டூவீலர், கார்களுக்கு ஆண்டுக்கு ரூ.750 செலுத்தி இன்சூரன்ஸ் பெற்று இருக்கும் உரிமையாளர்கள் விபத்தில் இறந்தால், அவர்களுக்கு ரூ.15 லட்சம் வரை இழப்பீட்டைஅதிகரித்து இந்திய காப்பீடு ஒழங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கு முன் ரூ.750க்கு இன்சூரன்ஸ் செய்து விபத்து ஏற்பட்டு உயிரிழப்பைச் சந்தித்தால், அதிகபட்சமாக ரூ.2 லட்சம் மட்டுமே கிடைக்கும், அது ரூ.15 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஐஆர்டிஏவின் இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றம் ஒரு வழக்கில் பிறப்பித்த உத்தரவில், விபத்துக் காப்பீடு இழப்புத்தொகையை அதிகரித்து குறைந்தபட்சம் ரூ.15 லட்சமாக உயர்த்த உத்தரவிட்டு இருந்தது. இதன் மூலம் விபத்தில் உயிரிழந்தவர்கள், வாகன உரிமையாளர்கள், பாதிக்கப்பட்வர்களுக்கு போதுமான அளவி்ல் இருக்கும் எனத் தெரிவித்திருந்தது இதன் அடிப்படையில் இந்த உத்தரவை ஐஆர்டிஏஐ பிறப்பித்துள்ளது.

இதுதவிர இழப்பீட்டுத் தொகை அதிகமாகக் கிடைக்க வேண்டும் என்று வாகன உரிமையாளர்கள் விரும்பினால், அதற்கு ஏற்றார்போல் திட்டங்களைத் தேர்வு செய்து, காப்பீடு தொகையையும் கூடுதலாகச் செலுத்திக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.