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.