வங்கக்கடலில் உருவாகியுள்ள கஜா புயல் தமிழகத்தில் நாளை (நவம்பர் 15) நண்பகலை தாண்டி கடலூர்- வேதாரண்யம் இடையே தரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மைய இயக்குநரும் நம்ம வெதர் மேன் ப்ரைட் ஜானும் கோடாங்கி அடித்து விட்டனர்.

வர்தா புயலால பட்ட வேதனை இன்னும் மறக்காத நெலமைல கஜா புயல் வர்ற சேதி கொஞ்சம் கலக்கலாத்தான் இருந்துச்சு. 

மணிக்கு 100 கி.மீ. வேகத்துல இந்த கஜா பயல் அடிக்கும்னு வயத்துல புளியக்கரைச்சுட்டு இருந்த சென்னைவாசிகளுககு ஒரு ஆறுதல் சேதி என்னன்னா இது சென்னைக்கு கிட்டத்தட்ட 540 கி.மீ. தள்ளி இருக்காம். அதனால சென்னைக்கு பெரிய பாதிதப்பெல்லாம் இல்லாம லேசா மழை பெய்ஞ்சு விட்ருமாம்.

போதும்டா சாமி. திரும்பவும் மூட்டையக் கட்டிட்டு போட்டுல போகணுமான்னு பயந்துட்டுருந்தவங்களுக்கெல்லாம் இப்ப ரொம்பவே நிம்மதியாகிப்போச்சு.